செப்டம்பர் 01 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
அடடே !!
கவிதை
தொடர்கள்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : முருகனும் மயிலும் பாம்பும்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம் பின்னனியாக இருக்கிறது ? அந்த மயில், பாம்பை மிதிப்பது போல வைத்திருப்பதன் தத்துவம் என்ன ?


மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான். ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. அது, தான் அழகாக ஆடுவதாக நினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

Lord Murugaமனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்துப் திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணரமுடிவதில்லை. இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பைக் கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.

- சுவாமி ஏ. பார்த்தசாரதி (The Symbolism of Hindu Gods and Ritual) என்ற புத்தகத்திலிருந்து.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |