செப்டம்பர் 01 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
அடடே !!
கவிதை
தொடர்கள்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : Bipolar Disorder
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

Bipolar Disorderஒருசமயம் நல்ல அன்பாக பேசி உற்சாகம் நயாகராவாக பொங்கும் கணவன் இன்னொருமுறை சோகத்துடன் அமைதியாய் இருக்கிறாரா? இவரை பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது எப்போ எப்படி இருப்பாரோ என்று யாரை பற்றியேனும் கவலை கொண்டிருக்கிறீர்களா அப்படி என்றால் அவர் ஒருவேளை இரு துருவம் மன சோர்வு (bipolar) நோயால் அல்லது மூளையில் ஏற்படும் ஒருவகை மாறுதல்களால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். இவ்வாறு ஏற்படும் வேதிப்பொருள் மாற்றத்தால் அவரின் மனநிலை, சக்தி, வேலை செய்யும் திறன் இவை பாதிக்கப்படும். இவ்வாறு ஒரு வேறு மனநிலைக்கு மாறி போவதால் உறவுகள், அலுவலக நண்பர்கள், வேலையில் முன்னேற்றம் இவை பாதிக்கப்பட்டு தற்கொலை வரை கூட செல்ல துணிவார்கள்.இதனை மருந்துகளால் குணப்படுத்த முடியும்.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேலானவர்களில் 2 மில்லியன் பேருக்கும் மேல் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறு மாறுபட்ட மனநிலை உள்ளவரை நாம் அதுவும் அவரது குணாதிசியங்களில் ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை அலட்சியம் செய்துவிடுகிறோம்.

இருதுருவ மனநிலை மாற்றம் பதின் வயதின் தொடக்கத்தில் ஆரம்பிக்கிறது. அதே சமயம் ஹார்மோன்களின் மாற்றமும் ஏற்படுவதால் இந்நிலை கவனிக்கப்படுவதில்லை. சில சமயம் இது குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிடும்.

சரியான கவனிப்பு இல்லாததால் இந்நிலையை மருத்துவர் அறியவே பலகாலம் ஆகிவிடுகிறது. நீரிழிவு நோய் போல் இதுவும் ஒரு நீண்டகால நோய் ஆகும். மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் கட்டுப்பாட்டுக்குள் மனநிலையை வைத்திருக்க முடியுமே தவிர குணம் அடைய வைக்க முடியாது மாறுபடும் மனநிலையால் (mood swing) அடிக்கடி கோபம் ஏற்படுவதும், அப்போது மிருகதனமாக மாறி வன்முறையில் ஈடுபடுவதும், பிறகு நல்ல அமைதியான சூழலில் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் துணையை பெற்றவர்கள் படும் பாடு மிக அதிகம். விவாகத்தை ரத்து செய்யவும் மனம் இல்லாமல், வாழவும் முடியாமல் அவர்களின் மனநிலையும் நாளடைவில் மாற தொடங்குகிறது.

இருவேறு துருவமாக இவர்களின் மனநிலை இருந்தாலும் இடைபட்ட சாதாரண மனநிலையிலும் சிறிதுகாலம் இருப்பார்கள். அதிகமான மகிழ்ச்சி, அதிகமான சோகம் இவற்றை ஒரு தாக்கம் (Episode) என்று சொல்கிறார்கள்.

இந்நிலையை எப்படி கண்டுபிடிக்கலாம்?

அதிக சக்தி, நிலைப்பாடு இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் மனம் (restlessness), எதிர்பார்த்ததைவிட அதிகமான மகிழ்வான நிலை, அதிகமாக எரிச்சல்படுதல், போட்டிபோட்டுக்கொண்டு வெளிப்படும் சிந்தனைகள், ஒரு எண்ணத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுதல், ஒன்று செய்கையில் கீர்ந்து கவனிக்க முடியாமை, குறைந்த தூக்கம், தன் திறமையில் அளவுக்கதிகமான  நம்பிக்கை, அதிகமாக செலவு செய்தல், தவறான முடிவெடுத்தல், வழக்கமான முறயிலிருந்து மாறு பட்ட பழக்கத்தில் அதிக நேரம் நீடித்தல்,அதிக பாலியல் நாட்டம் மற்றும் எதையும் மறுத்தல் ஆகிய குணாதிசியங்களே இருவேறு துருவ நோய் இருப்பதை கணடறிய உதவும். இதில் எந்த ஒரு 3 தன்மைகளுடன் மனநிலல மாறுபாடு அடிக்கடி ஏற்பட்டால், மனநிலை உதவியாளரை நாடுதல் நலம்.

ஒருசிலருக்கு இந்த தன்மைகளுடன் சோகமாக இருக்கும் போது தற்கொலல செய்து கொள்ளும் எண்ணம் வருவது மன  சோர்வு (depression) ஏற்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சாதாரண நிலைக்கும் சற்றே தீவிரமான நிலைக்கும் இடைபட்ட ஒரு வித குழப்பமான மனநிலையை  hypomania குறைந்த மன  சிக்கல் உள்ளவர் என்றூ சொல்லலாம். இது பாதித்த மனிதனுக்கு நல்ல உணர்வை தரும், ஆதலால் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதனால் உறவினர்கள் உடனான உறவு பாதித்தாலும் இவர்கள் அதை அறிய மாட்டார்கள். உதாரணமாக ஒருவரிடம் சாதாரண ஒரு தவறுக்கு அதிக அளவில் கோபம் கொண்டு உரத்து பேசுவது தவறென்று உறவினர்கள் சொன்னாலும் இவர்களை பொறுத்தவரை தான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வாதிடுவார்கள். ஏனெனில் அவ்வாறே அவர்கள் நம்புகிறார்கள்.

இதுவே தீவிரமாகும் போது குரல் கேட்பது போலவும், உருவம் நடந்து செல்வதை பார்த்ததாகவும் கேட்டது படித்தது எல்லாம் நடப்பது போலவும் கற்பனைச் செய்து கொள்கிறார்கள். இது போன்ற மனநிலை இருவேறு துருவங்களுக்கு மாறும் போது தான் ஒரு தலைவர் என்றும், இன்னும் சிலர் மிகவும் கஷ்டப்படுவதாகவும் நம்புகிறார்கள். தனக்கு மிகவும் பிடித்தமானவர் இறக்கும் போது தானே அவரை கொலை செய்ததாகவும் அவருடையை ஆவி தன்னில் இறங்கிவிட்டதாக அவர் செய்ததை பேசியவன்ணம் பேசுவது என்று செய்கிறார்கள். இதனை Bipolar depression என்று புரிந்து கொள்ளாமல் மாந்தீரிகம் மந்திரம் என்று மேலும் வற்புறுத்துகிறோம்.

இன்னும் சிலரில் இந்த மன   சோர்வு மற்றும் அவர்களின் இயக்கங்களும் சேர்ந்தே ஏற்படும்.  மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள், நரம்பினூடே உணர்வுகள் கடத்தபடும் போது ஏற்படும் மாற்றங்கள், இன்னும் செரோட்டோனின் போன்ற வேதிப் பொருட்களின் அளவின் மார்றங்கள் , இன்னும் சிலருக்கு சிறுவயது முதலே ஆழமாக படிந்து போன எண்ணங்கள் இவை இத்தகைய இருவேறு துருவ பிரச்சைனகள் வர காரணமாகிறது.

மற்ற உடல் நோய்களுக்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறூவதுபோல மன நோய் வரும் போதும் அதை தகுந்த மருத்துவரிடம் சென்று பேசி ஆலோசனை பெறவேண்டும். முன்னோடியாக வீட்டில் உள்ள உறவினர்களும் பேசுவதை நன்றாக கவனித்து கேட்பதை பழகவேண்டும்.

ஒருநாளைக்கு சில நேரம் மனதை ஒருமுகப்படுத்த கற்க வேண்டும்.வேண்டாத சிந்தனைகளை கொண்டு அதை நினைத்தே வருந்தி வாழ்க்கையை வீணடிப்பதால் என்ன பயன்? முடிந்து போனவை, செய்ய முடியாததை பற்றி வருந்தி இனிவரும் நேரத்தையும் வீணே கழிப்பதில் பலனில்லை. வருத்தமும் சினமும் சேர சேர அதுவே பலவித குழப்பங்களையும் சீர்கெட்ட சிந்தனைகளையும் கொண்டுவருகிறது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |