ஆகஸ்ட் 19 2004
தராசு
பருந்துப் பார்வை
மேட்ச் பிக்சிங்
பேட்டி
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வானவில்
பெண்ணோவியம்
வேர்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
ஹாலிவுட் படங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பேட்டி : புஷ்பா தங்கதுரையுடன் ஒரு உரையாடல்
  - கணேஷ் சந்திரா
  | Printable version |

  இலக்கிய படைப்பாக இருந்தாலும் சரி, பாக்கெட் நாவலாக இருந்தாலும் சரி. அவை இரண்டுமே மறைந்து போகக் கூடியவைதான்!

  வேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை ஆனது எப்படி?

  சிறைக்கதைகள் போன்ற உண்மைக் கதைகள் எழுதும் போது. என் சொந்தப் பெயரை விட்டு மாற நினைத்தேன். ஒரு பெண்ணின் பெயரை எடுத்துக் கொண்டேன். புஷ்பாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல் தங்கதுரைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அபிப்பிராயத்தில் புனைப் பெயர் என்பது Brand Name! இந்த Brand Name எனக்கு 15 ஆண்டுகளாக கிடைக்காத Publicity -ஐ ஆறே வாரங்களில் உண்டாக்கிக் கொடுத்தது.

  திருவரங்கன் உலா எழுதிய கரங்கள் எப்படி சிவப்பு விளக்குக் கதைகள் எழுதின?

  இரண்டும் ஒரே கைகள்தான். அதில் தவறு ஏதும் இல்லை.  திருவரங்கன் உலா வந்த காலத்திலேயே "என் பெயர் கமலா" வந்தது. ஒரு பெரிய பெண்கள் அமைப்பில் பேசினேன். உலா படித்தவர்களையும், என் பெயர் கமலா படித்தவர்களையும் கை து¡க்க சொன்னேன். High majority for கமலா!  உலாவுக்கு Small percentage. நாம் ஒவ்வொருவரும் பல மனங்கள் படைத்தவர்கள்! உள்ளே இருக்கிறோம்! வெளியில் காண்பிப்பதில்லை.

  தமிழில் ·போர்னோ எழுத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற 'பெருமை' உங்கள் உண்மையான எழுத்துத் திறனை மறைத்து விட்டது பற்றி வருத்தம் உண்டா?

  சக்தி வை. கோவிந்தன் என்பவரைத் தெரியுமா? 1940 களில் 'சக்தி' என்ற அருமையான பத்திரிகை நடத்தினார். வெகு மலிவாகப் புத்தகங்களை பிரசுரித்தார்.  'லக்ஷ்மி' என்ற எழுத்தாளரைத் தெரியும் என்று நினைக்கிறேன். ஏராள நாவல்கள் (குடும்பக் கதை) எழுதியவர். (டாக்டா திருபுரசுந்தரி இயற்பெயர்)

  வை. கோவிந்தன் லக்ஷ்மியை பார்க்கும் போது சொல்வார்.

  "நீங்கள் காதல் கதை எழுதுகிறீர்கள்! அதனால் நான் உங்கள் நாவல்களைப் பிரசுரிக்க மாட்டேன்."

  60 வருடங்களுக்கு முன் 'காதல்' என்பது PORNO.  வீடுகளில் 'விகடன்' வாசிக்கக் கூடாது என்பார்கள். காரணம் அதில் காதல் கதை வருவதால். PORNO வின் விளக்கம் ஒவ்வொரு காலத்துக்கும் மாறி வரும் அவ்வளவுதான். என் எழுத்துத் திறனை எதுவும் மறைக்கவில்லை. இரண்டு வித எழுத்திலும் இன்னும் நான் பிரகாசிப்பதாக நினைக்கிறேன்.

  ஒரு விஷயம் திரு. பி.எஸ். ராமையா துவக்கிய "மணிக்கொடி"யில் நான் எழுதியிருக்கிறேன். பிரபலமான ஒரு தமிழ் பேராசிரியர் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாற்றில்" என் எழுத்துத் திறனும் விசேஷமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

  நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

  குடும்பச் சூழ்நிலை காரணமாக செய்து கொள்ளவில்லை.


  உங்கள் அறிவியல் ஆர்வம் பற்றி?  அறிவியல் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளீர்களாமே?

  அறிவியல் கட்டுரை, கதை, நாவல் நிறைய எழுதி இருக்கிறேன். டைடானிக், கனிஷ்கா விமானம் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன்.

  எழுத்தில் இன்னும் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

  சாதிக்க நினைப்பது எதுவும் இல்லை.

  இலக்கிய படைப்புகளில் இருக்கும் திருப்தி பாக்கெட் நாவல்கள் எழுதும் போது கிடைத்ததா?

  இலக்கிய படைப்பாக இருந்தாலும் சரி, பாக்கெட் நாவலாக இருந்தாலும் சரி. அவை இரண்டுமே மறைந்து போகக் கூடியவைதான்!  சென்ற நு¡ற்றாண்டின் நாவல் இப்போது எதுவும் நிலைத்து நிற்கவில்லை.  ஸோஷியல் கண்டிஷன் மாற மாற எழுத்தும் மாறி மாறி வரும்! ஒரே வித எழுத்து எப்போதும் நீடிக்க முடியாது. நீடித்தால் சமுகம் மாறவே இல்லை என்று அர்த்தம். சமுகம் மாறிக் கொண்டே வரும்போது எப்போதோ எழுதப்பட்டது நிலைத்து நிற்காது.  தி. ஜானகிராமன் நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அவையே எனக்குப் பழமையாக தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒரு காலத்தில் இவற்றை விரும்பி படித்தேன். நோபல் பரிசு பெற்ற நாவல்கள் அடுத்த சில வருடங்களில் மறந்து விடுகின்றன. இப்போது டிக்கன்ஸ் மறந்து விட்டது. ஷேக்ஸ்பியர் மறந்து விட்டது. எழுத்து எந்த காலத்திலும் நிலைத்திருக்கும் என்பது சென்ற நு¡ற்றாண்டின் கருத்து.

  இணையத்தில் வளர்ந்து வரும் தமிழ் பற்றி தங்களின் கருத்து என்ன?

  இணையத்திற்கு தாமதமாக வந்த நாம் நம்மை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறோம். போகப் போகத்தான் தெரியும்.

  தாங்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான தங்களின் அனுபவம் ஏதேனும் உண்டா?

  நாளையிலிருந்து நாடு மாறப் போகிறது என்று 1947 ஆகஸ்டு 15-ந் தேதி கொடி ஏற்றிய போது கனவு கண்டேன்.

  ஆனால் கிட்டத்தட்ட 40 வருடங்கள் எந்த மாற்றமும் இல்லை. உலக நாடுகள், அதுவும் ஆசிய நாடுகள் பிரமாத முன்னேற்றத்தைப் பார்த்து நாமும் இப்போது முண்டி அடித்துக் கொண்டு ஓடுகிறோம். Very very late.
   
  1950 லேயே மாற்றம் எதுவும் வராததை திரு. என்.எஸ். கிருஷ்ணன், மதுரம் தம்பதியர்  "ஓ! 1950-60 நாடகம்" என்ற பாட்டு பாடினார்கள். 60-ல் தமிழ்நாடு கொழிக்கப் போவதாகப் பாடினார்கள்.  கூவத்தில் நல்ல நீர் ஓடப் போவதாகப் பாடினார்கள். அவர்கள் கனவுகளில் தமிழ்ச் சமுதாயமே பங்கு கொண்டது! ஆனால் கிடைத்த பலன் பூஜ்யம்.

  தமிழோவியம் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

  நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிச் சுவையோடு பிறந்திருக்கிறோம். நமக்கு படிப்பது ஒரு சுவையாக அமைந்துள்ளது. வீட்டுக்குள்ளே பிறருக்கு தொந்தரவு கொடுக்கலாம் செய்யும் செயல்,  நிறையப் படிப்போம்!  மகிழ்ச்சி அடைவோம், படிப்பிலும் கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ஆசிரியர் பிடிக்கும், அது அவரவரது விருப்பம். அவரவர்க்குத் தனி ருசி. இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று சண்டை இட வேண்டாம். எல்லோருமே அவரவர் விதத்தில் உயர்த்தி தான் என்று எடுத்துக் கொள்வோம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |