ஆகஸ்ட் 31 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : பூக்க அவகாசம் கேட்கும் பூ!
- சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அக்காவிற்கு
பள்ளிச்செல்ல தடை
அப்பாவிடமிருந்து!

வயசுக்கு வந்துட்ட
வீட்டைவிட்டு
வெளியே
போகக்கூடாது!
குலவழக்கம்
குதித்து வந்தது
அம்மாவிடமிருந்து!

ஆம்பளைங்க வந்தா
நீ ஒண்ணும் பேசாம
அம்மாவை
கூப்பிடனும்!
பரிந்துரை வந்தது
பாட்டியிடமிருந்து!

ஏய்
ஓடியாடுவதையெல்லாம்
நிறுத்திவிடு!
உத்தரவு வந்தது
உறவுகளிடமிருந்து!

அந்த
மூன்று நாளைக்கு
சாமி அறைபக்கம்
போயிடாத கண்ணு
வேண்டுகோள் வந்தது
வேலைக்காரியிடமிருந்து!

அக்காவின் சுதந்திரத்தை
அன்பால்
அனைவரும் பிடிங்கி
செல்லமாய்
சிறையில் அடைத்தனர்.

அனைத்தையும்
பார்க்கிற போது
அடிமனம்
வலிக்கிறது.

பதிமூன்று வயதில்
இத்தனை பாரங்களா?

எனக்கு வேண்டாம்
இப்போது!

நான்
கூடிகளிக்கும்
தோழர்களை துறந்து!

நான்
ஓடியாடிய
வீதிகளை மறந்து!

நான்
கத்தி கத்தி
பூக்கச்சொல்லும்
தாமரை குளத்தை பிரிந்து!

பாதிபாடம்
பாதி நையாண்டி
என்
பள்ளியை இழந்து!

இப்படி
அனைத்தையும்
பறித்துவிடும்
அந்த நாட்கள்
இப்போது வேண்டாம்!

இயற்கையே
இயலுமானால்
இருபதுவரையாவது
இதை எனக்கு
ஒத்திவையேன்!

இருபதுக்குமேல்
எப்படியும்
தயாராகிவிடுவேன்
எவனது
தாலியையாவது சுமந்து
அவனோடு சிறையிருக்க!

அதுவரை கொஞ்சம்
அவகாசம் கொடேன்
என் சுதந்திரம்
கொஞ்சம்
விடுதலையாய்
இருந்துபோகட்டும்!

|
oooOooo
சிலம்பூர் யுகா, துபாய் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |