ஆகஸ்ட் 25 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கேள்விக்கென்ன பதில் ?
திரைவிமர்சனம்
அடடே !!
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : அரசு நிறுவனங்களின் மெத்தனப் போக்கு
- KGN [feedback@tamiloviam.com]
| Printable version | URL |
"பாதிக்கப்பட்ட பாதிக்கப்ட்டப்போகும் பொதுஜனமாகிய நாம் தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் போலிருக்கிறது."

நம் நாட்டில் அரசு - அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் ஏகப்பட்ட சங்கங்களும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் உள்ளார்கள். ஆனால் இத்தகைய அரசு - அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க யார் இருக்கிறார்கள்?

இக்கேள்வி என்மனதில் தோன்ற காரணமாயிருந்த சம்பவத்தை தமிழோவியம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சமீபத்தில் கோடம்பாக்கத்திற்கு குடிபெயர்ந்த நான் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியிலிருந்த என் கணக்கை கோடம்பாக்கம் கிளைக்கு மாற்ற மனு கொடுத்திருந்தேன். கொடுத்த மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்த வங்கியின் கோடம்பாக்கம் கிளைக்குச் சென்ற என்னிடம் "வங்கிக் கணக்கை மாற்றுவதற்கான உரிய ஆவணங்கள் இன்னமும் வந்து சேரவில்லை - எனவே சில நாட்கள் கழித்து வாருங்கள்" என்று வங்கி ஊழியர் கூறினார். சரி என்று சொல்லிவிட்டு கிளம்பிய நான் கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து, எப்படியும் என் ஆவணங்கள் இந்நேரம் வந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வங்கிக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த வங்கி ஊழியர் முன்பு கூறிய அதே பதிலை திரும்பவும் கூறினார்.

எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்த நிலையில் வங்கி மேலாளரைச் சந்தித்து நான் புகார் செய்ய, அப்புகாரின் எதிரொலியாக என் ஆவணங்களுக்கு என்ன ஆனாது என்பதைக் கண்டறியுமாறு மேலாளர் உத்திரவிட்டார். இக்கட்டளையின் விளைவு - வெகு நாட்களுக்கு முன்பாகவே என்னுடைய ஆவணம் வங்கியின் கோடம்பாக்கம் கிளைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையால் வந்த தபாலைக் கூட யாரும் பிரிந்து படிக்கவில்லை. சரி எப்படியோ ஒரு வழியாக கணக்கை ஒரு கிளையிலிருந்து மறுகிளைக்கு மாற்றியாகிவிட்டது என்று மகிழ்ந்துகொண்டே நான் பாஸ்புக்கில் கடந்த இரு மாதங்களுக்கான பற்று வரவை பதிவு செய்யுமாறு கூறினேன். நடப்பு மாதத்திற்கு மட்டும் பற்று வரவை பதிவு செய்த அந்த ஊழியர், கடந்த மாதத்திற்கான எண்ட்ரி போடவேண்டும் என்றால் இரண்டு ஸீட் தள்ளியுள்ள கம்ப்யூட்டருக்குச் சென்று தான் போட முடியும். அதனால் நீங்கள் இன்னொரு நாள் வாருங்கள் என்றார். இத்தனைக்கும் அப்போது வங்கியில் வாடிக்கையாளர்கள் நிறைய பேரும் இல்லை. இரண்டு ஸீட் தள்ளிப் போய் ஒரு எண்ட்ரி போட இவருக்கு அச்சமயம் வசதிப்படாதாம் - இதற்காக இன்னொரு நாள் சாவகாசமாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் இவரைப் போன்ற ஊழியர்களை என்னவென்று சொல்வது? கம்ப்யூட்டர் முன்னால் போவதென்றாலே இவரைப் போன்ற பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாவக்காயாய் கசக்கிறது.

முன்பெல்லாம் அந்தந்த நாள் வங்கிக் கணக்குகளை ஒவ்வொருவரும் காகிதங்களை வைத்துச் சரிபார்க்க வேண்டும் என்ற நிலையிருந்தது. அதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்காக செயல்படும் நேரங்கள் 9 முதல் 3 வரை என்று அமைத்திருந்தார்கள். ஆனால் இன்றோ கம்ப்யூட்டர் மூலமாக 3 மணிக்கு மூடும் வங்கிக் கணக்குகளை 3.30க்குள் சரிபார்த்து விடுகிறார்கள். விளைவு அதிகபட்சமாக 4 மணிக்கு மேல் ஒருவரும் வங்கியில் இருப்பதில்லை. ஆனால் வேலை நேரம் மட்டும் 9-5 என்று கூறிக்கொள்கிறார்கள். கம்ப்யூட்டர் வசதியுள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்காக செயல்படும் நேரத்தை 9-4 என்று மாற்ற ஒருவருக்கும் மனம் வரவில்லை. 

மேலும் கம்ப்யூட்டரை வைத்து இவர்கள் செய்யும் வேலைக்காக மாதம் 1000 ரூபாய் அலவன்ஸ் வீதம் கிட்டத்தட்ட 48 மாதங்களுக்கான அரியர்ஸ் தொகையை வேறு கூசாமல் சிலநாட்களுக்கு முன்புதான் வாங்கியிருக்கிறார்கள் (இதையும் அங்கே பணியுரியும் ஒரு ஊழியர் பெருமையாக மற்றொருவரிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்). உண்மையில் கம்ப்யூட்டர் இவர்கள் வீட்டுக்கு 4 மணிக்கே கிளம்புவதற்குத்தான் பயன்படுகிறதே தவிர கம்ப்யூட்டரை வைத்து வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்ய பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்வருவதே இல்லை.

வங்கிகள் என்றல்லாது பெரும்பான்மையான அரசுத்துறை நிறுவனங்கன் நிலை இதுதான். ஊழியர்களின் சேவைக்காக காத்திருக்கும் பொதுமக்களை மட்டமாக நடத்துவது என்பதும் தேவையே இல்லாமல் எல்லாக் காரியங்களுக்கும் நாட்களைக் கடத்துவது என்பதும் இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பானமையான ஊழியர்களின் தினசரி வாடிக்கையாகிவிட்டது. சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, போனஸ் வேண்டும் என்றெல்லாம் கேட்டு அடிக்கடி போராட்டம் நடத்தும் இவர்களாகட்டும், இவர்களுக்கு பரிந்து கொண்டு வரும் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளாகட்டும் - யாராவது பொதுமக்களுக்கு இவர்களது மெத்தன போக்கால் ஏற்படும் மனஉளைச்சலுக்கு பதில் கூற முன்வருவார்களா? பாதிக்கப்பட்ட பாதிக்கப்ட்டப்போகும் பொதுஜனமாகிய நாம் தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் போலிருக்கிறது.


 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |