செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : உணவே விஷமாகவும்,...
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  'ஒருவரது உணவு மற்றவருக்கு விஷம்'

  ஒருவர் உண்ணும் உணவே மருந்தாகிறதென்று திருமூலர் சொல்லியிருப்பதாகப் படித்திருக்கிறேன். ஆனால், உணவே விஷமாகியும் விடுகிறது. 'ஒருவரது உணவு மற்றவருக்கு விஷம்', (One's food another's poison) என்னும் ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறதா?! ம்,.. ஒருவருக்கு ஒத்துக்கொள்வது மற்றவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதுமுண்டுதான். ஒரே உணவைச் சாப்பிட்டவர்களில் சிலருக்கு மட்டும் உடல்நிலை சரியில்லாமல் போகிறதல்லவா!

  சிங்கப்பூரர்களின் வாழ்வின் ஒரு முக்கியப்பகுதி 'சாப்பிடுதல்'. கவனிக்க ! சமைத்தல் இல்லை, 'சாப்பிடுதல்' Hawker Centerமட்டுமே. இவர்கள் பெரும்பாலும் உணவகங்களில் தான் உண்கின்றனர். இங்கு ஹாக்கர் ஸெண்டர் (hawker centre) எனப்படும் மலிவுவிலை உணவகங்கள் ஏராளம் உண்டு. இவ்வுணவகங்கள் சிங்கப்பூரின் கலாசாரச்சின்னங்களாகவே திகழ்கின்றன என்றால் நிச்சயம் அது மிகையில்லை. இங்கு வரிசையாக ஏராளமான
  உணவகங்களைக்கொண்ட 'glutton's centre' (தீனிகள் மடம் - இது சொந்த மொழியாக்கம் !) என்றொரு சாப்பாட்டுப்பிரியர்களுக்கான இடமிருக்கிறது. அங்கு வேலைசெய்யும், சமைக்கும் ஆட்கள், கண்மூடக்கூட நேரமிருக்காது. 'நீங்கள்ளாம் வீட்டுக்குப் போனாத்தானே நாங்க கொஞ்சமாவது தூங்கிட்டு நாளைக்கு வேலைசெய்யமுடியும்?" என்று அழாக்குறையாகக் கேட்பார்களாம். இருபத்திநான்கு மணிநேரமும் வாடிக்கையாளர்கள் வந்தவண்ணமிருப்பர்.

  சீனர்களின் உணவுப்பழக்கத்தை அறிந்தவர்கள் பலரைப்போல நானும் வியப்பதுண்டு. சாதம் இருக்கும் கிண்ணம் மட்டும் தான் அவர்கள் தனித்தனியாக வைத்துக்கொள்வார்கள். சாப் ஸ்டிக்குகளும் (chop sticks)தான். ஆனால், குழம்பு, காய்கறி, இறைச்சி போன்ற சாதத்துக்கான பலவிதச் சேர்க்கைகளுக்குப் பொதுவாய் ஒரு பெரிய பாத்திரம் இருக்கும். மேசையில் சுற்றியமர்ந்துகொண்டிருப்பவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு வாயிற்கும் அவரவர் சாப் ஸ்டிக்குகளைக் கொண்டே எடுத்துக்கொள்வர். இந்தப் பழக்கம் சகாதாரக்குறைவு என்று போன வருட 'சார்ஸ்' சமயத்தில் சீனர்களாலேயே இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சார்ஸ் போனதும் வந்த விழிப்புணர்வும் போனது. அடிப்படைக் கலாசாரம் எப்போதுமே அவ்வளவு எளிதில் மாறாதில்லையா, அதான் போல !

  இங்குள்ள உணவகங்களுக்கும் ஈரச்சந்தைக்கடைகளுக்கும் சுகாதார அமைச்சிலிருந்து திடீர் சோதனைகள் செய்ய அதிகாரிகள் அடிக்கடி வருவர். விதிமுறைகளுக்குட்படாத உணவக உரிமையாளர்களுக்கு உடனே அபராதம் தீட்டிவிடுவர். அத்தகைய கடைகள் வழியாகச்செல்லும் போது, நா§னகூட சிலசமயங்களில்  திடீர் பரபரப்பு ஏற்படுவதைப்பார்த்திருக்கிறேன். வரிசையாக இருக்கும் அக்கடைகளின் முதல் கடைக்கு அதிகாரி
  வந்திருக்கும் செய்தி மளமளவென்று பரவி அடுத்தடுத்த கடைகள் உஷாராகும். மெத்தனமாய் விட்ட சில வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்கும்.

  மூடிவைக்கவேண்டியவற்றை ஒருவர் மூடுவார். இன்னொருவர் பதட்டத்தில் ஒன்றும் புரியாமல் சரசரவென்று துணியை வைத்து ஏற்கனவே சுத்தமாயிருக்கும் மேடையைத்துடைப்பார். முதலாளி மற்றும் தொழிலாளிகளின் கண்கள் அங்குமிங்கும் அலைந்து சுகாதார அதிகாரியின் கண்களின் தென்படக்கூடியவற்றை ஆராயும். அதிகாரி அவ்வட்டாரத்திலிருந்து போனதும் தான் வழக்கமான இயல்புநிலை திரும்பும்.

  சுகாதார அமைச்சு சுகாதார விதிமுறைகளை மீறினால் அதிகபட்ச அபராதமாய் ($2000) 2000 வெள்ளிகளைக் கரக்கும். மீண்டும் மீண்டும் அதே உணவகத்தில் சுகாதாரக்கேடுகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, அபராதத்தொகை கூடியபடியிருக்கும். உணவக உரிமம் ( licence) ரத்தாகியும்விடக்கூடும். ஒரு நாளைக்கு ஒருவராவது உணவினால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்படுகிறார் சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில். ஒரு மாதத்திற்கு சுமார் 92 உணவகங்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகின்றன. போன வருடம் சார்ஸினால் மக்கள் உணவகங்களைத் தவித்ததால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 61 என்றிருந்தது இந்த எண்ணிக்கை. பலர் அமைச்சிடம் தெரிவிக்காமல் விட்டுவிடுவதால், இந்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையைவிடக் குறைவே என்கிறது அமைச்சு.

  சுகாதார அமைச்சின் இத்தனைக் கெடுபிடிகளையும் தாண்டி இவ்வுணவகங்களில் உண்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். '·புட் பாய்சனிங்'  (உணவு ஒவ்வாமை/ஒத்துக்கொள்ளாமை) ஆகி அவதிப்படுபவர்கள் டான் டோக் செங் மருத்துவமனையின் அவசரபிரிவுக்குத் தான் வருகிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் கடந்த இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் ஒரு வேளை உணவையாவது இவ்வுணவகங்களில் உண்டவர்களாகயிருக்கிறார்கள். இவ்வருடம் மட்டும் 1048 பேர் ·புட் பாய்சனிங் என்று அவசரப்பிரிவில் சேர்ந்தனர். இது போன வருடத்தையும்விட இருமடங்கு. ஆனாலும், பொதுமக்களின் சுகாதாரத்துக்கு ஆபத்து இல்லை என்கிறது சுகாதார அமைச்சு. போன வருடம் எண்ணிக்கை குறைய 'சார்ஸ்' தான் காரணம். மக்கள் வேறுவழியில்லாமல் வெளியில் உணவுண்பதைத் தவிர்த்திருந்தனர்.

  38 வயது ஜோனதன் ட்ரேக் ஒரு புகைப்படக்கலைஞர். இவர் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் 'சைனா டௌன்' வட்டாரத்தின் பிரபல உணவகம் ஒன்றில் ஜெலாடினில் (GELATIN) சமைக்கப்பட்ட ஆறிப்போன பன்றிக்கறியை உண்டார். ஒரு வாரம் படுக்கைக்கும் கழிவறைக்குமாக அல்லாடியபடியிருந்தார். உணவகங்களில் உண்டு அமைச்சுக்குத் தெரிவிக்காமல் மௌனமாய் அவதிப்பட்டு மீளும் பலரைப்போலில்லாமல் இவர்
  அமைச்சிடம் விஷயத்தைச் சொன்னார். அதிகாரிகள் அங்கிருந்த இறைச்சியைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் அந்தப் பன்றிக்கறியில் சால்மொனெல்லா (salmonella) என்ற பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனே உணவகத்துக்கு 150 வெள்ளி அபராதமும் கரும்புள்ளிகளும் (demerit points) வழங்கப்பட்டது. ராபின் குக் (Robin Cook) எழுதிய 'டாக்ஸின்' (toxin) படித்ததுண்டா?! படித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த விஷயமெல்லாம் மிகமிகச்சாதாரணமாகத் தோன்றலாம் !

  ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உண்ட உணவினால் இறந்தார். கடந்த மூன்றாண்டுகளில் இது 'உணவே விஷமான' முதல் மரணம். இவர் 'லோயாங் ட்ரைவ்' என்ற தன் வேலைத்தளத்தில் வயிற்று வலியால் துடித்திருக்கிறார். பிறகு மருத்துவமனையில் இதயம் மற்றும் சுவாசக்குழாயில் ஏற்பட்ட கோளாரினால் இறந்திருக்கிறார். இவருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்ற 18 பேர் பிழைத்துள்ளனர். எல்லோருமே வாந்தி வயிற்றுப்போக்கு ஆகிய உபாதைகளால் அவதியுற்றிருந்தனர். இவர்கள் எல்லோருமே சொந்தமாகச் சமைத்துச் சாப்பிடுபவர்கள்.

  சமைத்து வெகு நேரமாகியிருந்த உணவை அன்று அவர்கள் சாப்பிட்டதே காரணம் என்கிறது அமைச்சு. சமைக்கப்பட்ட உணவு இரண்டு மணிநேரத்திற்குமேல் இருப்பின் அது விஷமாகிறது என்பதே அமைச்சின் அக்கறையான எச்சரிக்கை. குளிப்பதனப்பெட்டியில் வைத்துவிட்டால், பிறகு எடுத்து சூடாக்கி உடனே உண்ணச்சொல்லியும், இறைச்சிகளை உறைநிலையில் வைத்து, வெளியில் எடுத்ததுமே சமைத்துச் சாப்பிட்டுவிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

  ஒரே உணவை உண்ட மற்ற 18 பேர் பிழைக்க இந்த ஒருவர் மட்டுமே இறந்ததைப்பார்க்கும்போது One's food another's poison என்னும் ஆங்கில பழமொழி எத்தனை உண்மை என்றே வியக்கத்தோன்றுகிறது இல்லையா! ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |