ஆகஸ்ட் 18 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
சிறுகதை
அறிவிப்பு
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : அதிக எடையும் பருமனும் - காரணங்கள்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

Junk Foodசென்ற வாரம் கலோரிகள் தேவையைவிட அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை கூடுவதாக எழுதி இருந்தேன். அமெரிக்காவில் மட்டும் இல்லை உலகளவில் உணவு வகைகளில் பல விதம் கிடைப்பதாலும் வேலைக்கு  ஏற்றவாறு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதாலும் நமக்கு பல  வாய்ப்புகள் கிடைக்கின்றன. கடைகளிலும் உலக வணிக தரத்தால் பலவகை உணவு பொருட்களை குவித்து வைத்திருக்கிறார்கள். முன்கூட்டியே பதனப்பட்ட உணவு, நல்ல உலகப்புகழ் பெற்ற நிருவனத்தால் முன்னாலேயே சமைக்க பட்ட உணவு என்றும், பலதரப்பட்ட குடிபானங்களும் கிடைக்கின்றன. இவற்றில் எத்தனை கொழுப்பு இருக்கிறது என்றோ சர்க்கரை சேர்க்க பட்டிருகிறது என்றோ யோசிப்பதில்லை. கொழுப்பு இல்லாத உணவு என்று சொன்னாலும் அதன் கலோரிகள் கொழுப்பு உள்ள உணவை விட சில சமயங்களில் அதிகமாக இருக்கிறது. இதனால் வாங்கும் முன் எந்த உணவாய் இருப்பினும் அதன் உட்பொருட்களையும் அவற்றின் கலோரிகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

கடைகளுக்குள் உள்ள போட்டியால் மிகப்பெரிய பர்கர், சண்ட்விச்சென்று சாப்பிடும் அளவும் அதிகரித்து விட்டது. இது அதிக கலோரிகளை தருவதாலும் உடல் அதனை எரிக்காததாலும் எடை கூடுகிறது.

அமெரிக்காவின் உணவு அறிவுரைகளையும் அதன் வரைமுறைகளையும் பின்பற்றி சாப்பிடும் அளவை கட்டுப்படுத்த வேண்டும். முன்பிருந்த ஒரு நாளைக்கு 5 கறிகாய்கள், கனிகள் வேண்டும் என்ற கட்டுபாடு இப்போது மாறி, புதிய அட்டவணை  நம் வயதுக்கும் எடைக்கும் வேலைகளுக்கும் ஏற்றமாதிரி நாமே நம் உணவு வகைகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது .

உபயோகமான கலோரிகள்:

நம் உடலை தினப்படி வேலைகளுக்கும், வளர்ச்சிக்கும் கலோரிகள் தேவை.உடல் பயிற்சி, நடப்பது, ஓடுவது போன்ற உடலின் சக்தியை செலவிடும் வேலைகள் கவனத்தில் கொள்வது மிக முக்கியம்.

இயக்க தசைகள் செய்யும் வேலைகள் நம் சக்தியை செலவழிக்க வல்லவை.

* உடலுழைப்பை நம்பியுள்ள வேலைகள் :  கட்டிட வேலை

* வீட்டு வேலைகள் :  சுத்தம் செய்வது, தோட்ட வேலை

* ஓய்வு நேர வேலைகள் :  நடப்பது, ஓடுவது, நீந்துவது, விளையாடுவது

தினந்தோறும் செய்யும் உடலுழைப்பு நம்மை இரத்த அழுத்தம், உடல் எடை காரணமாக வரும் நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து காப்பதோடு, நம் உடல் எடை ஒரு கட்டுபாட்டில் இருக்கவும் நாம் அழகாக இருக்கவும் உதவுகிறது.

ஒரு வாரத்தில் 4 அல்லது 5 முறை ஒரு சாதாரண வேகத்துடன் 20- 30 மணித்துளிகள் நடப்பது மிகவும் நன்மை பயக்கும்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் நல்ல தரமான செயல்களை செய்யவும், வேலையை எளிதாக்கவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் நாம் அன்றாடம் செய்யும் வேலைகள் அதிக கலோரிகளை உபயோகிப்பதில்லை. அருகில் உள்ள கடைக்கு கூட வாகனங்களில் செல்வதால் நடப்பதோ சைக்கிளை ஓட்டி செல்வதோ இல்லை. சாதாரணமாக உடல் தசைகளை உப்யோகித்து செயல்படவேண்டும் என்றாலே விளையாட்டு அல்லது உடற்பயிற்சி என்று மக்கள் நினைப்பதால் நேரம் இல்லை என்று தள்ளி போட்டு கொண்டிருக்கிறார்கள். இரண்டுமுறை 10 மணித்துளிகள் நடந்தாலோ அல்லது இரண்டு முறை மாடி ஏறி இறங்கினாலோ கூட அது உடல் இயக்கம்தான். வீடுவேலைகள் தோட்ட வேலைகள் செய்வது கூட நல்ல முறையில் நம் கொழுப்பை எரிக்க உதவும் உடல் இயக்கங்கள் ஆகும்.

சுற்றுப்புரத்தின் தாக்கம்: ஒரு ஊரில் நடப்பதற்கான பாதுகாப்பான பாதைகள் இல்லை எனில் மக்கள் நடப்பதை விட்டு விட்டு வாகனங்களில் செல்ல முனைவர். இரண்டு பேர் வேலை பார்க்க தேவையான சமூகத்தில், வீட்டு அருகே நல்ல இயற்கை சத்துள்ள உணவு பொருட்கல் விற்கும் கடை இல்லாமல் ஒரு அவசர உணவு விடுதி இருந்தால், அலுத்து களைத்து வரும் போது வீட்டின் அருகே உள்ள இடத்தில் உள்ள அதிக கலோரிகள் உள்ள உணவானாலும் அதை உட்கொள்பவர்கள் அதிகம்.

உடற்பயிற்சியகத்திற்கு சென்று பயிற்சி செய்ய விரும்புவர் வசிக்கும் நகரில் பயிற்சியகமே இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? அது போல அலுவலக சாப்பாட்டு அரங்கில் நல்ல இயற்கை சத்துள்ள உணவை தருவது, சோடா போன்றவை அல்லாமல் தண்ணீர் பருகதருவது போன்றவை நடக்குமாயின், கலோரிகள் உட்கொள்வது குறையும்.

இடம் /   உடல் எடை குறைக்கவும் உடல் நலம் பேணவும் சில அறிவுறைகள்

வீடு 

* தொலைகாட்சி பார்ப்பதையும், கூடவே உருளைக்கிழங்கு வறுவல் போன்ற அதிக   கலோரிகள் நிறைந்த நொறுக்கு தீனி உண்பதை தவிர்த்தல்

 * உடல் உழைப்பை தரும் தோட்டவேலை, வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுதல்

பள்ளிகள்

 * நல்ல சத்துள்ள  உணவுவகைகள் கிடைக்க செய்தல்

 * அதிக சர்க்கரை உள்ள பானங்களை தவிர்த்தல்* விளையாட்டு, உடற்பயிற்சி அதிகரித்தல்

அலுவலகம் 

* உடல் இயக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் படிகளில் ஏறி செல்லுதல், தொலை பேசியில் அழைக்காமல் சக அலுவலகர் இடத்திற்கு சென்று பேசுதல்

சமூகம் 

* தினமும் 5 இயற்கை காய்கறிகளையும் கனிகளையும் உண்ண சொல்லித்தருதல்

* அருகில் உள்ள கடைகளில் நல்ல சத்துள்ள உணவுப்பொருட்களை விற்க ஏற்பாடு செய்தல்

* அவசர உணவகத்தில் சாப்பிடும் அளவை குறைத்தல்

மரபணுக்கள்: ஒரு மனிதன் அதிக எடை உள்ளவனாக இருப்பதற்கு மரபணுக்களும் ஒருவகையில் காரணமாகிறது. ஆனால் அவை மட்டுமே காரனம் இல்லை. அதை விட சில புரதங்கள் உருவாவதற்கும், சரியான முறையில் செரிமானம் இல்லாமல் இருப்பதற்கும், குறைவான கலோரிகள் எரிக்கும் சக்தி பெற்றிருப்பதற்கும் மரபணுக்கள் மறைமுக காரணம் ஆகலாம்..


அதிக எடையும் அதனால் வரும் உடல் நல குறைபாடுகளும்:

* இரத்த அழுத்தம்

* அதிக கொழுப்பும் அதனால் வரும் நோய்களும்

* நீரிழிவு இரண்டாம் வகை

* இதய நோய்

* பக்க வாதம்

* கல்லீரல் நோய்

* ஆஸ்டியோஅர்த்ரைடிஸ்

* சுவாச நோய்கள்

* மார்பகம், குடல்வால் புற்றுநோய்

இதை சேர்ந்த பல விஷயங்களுக்கு  Clinical Guidelines on the Identification, Evaluation, and Treatment of Overweight and Obesity in Adults. பொருளாதரத்தையும் மற்றும் ஒரு மனிதனின் மன நலத்தையும் இது எப்படி பாதிக்கிறது என்பதையும் மாற்றும் சில வழிகளையும் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |