ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ப்ளூட்டோ கிரகம் இல்லை - ஜோதிடத்திற்கு என்ன பாதிப்பு ?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அதை கிரகம் இல்லையென்று கூறுவதனால் அதற்கும், மனிதர்களுக்கும் சம்மந்தமில்லையென்று கூறிவிட முடியுமா?

சில நாட்களுக்கு முன்பு  "ப்ளூட்டோ" ஒரு கிரகம் இல்லை என சில ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதுவும் ஓட்டெடுப்பு முறையில். அது கிரகம்தான் எனக் கூறிய
ஆய்வாளர்களும் உண்டு. ஆனால் அவர்கள் வாக்குகள் எடுபடவில்லை. சரி! இது கிரகம் இல்லையென்று முடிவு செய்து விட்டார்கள். அப்படியென்றால் ஜோதிடத்தில் இந்த கிரகத்தின் நிலையென்ன? 

இந்திய ஜோதிடத்தில் ப்ளூட்டோவிற்கு இடமில்லை; நவநாயகர்கள் என்றழக்கப்படும் ஒன்பது கிரகங்களில் ப்ளூட்டோ இடம் பெறவில்லை.  இடம் பெற்றுள்ள கிரகங்கள்

1. சூரியன்

2. சந்திரன்

3. செவ்வாய்

4. புதன்

5. குரு

6 சுக்கிரன்

7. சனி

8. ராகு

9. கேது

இவைகள்தான். ஆகவே ப்ளுட்டோவை கிரகம் இல்லை என்று நிராகரித்ததினால்
இந்திய ஜோதிடத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 

மேலை நாட்டு ஜோதிடர்கள்தான் கவலைப்பட வேண்டுமா ? அவர்களும் கவலைப்படத்தேவை இல்லை. அதை கிரகம் இல்லையென்று கூறுவதனால்  அதற்கும், மனிதர்களுக்கும் சம்மந்தமில்லையென்று கூறிவிட முடியுமா?  Pluto does not have any effect  on human beings - என்க்  கூறிவிட முடியுமா? முடியாது.

ப்ளூட்டோவின் தாக்கம் மனித உயிர்களின் மீது இருக்கத்தான் செய்யும். ஆகவே இந்த ஓட்டெடுப்பைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது வழக்கம்போல் மேலை நாட்டு முறையைப் பின்பற்றுவர்கள் தங்கள் பணியினைத் தொடர்ந்து செய்து வரட்டும்.

ஆக ஜோதிடத்திற்கு இதனால் ஒரு தாக்கமும் இல்லை.

oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |