ஆகஸ்ட் 31 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜோதிட விளக்கங்கள் : நட்சத்திரங்களைப் பற்றிய அபவாதங்கள்
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

நாம் இது வரையில் ஏக தசை, தசா சந்தி ஆகியவற்றை அனுபவபூர்வமாக எப்படிக் கையாள வேண்டுமெனப் பார்த்தோம். இனி சில நட்சத்திரங்களைப் பற்றிய அபவாதங்கள் உள்ளன.  அவைகள் எல்லாம் சரிதானா எனப் பார்க்கப் போகிறோம். சில அபவாதங்கள்:-

1. மூல நட்சத்திரத்தின் மாமியார் மூலையிலே; பெண்மூலம் நிர்மூலம்.
2. கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது.
3. விசாக நட்சத்திரம் இளைய மைத்தினருக்காகாது.
4. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்காகாது.
5. பூராடம் கழுத்தில் நூலாடாது.

ஜாதகங்களைச் சேர்க்கும்போது இந்த அபவாதங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த அபவாதங்கள் எல்லாம் பெண்ணுக்குத்தான் என்றும் ஆணுக்கு இந்த அபவாதங்கள் பொருந்தாது என்பதும் ஒரு கருத்து நிலவுகிறது..  இந்த அபவாதங்களின் பொருளைக் கீழே எழுதியுள்ளோம்.

மூல நட்சத்திரம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் காலமாகி விடுவார். அதன் காரணமாக பெண்ணின் மாமியார் விதவையாகி விடுவாள். ஆகவே மூல நட்சத்திரப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. இன்னும் சிலர் மூல நட்சத்திரத்தில் முதல் பாதம் தான் சேர்க்கக் கூடாது என்றும் மற்ற பாதங்கள் சேர்க்கலாம் என்றும் கூறுவார்கள்.

    • கேட்டை நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் அவள் கணவனின் தமையனுக்காகாது என்று கூறுவர்.  ஆகவே கேட்டை நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது.
    • ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் மாமியார் மறித்துப் போவாள். ஆகவே ஆயில்யம் அறவே கூடாது.
    • பூராடம் நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் கணவன் காலமாகி விடுவான். ஆகவே அவள் கழுத்தில் தாலி தங்காது.
    • விசாக நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் கணவனின் தம்பிக்காகாது. ஆகவே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டாம்.

இவைகளல்லாம் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது வெறும் வெற்று  வார்த்தைகளாகத்தான் தெரிகின்றது. இவைகளில் உண்மை இல்லை.

சரி! நாமும் சிறிது யோஜனை செய்வோம். ஒரு பெண்ணின் நட்சத்திரம் மற்றவரின் வாழ்க்கையைப் பாழ் செய்துவிட முடியாது.  ஒருவருக்கு தீர்க்காயுள் உள்ளதெனக் கொள்வோம்.  அவருடைய மருமகள் மூல நட்சத்திரத்தில் பிறந்ததற்காக மரணம் அடைய வேண்டுமா?  அவருடைய
தீர்க்காயுள் கிரக நிலயானது அவர் மருமகளால் மாற்றப்பட்டு விடப்படுமா?  இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?

ஒருவர் பிறக்கும்போதே அவர் எப்படி வாழ வேண்டும், எத்தகைய கல்வி பெற வேண்டும், யாரை மணம் முடிக்க வேண்டும், எந்த மாதிரியான தொழில் செய்ய வேண்டும் என்பது போன்றவைகள் அவருடைய ஜாதக கிரக நிலைப்படி முடிவாகி விடுகின்றன. இதை ஒருவராலும் மாற்ற முடியாது.

ஆகவே தேவையில்லாத இந்த நட்சத்திர அபவாதங்களை வைத்துக் கொண்டு எந்த ஜாதகத்தையும் நிராகரிக்க வேண்டாம்.  ஜாதகத்தின் அனுகூல, பிரதிகூலங்களை ஒன்பது கிரகங்களின் நிலை கொண்டு ஆராய்ந்து செயல்படுவதே சிறந்த முறையாகும்.

| | |
oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |