ஆகஸ்ட் 18 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
சிறுகதை
அறிவிப்பு
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : மந்திரங்களைப் மொழிபெயர்த்துச் சொல்லலாமா ?
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |
"சக்தி இருக்கிறது என்று பொடி செய்து பொட்டலம் கட்டிப் போட்டால் செடி முளைக்குமா ?"

மந்திரங்களைப் புரிந்து  கொண்டு சொல்ல முடியாதவர்கள் அதைப் புரியக்கூடிய வகையில் மொழிபெயர்த்துச் சொல்லலாமா ? அப்போது அதற்குப் பலன் கிடைக்குமா ?

மந்திரங்களும், பீஜமந்திரங்களும் அவற்றுக்குரிய தெய்வத்தை நம்மிடம் இழுக்கக்கூடியவை. இவை வெறும் வார்த்தைகளோ, வெறும் ஒலிவடிவமோ அல்ல. இவற்றுக்குப் பின்னால் தனியாக சக்தி இருக்கிறது. அதை நாம் உணர வேண்டுமானால், அந்த வார்த்தை வடிவத்தை- ஒலி வடிவத்தை அப்படியே வைத்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும்.

பெரிய மரத்தை உருவாக்கக்கூடிய சக்தி சிறு விதையில் இருக்கிறது. அதை அப்படியே போட்டால்தான் செடி முளைத்து மரமாகும். அதன் சக்தி இருக்கிறது என்று பொடி செய்து பொட்டலம் கட்டிப் போட்டால் செடி முளைக்குமா ? அதே போல மந்திரங்களை அப்படியே பயன்படுத்தினால் அதற்கு உரிய பலன் கிடைக்கும். அந்த மந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள் முதலில் அந்த்த் தகுதியைப் பெற சாதனை செய்து முயல வேண்டும். அப்படிப் பக்குவப்படாமல் சும்மா மந்திரத்தைச் சொல்லிப் பயன் இல்லை. விதையை வெறும் மண்ணிலோ கல்லிலோ போட்டால் முளைக்குமா ? மண்ணைக் கொத்தி, உரம்போட்டுப் பக்குவப்படுத்தி நீரூற்றினால்தான் அது விதையை ஏற்கத் தயாராகும். அப்புறம் விதையைப் போட்டால்தான் அதற்குப் பலன் கிடைக்கும்.

அதேபோல இந்த மந்திரங்களைச் சரியாக உச்சரிக்கவும், அதற்கேற்றபடி மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் நாம் சாதனைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் சிரமப்பட்டு முயன்றால்தான் பலன் கிடைக்கும்.

- சுவாமி வீரேசுவரனந்தா (Paths to God Realisation என்ற கட்டுரையிலிருந்து)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |