செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : தொழிலாளர் நலன்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  'இன்று முதலாளிகள் தொழிலாளர்களை கண்டு அஞ்சுகிறார்கள். தொழிலாளர்களோ முதலாளிகளை மிரட்டுகிறார்கள்'

  கம்யூனிஸ சிந்தாந்தத்தை சரியாக புரிந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் பேரியக்கத்தில் அதை படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்த முதல் இந்திய அரசியல் தலைவர் காந்திஜியாகத்தான் இருக்க முடியும். முதலாளி, தொழிலாளி என்கிற பாகுபாட்டிற்கே எதிரானவராக தன்னை காந்திஜி காட்டிக் கொண்டது அவரது பேச்சின் பல இடங்களில் பிரதிபலித்திருக்கிறது. காலகாலமாக இருந்துவரும் இரு தரப்பினருக்குமிடையேயான மோதல் வர்க்கப் புரட்சிக்கு பின்பும் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்கும் காட்சிதான்.

  முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் தூது போக ஆரம்பித்ததுதான் தென்னாப்பிரிக்காவில் காந்திஜியின் முதல் சமூக சேவையாக இருந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, நாடு விடுதலையடையும் காலம் வரைக்கும் பல நிறுவனங்களில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடைப்பட்ட பிரச்சினைகளை சுமூக தீர்வின் மூலம் தீர்த்துவைத்த அனுபவம் அவருக்கு நிறைய உண்டு.

  'முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் வகுப்பிற்கும் இடையே மோதல் தவிர்க்கமுடியாத ஒன்று என்று நான் எண்ணவில்லை. ஒன்று மற்றொன்றை சார்ந்தே இருக்கிறது' (யங் இந்தியா 4.8.1927)

  எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசியே சுமுகத் தீர்வு காணலாம் என்பதுதான் காந்திஜியின் கருத்தாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை ஏற்படுவதால் பாதிக்கப்படுவது தொழில்தானே தவிர வேறு எதுவுமில்லை. தொழிலில், சம்பளத்தில் பிரச்சினை இருந்தாலும் உற்பத்தி பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ஜப்பானியர்களின் பழக்கம். தங்களது எதிர்ப்பை
  தெரிவிக்க அவர்கள் கையாளும் முறையெல்லாம் உலகப் பிரசித்தம். ஆனால், காந்திஜி அவற்றையெல்லாம் கூட ஒதுக்கி தள்ளுகிறார். பரஸ்பர புரிதல்களே நிரந்தர தீர்வுக்கு வழி என்பதில் அழுத்தமான நம்பிக்கை அவருக்கு.

  'தொழிலாளி, முதலாளி என்பதெல்லாம் ஒரு கூட்டமைப்பின் பகுக்கமுடியாத அங்கங்களே என்பதை சமூகப் பொருளாதாரம் நமக்கு சொல்கிறது. இங்கே சிறியவர் பெரியவர் என்பது கிடையாது. அவர்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று உடன்பாடுடையனவாகவும் ஒன்றை மற்றொன்று நம்பி வாழ்வதாகவும் இருக்கவேண்டுமேயன்றி ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கக்கூடாது' (யங் இந்தியா 3.5.1928)

  சரி, இப்படி இரு தரப்பிலும் பரஸ்பரம் சமூகமான நிலை இருந்தாலே போதும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டேயிருந்தால் எல்லாம் நடந்துவிடுமா?  அப்படியொரு நிலையை எப்படிக் கொண்டு வருவது? இரு தரப்பையும் ஏதாவது ஒரு புள்ளியில் எப்படி இணைப்பது? இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் மனதில் எழுந்தாலும் எல்லாவற்றிற்கும் காந்திஜி பதில் வைத்திருப்பதுதான் ஆச்சரியம்.


  'தொழிலாளர்களும் சம உரிமையாளர்களாகி விடுவார்களானால், கம்பெனிகளின் வரவு செலவுகளை கவனிக்க பங்குதாரர்களுக்கு எவ்விதம் வாய்ப்பு இருக்கிறதோ அவ்விதமே தொழிலாளர்களின் அமைப்பிற்கும் வாய்ப்பு இருக்கும்'  (ஹரிஜன் 13.2.1937)

  இன்றைக்கும் எல்லா முன்னணி கம்பெனிகளும் தங்களுடைய ஷேர்களை கம்பெனியிலேயே வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விற்றுவிடுகின்றன. ஏதோ பெயருக்கு வேலை பார்க்கும் மனப்பான்மையை தொழிலாளர்களிடம் குறைக்க இத்தகைய டெக்னிக் நன்றாகவே எடுபடுகிறது. தொழிலாளர்களுக்கு சம உரிமை தரும் கம்யூனிஸ சிந்தாந்தம், வேறு ரூபத்தில் இடம் பிடித்திருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது. தொழிலாளிக்கும் ஜாப் செக்யூரிட்டி, திருப்தியான சம்பளம் கிடைப்பதோடு கம்பெனியின் குறிக்கோளை அடைய உண்மையாகவே வேலை பார்க்கவும் முடிகிறது.

  காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தொழிலாளர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் என்னென்ன, அவற்றை நடைமுறைக்கு எப்படிக் கொண்டுவருவது, முதலாளித்துவத்தை எப்படி அணுகுவது என்பது பற்றியெல்லாம் நிறைய கிளாஸ் எடுத்திருக்கிறார். அவர் எப்போதும் சொல்லும் ஒரே விஷயம், எந்த நாடாக இருந்தாலும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கவேண்டிய உறவு அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள உறவாகத்தான் இருக்கவேண்டும் என்பதுதான்.

  முதலாளிகளின் போக்கை மாற்றிக்கொள்ளச் சொல்லும் காந்திஜி, உரிமைக்காக போராடும் தொழிலாளர் யூனியனில் எவ்வித பிரிவுகளும் இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். இன்றோ பிளவு இல்லாத யூனியன்களே இல்லையென்று சொல்லலாம்!

  'இன்று முதலாளிகள் தொழிலாளர்களை கண்டு அஞ்சுகிறார்கள். தொழிலாளர்களோ முதலாளிகளை மிரட்டுகிறார்கள்' (யங் இந்தியா 20.8.1925)

  தொழிலாளிகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து முதலாளிகளை மிரட்டும் வேலை அப்போதே ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது!

  தொழிலாளர்கள் பற்றியெல்லாம் நாம் பேசினால் இன்னொரு முக்கியமான சங்கதியை பற்றியும் நாம் பேசியே ஆகவேண்டியிருக்கிறது.  அதுதான்... வேலைநிறுத்தம்!

  வேலைநிறுத்தம் பற்றி காந்திஜி என்னதான் சொல்கிறார்? வேலை நிறுத்தம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை பார்ப்பதற்கு முன்னால் ஒரு சுவராசியமான விஷயம். தொழிலாளர் வேலைநிறுத்தம் பற்றி அவர் விரிவாக, ரொம்பநேரம் பேசியது நமது சிங்கார சென்னையில்தான். ஆகஸ்ட் 15, 1920ம் ஆண்டும் மத்திய தொழிலாளர் வாரியம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம்தான் அது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |