செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : ஆஹா! என்ன அழகு!
  - ரமா சங்கரன்
  | Printable version |


  கடந்த வெள்ளியன்று (27 ஆகஸ்டு) வரலட்சுமி விரதம். தென்னிந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெண்கள் நன்கு அறிந்த பண்டிகை.  ஒரு  சொம்பை எடுத்து அதன்  மேல் மையால் கண்களை வரைவார்கள். மஞ்சள் பொடியை தண்ணீரில் குழைத்து மூக்காகவும்  பிடித்து வைப்பார்கள்.  அதன் மேல் குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து ஒரு எழில் கொஞ்சும் முகத்தை உருவாக்குவார்கள். பின் அவளை வரலட்சுமியாக அவளை வீட்டிற்குள் அழைக்கின்றனர் பெண்கள். சொம்பை அழகிய துணியால் சுற்றி அதன் மேல்  நகைகளைப் போட்டால் வரலட்சுமி அழகே உருவான மங்கையாக அங்கே அமர்கிறாள். பெண்கள் அவளைக் கொண்டாடி பாயசம், கொழக்கட்டை சமைத்து உண்பார்கள்.  செம்பின் உள்ளே அரிசியையும் மங்கலப் பொருட்களையும் போடுவது உண்டு. வரலட்சுமி இப்படி வளத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறாள். சிவனே இந்த வழிபாட்டை பார்வதிக்குச் சொல்லிக் கொடுத்ததாகவும் ஸ்கந்தபுராணம் கூறுகிறது.

  எங்கு பெண்கள் கொண்டாடப்படுகிறார்களோ அங்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பும் என்பதை இது கூறுகிறது. சன் டிவியின் "மெட்டி ஒலி" தொடரில் வரும்  கோபம் நிறைந்த, மருமகளை இடித்துக் காட்டியே வாழும்  சிடுமூஞ்சி மாமியாரைப் போல அல்ல. பெண்களை பெண்களே கொண்டாடுவது அவசியம் என்பதை இப்பண்டிகைக்  கற்றுத் தருகிறது. எளிமையையும் பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது.   அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த பரிசுகள் - இவையே  மகிழ்ச்சியூட்டும் என்னும் மற்றொரு கருத்து தற்போது  பெண்களிடம்  பரவி வருகிறது. எங்கள் ஊர் பக்கங்களில்  நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் தம் வீட்டில் யாருக்காவது குழந்தை பிறந்தால் தாயையும் சேயையும் கிராமத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுப்பார்கள். அக்கம்பக்கங்களில் ஒண்டு குடித்தனங்களில் இருப்போர் சின்ன கிண்ணத்தில் சர்க்கரையும் ஒரு ரூபாய் பணமும் அப்போது எடுத்து வருவார்கள். மடியில் குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு அவர்கள் மகிழ்வதும் வாயில் சர்க்கரையை ஊட்டி கொஞ்சுவதையும் எத்தனை 'மதர் கேர்'  சாமான்களாலும் கொண்டு வரமுடியாது.

  வரலட்சுமி விரதம் சொல்லும் மற்றொரு செய்தி- எங்கெல்லாம் அன்பும் அரவணைப்பும்  வேண்டுமோ  அங்கு எந்த நிபந்தனையும் இன்றி பெண்மை வந்து தோன்றும் - பெண்களை  நாம் அழைக்க முடியும் என்பதும் ஆகும்.  சமயம், சம்பிரதாயம் இவற்றைக் கடந்து நிற்கும்  "தாய்மை" என்னும் புதிய வேதமே பெண்.  அதன் அடையாளமாக இரு சிலுவைகளைத் தாங்கி நிற்பவள். ஒரு பாயை விரித்து மண்டியிட்டு ஓடும் ரயிலில் அல்லாவை அழைப்பது போல எங்கும் யாருக்கும் பெண் கருணை புரிவாள். ஓடும் நதியாக இந்துக்களால் வணங்கப்படுபவள். அவள் இந்து சமயத் துதிப்பாடல்களில் தெய்வீக அழகு கொண்டவளாகத் திகழ்கிறாள். அவள் பலவிதமாக வர்ணிக்கப்படுகிறாள்.  முகத்தின் அழகு வெள்ளத்தில் துள்ளி விளையாடும் மீன்களைப் போன்ற கண்கள்; நட்சத்திரத்தின் பொலிவை பழிக்கும் மூக்குத்தியுடன் கூடிய நாசி; அசோக மலர், செண்பகப்பூ, புன்னாக புஷ்பங்களின் நறுமணத்தையெல்லாம் இயற்கையிலேயே கொண்ட கூந்தல் கற்றை; நெற்றியில் கஸ்தூரி திலகம்; அட்டிகையும் பதக்கமும் விளங்கும் கழுத்து; காமனின் விலையற்ற பிரேமையை விலைக்கு வாங்குவது போன்ற மார்புகள்; நாபியாகிய பாத்தியிலிருந்து கொடிபோலெழும் ரோம வரிசை; மூன்று மடிப்புகளால் ஆகிய வயிறு; உள்ளத்தை அள்ளும் தொடைகள்,; இரத்தினக்கீரடம் போன்ற முழங்கால்கள்; ஆமை முதுகு போன்ற புறங்கால்; தாமரைப் பாதங்கள்; இரத்தின தீபம் போன்ற நகங்கள்; அன்பினால் சிவந்த உள்ளம் போல அழகினால் சிவந்த  மேனி- இப்படி கேசத்திலிருந்து பாதம் வரை லலிதா தேவியாக பெண்ணை  வர்ணிக்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

  இத்தனை அழகான தெய்வப் பெண்ணை, வரலட்சுமியை ஆதிகாலந்தொட்டு  ஏன்  சொம்பு வடிவில்  காண்கிறார்கள்?  இதற்கு ஜியாமெட்டரியிலும் பயாலஜியிலும் விடையைக் காணலாம் என்பது என் கருத்து. கிரேக்கர்கள் கண்டுபிடித்த  ஜியாமெட்டரி ஒன்றன் மேல் ஒன்று ஏற்ற மாதிரிப் பொருந்தும் வடிவங்களை வற்புறுத்துகிறது. அரிஸ்டாட்டிலும் அழகு பற்றி வித்தியாசமானக்  கருத்தைக் கூறுகிறார். சரிசமமாகவும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதாகவும் உடல்ரீதியாக சரியான வரிசையில் அமைவதும் அழகிற்கு அடிப்படை என்று அரிஸ்டாட்டில்  சொல்லியுள்ளார். அழகினை வெளிப்படுத்த, அளவிட,  மற்றொரு அடிப்படை பிதகோரஸ் கண்டறிந்த எண்கள் என்றும் சொல்லலாம்.  எண்களும் மெக்கானிகல் விதிமுறைகளும் இணைந்து ஒரு வடிவத்தை தோற்றுவித்து அதன் எழிலைப் படைக்கிறது என்பது நமக்கு இதனால் நன்கு புரியும். வட்டவடிவம் என்பது அழகுக்கும் தூய்மைக்கும் அடையாளம் என்கிறார் சாந்தாயனர். (G Santayana, The sense of Beauty, p 89). இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் வட்டவடிவ உலகமும் அதில் உள்ள வளைவு நெளிவுகளும் நமக்கு ஒட்டு மொத்தமாக ஒரு அழகியப் பெண்ணின் உருவத்தை நினைவூட்டும். அதை ஆளும் தெய்வம் என்பதைக் காட்ட மட்டுமின்றி அத்தெய்வத்தின்  அழகிற்கும் அடையாளமாக வட்டவடிவாக விளங்கும் சொம்பு வடிவில் வரலட்சுமியை வணங்கும் பழக்கம் வந்திருக்கலாம்.

  ஆனால் ஒரு சாதாரணப் பெண்ணின் அழகையும் தெய்வங்களின் அழகையும் ரசிப்பது வெவ்வேறானது. பெண் தெய்வங்களின் அழகை ரசிப்பதும் துதிபாடுவதும் மூன்று நிலைகளில் செய்யப்படுகிறது. அதாவது, நாம் பார்க்கும் உருவச்சிலைகளின் வாயிலாக பெண் தெய்வங்களைப் பாடுவது சாதாரண நிலை ஆகும். நம்மில் பலபேரும் செய்யக் கூடிய எளிதான முறை ஆகும். இதையே 'யந்திரங்கள்' என்னும் முறையின் வாயிலாக வழிபடுவது அடுத்த முறை ஆகும். யந்திரத்தின் வடிவம் உடலின் கூறுகளையும் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறார்  வட்டங்களும்,  கோடுகளும், வளைவுகளும் பின்னிப் பிணைந்து காணப்படும் யந்திரங்கள் மூலம் இறைவியை அறிந்து வழிபடுவது இன்னும் சற்றுக் கடினமானது. இதில் எட்டு வட்ட வடிவான "மண்டலங்கள்" அடுக்கடுக்காக காணப்படுகின்றன. அதனுள்ளே நடுவில் ஒரு புள்ளியாக காணப்படும் கடைசி மண்டலம் "பிந்து" என்று சொல்லப்படும். பிந்து மண்டலம் பெண்களின் சிறப்பான ஞானம், உணர்வு, ஆக்கம் என்னும் முச்சக்திகளையும்  காட்டுகிறது.  யந்திர முறையையும் விட  உயர்வானது மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது. நம் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து இம்முறையில் செயல் பட வேண்டும். இது மிகச் சிரமமானதும் கூட.

  ஒரு சாதாரணப் பெண்ணின் அழகைப் பற்றிப் பேசும்போது  பாலியல் ஆசைகளை உண்டாக்கும் பெண்களின் அழகுதான் பெரும் அழகு என்று  டபிள்யூ. ட்யூரண்ட் (W Durant, The Mansions of Philosophy, p.300) முரண்பாடாக கூறுகிறார். "பெண்களின் உடலழகுதான் சொல்லத்தக்க அழகு. பூக்கள், மேகங்கள், விலங்குகள், பறவைகள், கவிதை, இலக்கியம் போன்றவை இதற்கு அடுத்தப்படித்தான்.  இவை எல்லாவற்றிலும் பெண்களின் நளினமும் சாயலும் நிழலாடிக்கொண்டிருக்கும்.  ஆனால் கண்ணை மூடிய பின்னும் மனதில் அலை மோதுவதும் அந்த பெண்ணையே உனக்குள் காண்பதும் மங்கையர்கள் மட்டுமே செய்யக்கூடிய மேஜிக்" என்கிறார். சாந்தாயனரும் இனப்பெருக்கமும் தாய்மையும் பெண்களின் அழகினால்தான் சாதிக்கப்படுகின்றன. எனவே, பாலியல் ஆசைகள்தான் பெண்களின் அழகை அளவிடுவதில் முதலிடம் பெறுகிறது என்கிறார். தமிழ்த் திரையுலகம் இன்று காட்டும் பெண்களின் தோற்றங்களை முன்கூட்டியே அறிந்துதான் இவர்கள் இப்படி எழுதி வைத்துச் சென்றிருப்பார்களோ!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |