ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : மரணம்
- சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அழையாவிருந்தாளி
வந்தாலும்
யாரும் வரவேற்பதில்லை
ஆனாலும் வருவாய்!

கதவைத்தட்டி வரும்
கண்ணியமெல்லாம்
உனக்கில்லை.

அழுகை காண்பதும்
ஒப்பாரி கேட்பதும்
உனது
ஒப்பில்லாபொழுதுபோக்கு.

அழிப்பதையே
படைப்பாய் கொண்ட
வக்கிர படைப்பாளி

உன்னை
விரும்பியவர்களை கூட
பூமியில்
விட்டுவைப்பதில்லை!

எங்கிருந்து வந்தாய்
எவருக்கும்தெரியாது
எங்குசென்று முடிவாய்..!

உன்
தலையெழுத்து
தயாராகிவிட்டது.

உன்னிடம்
தோற்று தோற்றே
உன்னை
வீழ்த்தும் சூத்திரம்
கண்டுபிடித்திருக்கிறோம்
அதில்
ஒரு எழுத்தும்
ஒரு எண்ணுமே
விடுபட்டிருக்கிறது,
ஏதோ ஒரு
சகோதரனோ,
சகோதரியோ-அதை
கண்டெடுத்துவிடுவார்கள்.

அப்போது
உன் வாழ்வும்
கதையாகிப்போகும்
எங்கள் கனவெல்லாம்
நிஜமாகிப்போகும்.

உன் இறப்பிற்கு முன்
ஒரே ஒரு வேண்டுகொள்
இரக்கமற்றவர்களையெல்லாம்
எடுத்துச்சென்றுவிடு!

கோபமின்றி
கேட்டதற்கு நன்றி!!

oooOooo
சிலம்பூர் யுகா, துபாய் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |