ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜோதிட விளக்கங்கள் : தசாசந்தி
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சென்ற வாரத்தில் ஏக திசை என்றால் என்னவென்றும், அதைப்பற்றிய விளக்கங்களும் எழுதியிருந்தோம்.  இந்த வாரத்தில் தசாசந்தி என்றால் என்னவென்றும் அதிப்பற்றிய நமது அனுபவங்களையும் கீழே கூறப்போகின்றோம்.

திருமணப் பொருத்தத்தின் போது ஆண்,பெண் ஆகிய இருவருக்கும் தசா சந்தி இருக்கிறதா? எனப் பார்ப்பார்கள்.  தசப் பொருத்தம் என்கிற பத்துப் பொருத்தங்ளைத் தவிர இந்த தசா, சந்தியைப் பார்ப்பார்கள்.  அதுவும் கேரளா மற்றும் தென் தமிழ் நாடுகளில் இந்த தசாசந்தி பார்ப்பது மிகப் பிரசித்தம்.  தசா சந்தி என்றால் என்ன ? ஆண், பெண் இருவருக்கும் 11மாத வித்தியாசத்தில் ஒருதசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்குமேயானால் அதற்குப் பெயர் தசா சந்தி.

உதாரணமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்போது நடந்து வருகிறது. இப்போது ஆணுக்கு சனி தசை முடிந்து புதன் சசை ஆரம்பமாகிறது எனக் கொள்ளுங்கள். பெண்ணுக்கும் இன்னும் 11 மாதத்திற்குள் வேறொறுதசை ஆரம்பமாகிறது எனக் கொள்ளுங்கள்.  உதாரணமாக கேது தசை முடிந்து சுக்கிர தசை ஆரம்பமாகிறது எனக் கொள்ளுங்கள்.  இதுதான் தசா சந்தி.

சரி! இந்த தசா சந்தி என்ன செய்யும்?  தசா சந்தியுள்ள இருவர் ஜாதகத்தையும் இணத்தால் இருவருக்கும் கெடுதல் ஏற்படும் என்று ஒரு நம்பிக்கை. இது ஒரு மூட நம்பிக்கைதான். உண்மையில் அப்படி நடப்பது இல்லை. ஒரு கிரகத்தின் தசையானது அந்த கிரகம் ஜாதகத்தில் எங்குஇருக்கிறது? லக்கினத்திற்கு அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் என்ன? அது எந்த நட்சத்திரத்தின் காலில் இருக்கிறது ? என்றெல்லாம் பார்த்தால்தான் நல்லது செய்யுமா? அல்லது கெடுதல் செய்யுமா? எனக் கூறமுடியும். அது இல்லாது இருவருக்கும் கெடுதல் ஏற்படும் என்று கண்மூடித்தனமாக நிராகரிப்பது மிகத் தவறான வழிமுறையாகும். 

இவ்வாறு தவறான அணுகு முறையினால் பல ஜாதகங்களில் நல்ல பொருத்தங்கள் இருந்தும் அவைகள் கைவிடப்பட்டுள்ளன.
 
நமது வாசகர்கள் இவற்றையல்லாம் தெரிந்து கொள்ளுதல் அவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.


ஜோதிடரத்னா அவர்கள் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகவே சென்னையில் அவரை நேரில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

chandru_soma@yahoo.com

 

| |
oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |