ஆகஸ்ட் 26 2004
தராசு
வேர்கள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
வானவில்
திரையோவியம்
சிறுகதை
கட்டுரை
கோடம்பாக்கம்
பேட்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : தாத்தாபாட்டி பேண் !
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  " இந்தக்குழந்தைகள் 'தந்தைதாய் பேணு'கிறார்களோ இல்லையோ தள்ளாத வயதுத் தாத்தாபாட்டியைப்ப் பேணுவார்கள் "

  பெற்றோரை நண்பனாகப் பாவிக்கும் வழக்கம் பெருகி வருவது உண்மை தான் என்றாலும் பெற்றோரை விட பாட்டிதாத்தாவோடு தான் இளம் தலைமுறை அதிகம் ஒட்டிப்பழகுகிறது. முன்பெல்லாம், "சொல்றதச் செய். கேள்வி கேக்காத", என்ற பெற்றோர்கள், இப்போதெல்லாம் தங்கள் வாரிசுகளோடு," வா ரெண்டு பேரும் சேர்ந்தே யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம் ", என்று கைகுலுக்குகிறார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள்
  ஒரே மாதிரி உடுத்துவதும், சிந்திப்பதும் என்று தலைமுறை இடைவெளிகள் குறைந்து வருகிறது. இருப்பினும், இது பரவலாக இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.  இதில் சாதகங்களுக்குச் சமமான பாதகங்களும் உண்டு. நேயம் வளரும் அதே நேரம் பெற்றோரிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதை மங்கலாம். இதுவே பெற்றோருக்குச் சவாலாகிறது. ஒழுக்கத்தைக் கற்பிக்கவேண்டிய பெற்றோர் அதிகம் செல்லம்கொடுத்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறார்கள். இதனால், தங்களின் குழந்தைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் பொருளீட்ட வேலைக்குப்போய்விடும் தாயிற்குக் குழந்தைகள் தங்களுடன் இருப்பதைவிட பாட்டிதாத்தாவுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கூட்டுக்குடும்பம் அருகிவரும் இந்தக்காலத்திலும் சில குடும்பங்கள் தங்களின் சௌகரியம் கருதியாவது பெற்றோரை உடன் வைத்துக்கொள்கின்றனர்.

  இங்கு சிங்கப்பூரில் சில அடுக்குமாடிக்கீழ்த் தளங்களில் தங்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட அறைகளில் குழந்தைக் காப்பகங்கள் (child care centre) நடப்பதைப்பார்க்கலாம். பாதுகாப்புக்கருதி குழந்தைகளைப் பூட்டிப்பூட்டி வைத்திருப்பர் அங்கிருக்கும் காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள். பார்க்கும்போதெல்லாம் 'இப்பிடிக் கொண்டு வந்து தள்ளிட்டு ஆபீஸ¤க்கு ஓடிடறதாலதான், இதுங்க பின்னாடிப் பெத்தவங்களைக் கொண்டு
  முதியோர் காப்பகத்துல தள்ளிடுதுங்க' என்று முன்பு ஓர் இந்தியமூதாட்டி சொன்னதே என் நினைவுக்கு வரும்.

  சில இளம்பெற்றோர்கள் பணிப்பெண்களிடம் பிள்ளைகளைவிட்டுவிட்டு வேலைக்குப்போய்விடுகிறார்கள். பணிப்பெண்கள் நல்லவர்களாக அமைந்தால் சரி. இல்லையென்றால், பிள்ளைகள் அவர்களிடம் படும்பாடு சொல்லத்தக்கதன்று. சிலவேளைகளில் குழந்தைகள் பணிப்பெண்களால் துன்புறுத்தப்படுவதுமுண்டு. தெரியவரும்போது பெற்றோர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

  இங்கும் சில குழந்தைகள் மிகவும் அதிருஷ்டசாலிகள்! இவர்களுடனேயே தாத்தாபாட்டிகள் இருக்கிறார்கள். இந்தப்பிள்ளைகளுக்கு பெற்றோரைவிட பாட்டித்தாத்தா தான் நெருக்கம். இவர்கள் பெரியவர்களானதும் தள்ளாடும் தாத்தாபாட்டிகளை இவர்களின் பெற்றோர் கைவிட்டாலும் இவர்கள் கைவிடமாட்டார்கள். அதற்கான அன்பும் ஆதரவும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

  குழந்தைகளைப் பள்ளிக்குக்கூட்டிக் கொண்டு விடுவதும் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவதும் தவிர, ஸ்க்ரேபிள் போன்ற விளையாட்டுக்கள் விளையாடவும், டீவி பார்க்கவும், இண்டெர்நெட் சாட் செய்யவும், பார்த்த சினிமாவைப்பற்றிப் பேசவும் இந்தத் தாத்தாபாட்டிகள் குழந்தைகளுடன் செய்கின்றனர். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் பேரக்குழந்தைகளுக்கும் அம்முதியவர்களுக்கும் உறுதியான உறவுப்பாலம் அமைந்துவிடுகிறது.

  வேறு சில முதியோர்களும் இருக்கிறார்கள். இவர்கள் முழுநேரக் குழந்தைப்பராமரிப்புக்குத் தயாராகயில்லை. இவர்கள் தங்கள் சொந்த ஈடுபாடுகளில் நேரத்தைக்கழித்து வாழ்வைச்சுவைக்கவே நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு அன்னா இங் என்னும் ஓய்வுபெற்ற மாது ('த சண்டே டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் 07-08-04) தன் நான்கு மாதப்பேரனை வாரத்திற்கு ஒரு முறை போய் பார்க்கிறார். அதற்குமேல் அவருக்கு வேண்டாமாம். ஜிம்மிற்குப் போய் உடற்பயிற்சி செய்தல், தேவாலயத்திற்குப் (church) போய் தொண்டூழியம் செய்தல், 'சால்சா' நடனம் கற்றல், புற்றுநோயாளிகளுக்குத் தொண்டூழியம் புரிதல், தன் செல்ல நாய்களோடு விளையாடுதல் என்றே தன் நேரத்தைச்செலவிட விரும்புகிறார்கள் இவரும் இவரது துணைவரும். தான் பெற்றபிள்ளைகளுக்காக வருடக்கணக்கில் உழைத்தது போதும், பேரப்பிள்ளைகளுடன் வேறு மல்லுக்கட்டமுடியுமா என்பதே இவரது முக்கியக்கேள்வி. இவர் சொல்வது விநோதம் மட்டுமில்லை, வேடிக்கையும் கூட. "நாய்களை வீட்டில் விட்டுவிட்டு நான் வெளியில் போகலாம். பேரப்பிள்ளைகளை விடமுடியுமா? நாய்களுக்கு ஒரு நாளைக்கு ஒரே முறை உணவு கொடுத்தால் போதும், பேரப்பிள்ளைகளுக்கு ஐந்து முறை உணவு கொடுக்க வேண்டுமே. இது பெரிய வித்தியாசமில்லையா?" என்கிறார். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் என்னோடு நெருக்கமாக இல்லாவிட்டால்
  பரவாயில்லை, அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு என்கிறார் இவர். பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுறுசுறுப்பாய் இருந்தால் தான் முதுமையைக் கொஞ்சமாவது தள்ளிப்போட முடியும் என்பது இவர் வாதம்.

  பேரப்பிள்ளைகளிடம் உயிராய் இருக்கும் முதியோர்களுமுண்டு. ஷௌரியைப் (2004 ஜூலை 13 ஆங்கில நாளிதழ் -The Straits Times) போல சில பதின்மூன்று வயதுபிள்ளைகள் தாத்தாவுடன் கணினிபற்றிக் கலந்துரையாடுகின்றனர். பாட்டியோடு காற்பந்தாட்டத்தைப்பற்றியும் விவாதிக்கின்றனர். காற்பந்தாட்டக்கார்கள் மைதான எங்கும் ஓடிவிளையாடும்போது எச்சில் துப்பியபடி இருப்பதை ஒரு 'பாட்டி' யின் கண்ணோடு கருத்துசொல்வதை ஷௌரி ரசித்துச்சிரித்து ஏற்கிறான். இந்தத் தாத்தாபாட்டி தனியே வசிக்கிறார்கள். ஆனால், அடிக்கடி தங்கள் பேரன்பேத்திகளைக்காணவேனும் போய்வருகிறார்கள். கூடவே இருந்தால் சலிப்பு ஏற்பட்டுவிடும். பாட்டிவீட்டுக்கு வர பேரப்பிள்ளைகளுக்கு ஒரே குஷி. அவர்களைப்பேற்றோர் கண்டிப்பில் விட்டுவிட்டு அவ்வப்போது வந்துபோய்க்கொண்டிந்தால் பிள்ளைகளுக்கு பெரிய மாறுதலாய் இருக்கும் என்று அந்தப்பாட்டி, பார்வதி சொல்கிறார். இருபத்தி நான்கு மணிநேர அவசர அழைப்பில் (emergency call) இருப்பதாகப் பெருமையோடு சொல்லிச்சிரிக்கிறார். மகளுக்கோ மருமகளுக்கோ எப்போது உதவி தேவையென்றாலும் தயாராய் இருப்பாராம். இந்தியாவில் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் மற்ற பேரப்பிள்ளைகளோடும் இண்டெர்நெட் மூலம் தொடர்பு வைத்துக்கொள்வார்களாம் இந்தமூத்த தம்பதியர்.

  ஜோஷ¤வா லீ (2004 ஜூலை 13 ஆங்கில நாளிதழ் - The Straits Times) என்ற பத்துவயது சிறுவனுக்கு அந்த வயதிற்கே உரிய விளையாட்டு ஆர்வம் கொஞ்சம் அதிகம். அவனிடம் மிகமுக்கியமான ஒரு நபர் என்று குறுப்பிட்டுச்சொல்லச் சொன்னதுமே தன் தாய் வழிப்பாட்டியின் பெயரைச் சொன்னான். "அவரிடம் அப்படியென்ன சிறப்பு?" என்றதுமே 'எல்லாமே' என்ற பதில் சட்டென்று வந்துவிழுந்தது. பாட்டி 'டியோசியோ' என்ற வழக்கில் பேசும்போதுமட்டும் புரியாமல் அவனுக்கு எரிச்சல் வருமாம். அப்போது பாட்டி," என் காலம் முடிஞ்சதும் ஒன்னோட யாரு டியோசியோவுல பேசப்போறாங்க, சொல்லு. அதனாலதான், நீ டியோசியோ கத்துக்கணும்னு நான் ஒன்னோட பேசறேன்," என்று சொல்வார்களாம். ஜோஷ¤வாவின் அக்கா ஜூலியாவும் பாட்டியிடம் மிகவும் செல்லம். இந்தப்பாட்டி நியா, முன்னாள் ஆபீஸ் க்ளீனர். பெண்ணின் குடும்பத்துடன் வாழ்கிறார். அவருடைய கணவர் பையனின் குடும்பத்துடன் வசிக்கிறாராம். பேரனும் பேத்திகளும் பாட்டியின் கடந்தகாலவாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது ஆர்வமாய் கேட்பார்களாம். "பாட்டியோட பெற்றோர் சீனாவுல இருந்தவங்க. ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அந்தக்கஷ்டத்தையெல்லாம் பாட்டி சொல்வாங்க. அப்பதான் நான் எவ்வளவு வசதியா இருக்கேன்ன்னு புரிஞ்சு நடந்துப்பேனாம்", என்று ஜோஷ¤வா சொல்கிறான்.


  இதுமட்டுமில்லாமல், நாட்டுநடப்பு,உலக நடப்புவிவகாரங்கள், பள்ளிக்கூடத்தில் நடந்தது போன்ற எல்லாவற்றையுமே பாட்டியோடு பேசுவார்களாம். ஜூலியா பாட்டிக்கு 101% மதிப்பெண்கொடுக்கிறாள். ஒரு நாள் கூட பாட்டியில்லாமல் இருப்பதை நினைத்தும் பார்க்கமுடிவதில்லை என்கிறாள் அவள். பாட்டிக்குத் தான் குழந்தைகளுக்கு சமைக்கும் உணவை அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடும்போதுதான் மகிழ்ச்சி ஏற்படும்
  என்று சொல்கிறார் சிரித்தபடி. பாட்டிக்கும் பேரன்பேத்திக்களுக்கும் இயல்பான நட்பும் உறவும் அமைந்திருக்கிறது.

  நிச்சயம் வருங்காலத்தில் இந்தக்குழந்தைகள் 'தந்தைதாய் பேணு'கிறார்களோ இல்லையோ தள்ளாத வயதுத் தாத்தாபாட்டியைப்ப் பேணுவார்கள்.

  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |