ஆகஸ்ட் 25 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கேள்விக்கென்ன பதில் ?
திரைவிமர்சனம்
அடடே !!
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : பசித்து புசிப்போம்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் விடமாகும் என்பதை உணர்ந்து பசித்து புசிப்போம், உடல் நலம் காப்போம்"

"The first wealth is health" - Ralph Waldo Emerson

உடலை இளைக்க பலவகை புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கார்போஹயிடிரேட் இல்லாத அட்கின் கொண்டுவந்த ஒரு திட்டம், அதிக புரதமும் ஒரு நாளைக்கு தேவையாக குறைவான கார்போஹைடிரேட் கொண்ட புள்ளி விவர திட்டம் (weight watchers) என்ற பலவகை திட்டங்கள் இருந்தாலும் நாம் மனத்தள வில் தயாராக இல்லாத போது  பின்பற்றுவது மிகவும் கடினம்.

சிலருக்கு உணவுப்பொருட்களை வீணாக்கிவிட கூடாதே என்று கொஞ்சம் தானே என்று போட்டுக்கொண்டு அது அ  ளவுக்கு மீறிய கொழுப்பாய் சில மாதங்கள் கழித்து இடுப்பில் சதையாய் வரும்போதுதான் புரியும். இன்னும் சிலருக்கு உணவு ஒருவித மகிழ்ச்சியை தரும் வடிகாலாய் இருக்கிறது. கோபமாய் இருக்கும் போதும், தொலைகாட்சி பார்க்கும் போது அளவு தெரியாமல் உருளைக்கிழங்கு வறுவல் போன்ற கொழுப்பு நிறைந்த திண்பண்டங்களை தின்பதும் எடை கூட காரணமாகிறது.

அற்றால் அளவறிந்துண்க அது உடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு என்பது போல பசியில்லாமல் சாதாரணமாக உண்பவரா நீங்கள், ஆம் என்றால் உங்களிடம் சாப்பிட ஒருவகை ஈர்ப்பு இருக்கிறது. இதன் அடிப்படை காரணம் என்னவென்று அறிய வேண்டும். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ யாருடனாவது உங்களுக்கு மனத்தாங்கல் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்.

அலுவலகத்தில் நிறைய வேலை பளு இருக்கிறதா, அல்லது நீங்கள் மட்டுமே நிறைய வேலைசெய்ய உங்கள் சக அலுவலர் தன் பணியை உங்களிடம் தருகிறாரா என்று உங்களை கேட்டு பாருங்கள்.

10 இல் 9 பேர் தங்கள் பசிக்காக மட்டும் இல்லாமல், தங்கள் மன அழுத்தத்தை போக்க உணவை நாடுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இது போன்ற சமயங்களில் உண்ணும் உணவும் அதிக கொழுப்பு உள்ள வறுவல், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்புகள் என்று இருப்பதால் எடை கூடுவதோடு உடலுக்கு கெடுதலும் விளைவிக்கிறது. அதிக எதிர்மறை சிந்தனை உள்ள மனிதர்களோடு அதிகம் பழகுபவர் என்றால், அவர்கள் உங்கள் சிந்தனையை பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மனதிற்கு பிடித்த ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதிக மன அழுத்தம், சினம் இவற்றுக்கு வடிகாலாக உணவை தேடுவது அப்போதைய அழுத்தத்தை குறைப்பதாக தோன்றும். ஆனால் அது உங்கள் உருவத்தை, மனத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல் என்பதும் ஒரு இயந்திரமே. அதை அதிகமாக   வேலை செய்ய செய்வதாலும், தேவையில்லா கொழுப்பு போன்றவற்றை சேர்ப்பதாலும் பழுதாகிவிடும் என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல சொல்லி நிலை நாட்டுங்கள். இதுவே நாளடைவில் உணவை வடிகாலாக தேடுவதை குறைத்து விடும்.

உடற்பயிற்சி என்பதும் அதிக உடல் இயக்கங்களும் ஒருவித வேலை என்று கொண்ட கருத்தை முதலில் மாற்றுங்கள். உடற்பயிற்சி கூட ஒருவித இன்பம் தரும் செயலாக எண்ண முடியும்.

முன்பைவிட இப்போது பல   ஆய்வுக்குறிப்புகள் உடல் இயக்கத்தின் (Physical activity) பலனை சொல்வதாக இருக்கின்றன. எல்லா வயதிலும் உடலின் பல பாகங்களை இயக்குவதன் மூலம் அ   வை செயலிழக்காமல் இருக்கவும், தசைகளை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றன.

Weight Watcherசீரான உடல் இயக்கம் இதயத்தின் தசைகளை  வலுவாக்குகிறது.இது இதய நோய் வருவதை தடுப்பதாகவும் தெரிகிறது. எல்லா வயதினரும் இந்த இயக்கத்தின் மூலம் பயன் பெற முடியும். இது உடலை வருத்தி, கடினமாக செய்ய வேண்டியது இல்லை. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து நடக்கும் போது சில விஷயங்களை மனம் விட்டு தொலைகாட்சி போன்ற எந்த வித இடையூறுகளும் இல்லாமல் பேசவும் முடியும்.

எங்கே போவதானாலும் கார், வீட்டில் துணிகள் துவைக்க இயந்திரம் என்று வசதிகள் பெருகிவிட, கடின உழைப்புக்கு பதில் சில உடற்பயிற்சிகள் செய்வது அவசியமாகும்.

மிக  சாதாரண உடற்பயிற்சியிலிருந்து சற்றே இடைபட்ட நிலையில் செய்யப்படும் பயிற்சிகளும் நல்ல பலன் தருவதாக  அமெரிக்க  உடல் நல துறை கூறுகிறது. கணிணி முன் அ  மர்ந்து வேலை செய்பவர்களும் சற்றே உடல் பயிற்சி செய்தால் நிறைய  பலன் இருக்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் சாதரணமாக 20 இலிருந்து 30 நிமிடம் நடக்க வேண்டும் என்று அமெரிக்க நோய் தடுப்பு துறை  கூறுகிறது. அப்படி தினமும் நடக்க முடியாதவர்கள் வாரத்திற்கு மூன்று நால், 20 இலிருந்து 30 நிமிடம் நல்ல வேகமாக நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அலுவலகத்தில் மதிய  உணவு இடைவெளியில் கார் நிறுத்தும் இடம் அல்லது அலுவலகத்தை சுற்றி நண்பர்களுடன் நடப்பதை பலர் செய்கிறார்கள். சில நாட்களில் எடை குறைவதை கண்டு அதுவே இன்னமும் அதிக உற்சாகத்தை தர, மேலும் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய தூண்டும்.

உடற்பயிற்சிக்கு ஏற்ற மாதிரி நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள் இவற்றையும் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பான பானங்களை  தவிர்த்து தண்ணீர் பருகுவதும், கொழுப்பு நீக்கிய பால் அருந்துவதும் நன்மை பயக்கும்.

அதிகம் வயதானவர்கள் தங்கள் முழங்காலில் வலி, தளர்வாய் இருக்கிறது என்று நடப்பதை, மற்ற இயக்கங்களை குறைத்து கொள்வதை ஆதரிக்காமல் பக்குவமாய் சொல்லி அவர்களை நடக்க வைக்க வேண்டும். அவர்கள் வயதை சேர்ந்தவர்கள் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து நடப்பது ஆறுதலை தரும். இய லாமையை காரணம் காட்டி மேலும் உடல் உறுப்புகளை இயக்காமல் இருந்தால் அது மேலும் பழுதாகிவிடும்.

அதேபோல வீட்டு வேலைகளையும் செய்ய அனுமதிக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளை வயதுக்கேற்ற வாறு காலத்துடன் உன்ணுதலும் முக்கியம்.
சிறுவர்கள் அதிகம் தொலைகாட்சி பார்ப்பதையும் வீடியோ விளையாட்டுகள் விளையாடுவதையும் தவிர்த்து, வெளியில் நல்ல கால்பந்து, கூடை பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுவதையும், சைக்கிள் ஓட்டுவதையும் ஆதரிக்க வேண்டும்.

அமெரிக்க நிறுவனம் இப்போது புதிய நடைமுறையை செயலாக்கி இருக்கிறது. இதன்படி நீங்களே உங்கள் வயது மற்றும் இயக்கங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு அட்டவணையை தயாரித்து கொள்ள முடியும். http://www.ring.com/health/food/food.htm என்ற தளத்தில் உங்களுக்கான பிரமிடை தயாரித்து கொள்ளுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விடமாகும் என்பதை உணர்ந்து பசித்து புசிப்போம், உடல் நலம் காப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |