செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : டி.வி சேனல்
  -
  | Printable version |

  நமக்கு எப்பொழுதுமே அடுத்தவர்களின் செயல்பாடுகளில் ஒரு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டு. குறிப்பாக சினிமா, அரசியல், டிவி, விளையாட்டு என்று இப்பட்டியல் நீளும். இதையே மையமாக வைத்து தமிழோவியத்தில் இந்த புதிய பகுதியை தொடங்கியுள்ளோம்.

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி. இதைப் பற்றி பேசாத வாயே கிடையாது - இதைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை.

  1. நீங்கள் ஒரு டி.வி சேனலின் ப்ரோகிராம் டைரக்டராக இருந்தால் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தயாரிப்பீர்கள்?


  Pranavathyப்ரணவி (வாசகி)

  அல்வா டிவி

  * காலை அல்வா (மங்கள இசையைத் தொடர்ந்து உடலை ஆரோக்கியமாகப் பேணுவது பற்றிய நிகழ்ச்சி)
  * அல்வா டி.வியின் காலைச் செய்திகள் (நடுநிலையான செய்திகள்)
  * இந்த நாள் அல்வா நாள் (யாரிடமும் அல்வா வாங்காமல் தப்பிப்பது எப்படி? என்று திரு.அல்வாசிவம் விளக்குகிறார்.)

  -- மெகா சீரியல் நேரம்

  - சுயிங்கம். (இத்தொடரை ஆரம்பித்து 3 வருடங்களாகியும் கதை என்ன என்று இயக்குனர் உட்பட யாருக்கும் தெரியாது.)
  - இழுபறி. (இத்தொடரின் இயக்குனர்கள் சுமார் 15 தடவை மாற்றப்பட்டுள்ளனர். அதனால் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இழுக்----கிறார்கள்.)

  * பழைய திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய அல்வா கொடுத்து சாதனைப் படைத்த திரைப்படம் ஒளிபரப்பப்படும்.
  * அல்வா கொடுத்த பாடல். (திரைப்பட நடிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கடைசியில் அல்வா கொடுத்த பாடல்கள் ஒளிபரப்பப்படும்) 
  * இந்த வார அல்வா உலகம். (இந்த வாரம் அல்வா கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட்.)
  * மிட்நைட் அல்வா. (அல்வா கொடுத்த திரைப்படங்களிலிருந்து கசமுசா பாடல்கள்)

  இவ்வாறு  மக்களின் வாழ்க்கைக்கு  அல்வா கொடுக்கும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படாமல் பார்த்துக்கொள்வேன். பகலில் மெகாத் தொடர்ளை ரத்து செய்து, குழந்தைகள் பராமரிப்பு, சுயதொழில் செய்து சொந்தக்காலில் நிற்பது எப்படி, மருத்துவ நிகழ்ச்சிகள், எளிய உடற்பயிற்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வேன்.

  மாலைவேளைகளில் மாணவர்களுக்கு உபயோகமான செய்தித் துணுக்குகள், க்விஸ், வாழ்க்கையில் முன்னேறி¢யவர்கள் பற்றிய கருத்தரஙம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும்.

  சினிமா நிகழ்ச்சிகள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வேன். சினிமாவே வாழ்க்கை ஆகது. It's just an entertainment. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சினிமாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவேன். (இல்லையென்றால் எங்கள் சேனல் என் வேலைக்கு அல்வா கொடுத்துவிடுமே !!)


  Boston Balajiபாஸ்டன் பாலாஜி (எழுத்தாளர்)

  சன் டிவியில் தினம் ஒரு ஸ்பெஷல் படம் போடுவது போல், 'தினம் ஒரு சிறப்பு நாள்' என அறிவிப்பேன்.

  தீனி திங்கள்

  - முழுக்க முழுக்க சாப்பாட்டுக்காகவும், சாப்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒதுக்கப்படும் தினம்.
  - லேட்டாக வந்த கணவன், மனைவியிடம் எவ்வாறு உணவு கேட்கிறான்; மனைவி எவ்வாறு கணவனை சமைக்க வைக்கிறாள்; சமைக்கத் தெரியாத காதலி எவ்வாறு காதலனை, சரவண பவன் 'டேக்-அவுட்' டின்னரை வைத்து ஏமாற்றுகிறாள்; மாமியார் எவ்வாறு மருமகளின் டயாபடிஸை உருவாக்குகிறாள்; அலுவலில் எவ்வாறு மாற்று சமையல்களின் சுவையை விரும்பும் மானேஜரை, காரியதரிசிகள் சமாளிக்கிறார்கள்; என்பதை உருக்கமாக பத்து நடிகர்களை வைத்துக் கொண்டு, இருபது சீரியல்களில் மாற்றி மாற்றி நடிக்க வைத்து, சைனிஸ், ஜப்பானிஸ், இத்தாலியன், மெக்ஸிகன், கிராமம், மைக்ரோவேவ், ·பைவ் ஸ்டார் என்று விதவித டைட்டில்களில் காட்டப்படும்.

  பாலிடிக்ஸ் புதன்

  - அரசியல் நம் வாழ்வில் ஊடுருவதை நிஜ நாடகங்களாக காட்டும் சீரியல்கள் இன்று காண்பிக்கப்படும்.
  - பத்து பேரைக் கொண்டு ஆரம்பிக்கும், இந்த ரியாலிடி ஷோ, காலையில் இருந்து நேரடி ஒளிபரப்பாகும்.
  - கவர்னர், 'ரியல்' முதலமைச்சர், 'ரப்பர்ஸ்டாம்ப்' முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், பத்திரிகையாசிரியர், தொலைக்க(¡)ட்சி செய்தி எடிட்டர், உச்சநீதிமன்ற நீதிபதி, சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய பாத்திரங்கள் கொடுக்கப்படும்.
  - நிகழ்ச்சியின் இறுதியில், பார்வையாளர்கள் வாக்கெடுப்பில், யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கிறதோ, அவருக்கு 'ஒரு நாள் முதல்வர்' பதவி மெய்யாலுமே வழங்கப்படும்.

  ·பாரின் ·ப்ரைடே

  - 'தமிழகம் கும்புடுகிறது' நிகழ்ச்சியில் சிகாகோ வானிலை அறிக்கையும், கானா-வின் தலைப்புச் செய்திகளும், 'பாஸ்டா புட்டனெஸ்கா'
  செய்முறையும், ஜான் ஹார்வார்ட் ஜெயிப்பாரா என்பவையும் இடம்பெறும்.
  - மொழிபெயர்க்கப் படாமல், 'ஒய் து மாமா தம்பியேன்' போன்ற வேற்றுமொழிப் படங்கள் காட்டப்படும்.
  - மொழியாக்கப்பட்ட 'சவுத் பார்க்' போன்ற தொடர்கள் வரும்.
  - ஜே லீனோவும், டேவிட் லெட்டர்மேனும் பா.ம.க., வை.கோ., போன்றவர்களை நக்கலடித்து, சிம்ரனை பேட்டி கண்டு, டிப்புவின் இசை நிகழ்ச்சியை வைத்துக் கொள்வார்கள்.

  சாம்பிளுக்கு மூன்று நாள்களின் நிகழ்ச்சிகள் மட்டுமே சொல்லியிருக்கிறோம். மற்ற நாள்களின் நிகழ்ச்சிகள், போட்டி தொலைக்காட்சிகளைக் கண்டு, சுடப்பட்டு, எங்கள் நடிக, நடிகையரைக் கொண்டு, புத்தம் புதுசாக, 'புதுசு... கண்ணா... புதுசு' என்று  தொகுக்கப்படும்.


  Rajini Ramkiஜெ. ரஜினி ராம்கி (எழுத்தாளர்)


  சீரியலில் சிக்கி சீரழியும் மக்களை வேறு பக்கம் திருப்புவது என்கிற எண்ணமே பெரிய தேச சேவையாகத்தான் இருக்கும். விஜய் டிவி ஏதோ கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறது. பெரும்பாலான மக்கள் சீரியலுக்கே ஜே போடுவதால் விளம்பரதாரர்களின் கடைக்கண் பார்வை பெறுவது கஷ்டமான காரியமாகிவிட்டது. கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வரை யூகி கொஞ்சம் வெரைட்டி கொடுத்து அசத்திக் கொண்டிருந்தார். ஊர்வசி அந்த இடத்திற்கு வந்து ரொம்ப காலமானாலும் இன்னும் பிரபலமாகவில்லை. வட இந்திய யூகி சேதுவான ஷேகர் இன்னும் ஸ்டார் பிளஸில் அசத்திக் கொண்டிருக்கிறார். டீஸெண்டாக உருப்படியாக ஒரு அரசியல் விவாதம் நடத்திக் கொண்டிருந்த விஜய் டிவி கோபியையும் மூட்டை கட்டிவிட்டார்கள். சின்ன திரை உருப்பட சில வழிகள்...

  1.  காமெடி நிகழ்ச்சிகளை ஊர் தூங்கும் நேரத்தில் நடத்துவது

  2.  போன் போட்டு கடிக்க சொல்லி கேட்பது அல்லது தானே மெனக்கெட்டு கடிப்பது

  3.  உலகத்தில் ஆண் வர்க்கமென்று ஒன்று இருப்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது

  4.  அரதப்பழசான காமெடி காட்சிகளையும் லேட்டஸ்டான காமெடி காட்சிகளையும் மறந்துவிட்டு கவுண்டமணியையும் செந்திலையும் பிடித்து இன்னும் தொங்கிக்கொண்டிருப்பது.

  இதையெல்லாம் கொஞ்சமாவது தவிர்த்தால் எல்லோரும் பார்க்கலாம். இல்லாவிட்டால், பொழுது போகாத என் பெரியம்மாவுக்கும் ஊர்க்கதை பேசும் அத்தைக்கும் மட்டுமே பிடித்தமான சங்கதியாகிவிடும் நம்மூர் டிவிக்கள்!


  திருமலை ராஜன் (வாசகர்)

  நிகழ்ச்சிகளை பொழுது போக்கு, இலக்கியம், கலை, அரசியல், சிறுவர், வணிகம் / பொருளாதாரம், உடல் நலம் / ஆரோக்கியம், சூழல், பாரம்பரியம் போன்ற பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளப்படும். நான் கீழெ குறிப்பிட்டுள்ள அனைத்தும் தற்போதைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏதாவதொரு வடிவில் வந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதையே மக்களை தொடர் நாடகம், சினிமா போன்ற மாயைகளிலிருந்து வெளியே இழுத்து வந்து, விழிப்புணர்வு ஊட்டக்கூடிய, சுவாரசியமான நிகழ்ச்சிகளை அமைப்பது முக்கிய நோக்கமாக இருக்கும்.

  1. சமுதாயப் பிரச்சினகளுக்கும் அதன் தீர்வுகளுக்கும், பாரம்பரிய கலை இலக்கியங்களுக்கு முக்கியத்துவமும் சினிமா, நாடகம் போன்றவற்றிற்கு குறைந்த நேரமும் ஒதுக்கப்படும்.

  2. பொழுதுபோக்கு அம்சங்களில் தேவையேற்பட்டாலன்றி மெகா சீரியல்கள் போன்ற அபத்தங்கள் இடம் பெறாது. பொன்னியின்செல்வன் போல் ஒரு சரித்திரத் தொடர் ஏதாவது காட்டப்பட்டால் ஒழிய, மிக நீண்ட அபத்த நாடகங்கள் தவிர்க்கப் படும். நல்ல ரசனைக்குரிய யதார்த்த நாடகங்கள் மட்டுமே குறுகியகாலத் தொடர் நாடகங்களாகக் காட்டப்படும்.

  3. இதுவரை வந்த தரமான சினிமாக்கள் அனைத்தும் ஒளிபரப்பப்படும். அதனுடன் அந்தப் படங்களைக் குறித்த விமர்சனங்களும் வைக்கப்படும். வேற்று மொழியில் வந்த தரமான படங்களும் தக்க விமர்சனங்களுடன் அளிக்கப் படும். சினிமாவில் உள்ள ஒளி அமைப்புக்கள், காமிரா கோணங்கள், இயக்குனரின் முத்திரை பதிக்கப் பட்ட இடங்கள், நுட்பமான காட்சியமைப்புக்கள் போன்றவற்றை விளக்கி அவற்றை ரசிக்கும் அளவிற்கு பார்வையாளர்களின் ரசனை அதிகரிக்கச் செய்யும் விதமாக திரைப்படங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் பயன்படுத்தப் படும்.

  4. இலக்கியப் பகுதிகளில், தரமான படைப்புகளும், படைப்பாளிகளும் உரிய மரியாதையுடன் அறிமுகப் படுத்தப் படுவார்கள். படைப்பாளிகள் அவர்களை நன்கு அறிந்த, படித்த விமர்சகர்களால் மட்டுமே அறிமுகப் படுத்தப் படுவார்கள். படைப்புகள் விமர்சிக்கப் படும் பொழுது வாசகர்களும் கலந்து கொள்வார்கள். அயல் நாட்டு/மொழி இலக்கியங்களும் அறிமுகப்படுத்தப் படும். அந்த மாதம் வந்த முதல் பத்து நல்ல படைப்புகள், புத்தகங்கள் போன்றவையும் ஆராயப் படும்.

  5. தமிழ் நாட்டில், இந்தியாவில் இருக்கும் அனைத்து வரலாற்று, ஆன்மீக, இயற்கை சுற்றுலாத் தலங்கள் தக்க முறையில் அறிமுகப் படுத்தப் படும். அந்த இடம், அதன் முக்கியத்துவம், வழிகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற தகவல்களும் அளிக்கப் படும். பரவலாக அறியப் படாத இடங்களிலிருந்து, பிரபலமான இடங்கள் வரை அனைத்து இடங்களும் காட்டப்படும்  அவ்வாறு காட்டப்படும் இடங்களிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆலோசனைகளும் வழங்கப்படும். 

  6. சுற்று சூழல் பற்றிய நிகழ்ச்சிகளுக்கு அன்றாடம் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாசு கேடுகளின் விளைவுகளை மக்களின் மனதில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் காட்டப்பட்டு அதை மக்கள் முற்றிலும் தவிர்க்கும் வண்ணம் விழிப்புணர்வுள்ள நிகழ்ச்சிகள் தொகுக்கப் படும்.  சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பெற்ற மக்களையும் அதனால் அவர்கள் அடையும் பயன்களையும் இந்த நிகழ்ச்சிகளில் காண்பிக்கப் படும். அது தவிர, சூழல் சீர்கேடுகள் உள்ள இடங்களும், அழிந்து வரும் இயற்கை வளங்களைப் பற்றிய உண்மைகளும் இந்த நிகழ்ச்சியில் வெளிக் கொணரப்படும். விலங்கினங்களைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் அது குறித்தான விழிப்புணர்வுகளுக்கும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் கொடுக்கும். அல்லது காடுகள், கடல் வளங்கள், விலங்குகள் குறித்தான நிகழ்ச்சிகள் தனியாகவோ வழங்கப்படும்.  சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள், விதிகளை மீறும் நிறுவனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வெளிக்கொணரும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். 

  7. பள்ளிகளுக்குச் சென்று சிறுவர்களின், கனவுகள், கண்டுபிடிப்புகள், எண்ணங்கள் போன்றவற்றை அலசும் நிகழ்ச்சிகள் வழங்கப்படும். சிறுவர்களின் மனோதத்துவங்கள், பெற்றோர்களின் அனுபவங்கள், அவர்களின் பிரச்சினைக்குரிய தீர்வுகள் போன்றவை அலசப் படும். சிறுவர்களுக்குரிய கார்ட்டூன்களில் நமது புராணங்களும், இதிகாசங்களும், நீதிக் கதைகளும், தியாகிகள்/சாதனையாளர்களின் வரலாறுகளும் அதிகம் இடம் பெறும். கல்வி நிலையங்களின் தரம் கண்காணிக்கப் பட்டு மக்களுக்கு அதன் முடிவுகள் கொண்டு செல்லப்படும்.

  8. செய்திகளில் பரபரப்புக்கு முக்கியத்துவன் அளிக்கப்படாது. செய்திகளின் பின்புலம் அலசப் படும். ஒரு நிகழ்வின் சாதக, பாதகங்கள், மக்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்படும். அரசியல் நிகழ்வுகள் எவ்விதச் சாய்வுகளும் இன்றிக் காட்டப்படும். ஆளும் கட்சியினரின் தவறுகள் தயவு தாட்சண்யமின்றிக் காட்டப்படும் அதே நேரத்தில் அதே விஷயத்தில் எதிர்க்கட்சியினரின் கடந்தகால, நிகழ்கால லட்சணங்கள் என்ன என்பதும் தோலுரித்துக் காண்பிக்கப் படும். ஊழல்களும், வழக்குகளும், அரசியல்வாதிகளின் முன்னாள், இன்னாள் நிலைமைகளும் தெளிவாகக் காட்டப்படும். முக்கியமாக ·ப்ளாஷ் பாக், ·பாலோ அப், போஸ்ட் மார்ட்டம் மூன்றும் ஒவ்வொரு அரசியல் செய்தியிலும் இடம் பெறும். முக்கியமான வழக்குகள் பற்றி மக்களுக்கு தினமும் நினைவு கூறப்படும். மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் பலம் என்னும் நிலை மாற்றப்படும். அவர்கள் திருந்தும்வரை அல்லது தண்டிக்கப்படும் வரை பழைய ஊழல்களும் குற்றசாட்டுக்களும் அதன் இன்றைய நிலைகளும் மக்களின் கவனத்திற்கு தினமும் வைக்கப்ப்டும். தினமும் ஒரு மக்கள் பிரதிநிதியின் செய்ல்பாடுகளும், திறமையும், அவரது சொந்த வளர்ச்சியும் ஆராயப்படும்.

  9. இன்றைய ஊழல் என்றொரு நிகழ்ச்சி தினமும் இடம் பெறும். அதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்கள் அனைத்தும் தக்க ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும். யார், யார் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டிருக்கின்றனர் என்னும் தகவல்கள் அன்றாடம் பட்டியலிடப்படும்.  அவர்கள் தண்டிக்கப்டும் வரை அந்த வழக்கின் முன்னேற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேங்கியுள்ள வழக்குகளின் பட்டியல் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு, அதன் காலதாமதம் தொடர்ந்து நினவுறுத்தப்படும். லஞ்சங்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படும். ஊழல்வாதிகள் கையும் களவுமாகப் பிடிபடுவது இந்த நிகழ்ச்சியில் காட்டப்படும்.

  10. கலைகளில் அழிந்து வரும் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவன் கொடுக்கப் பட்டு அவர்களது நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

  11. வாழ்க்கை அனுபவங்கள், வரலாறுகள், தொழில்நுட்ப பிரமாண்டங்கள், பற்றிய குறும் படங்கள் நிறைய இடம் பெறும். பழைய கலைஞர்கள் தொடர்ந்து நினைவு கூறப்படுவார்கள்.

  12. பழமையும் பாரம்பரியயும் உள்ள விஷயங்களுக்கு முக்கியத்துவத்துவம் கொடுத்து ஒரு நிகழ்ச்சி அமையும். நாடி ஜோதிடம்,வேதங்கள், சித்த மருத்துவம், குறி சொல்லுதல்,பில்லி சூனியம், மாந்திரீகம், பாம்புபிடாரர்கள், குடுகுடுபாண்டிகள்,  பரம்பரை வைத்தியங்கள் போன்ற எண்ணற்ற பரம்பரை ரகசியங்களை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடாமல் அவ்ற்றின் உண்மைகளை அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி முயலும். அது போல் அழிந்து வரும் சிற்பங்கள், ஓவியங்கள், கோவில்கள், கலைக் கூடங்கள், சுவடிகள், கல்வெட்டுக்கள் போன்றவற்றிற்று இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் கொடுத்து அவை புனரமைப்புகள் பெற உதவும்.

  13. விவசாயிகளுக்கு பயன்படும் ஒரு நிகழ்ச்சியில் புதிய லாபம் தரும் பயிர் வளர்ப்பு குறித்த அறிமுகங்களும், அதைப் பயன்படுத்தியவர்களின் வெற்றி/தோல்வி குறித்த தகவல்களும் தொடர்ந்து அளிக்கப் படும். நீர் மேலாண்மைக்கும், தரிசு நில/வறண்ட நிலப் விவசாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதன் வெற்றி, தோல்வி, சாதக பாதகங்கள் அலசப் படும்.

  14. ஆள்பவர்களிடமும், அதிகாரிகளிடமும் மக்களின் குறைகள் கொண்டு செல்லப்படும். அவர்கள் எடுக்கும் அல்லது எடுக்காத நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மந்திரிகளிடமும்/அதிகாரிகளிடமும் மக்கள் கேள்விகள் கேட்கும் நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படும். அவர்களின் பதில்களும் நடவடிக்கைகளும், கண்காணிக்கப்பட்டு அவற்றின் நிலவரம் தொடர்ந்து அளிக்கப்படும். தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்களிடையேயும் நேருக்கு நேர் நிகழ்த்தப்படும். வேட்பாளர்களின் தகுதிகள் தேர்ந்தெடுக்கப் பட்ட கேள்விகள் மூலம் அலசப் படும். வேட்பாளர்களின் முழு ஜாதகமும் மக்களுக்கு அளிக்கப்படும். அவர்களது கடந்தகால, நிகழ்கால, நடவடிக்கைகளும், அனைத்து பிண்ணணிகளும்,சார்பு நிலைகளும், சொத்து, சொந்தம், நட்பு, வழக்குகள் போன்ற அனைத்து விபரங்களும்  மக்களிடம் ஒளிவு மறைவின்றி வைக்கப்படும்.

  15. பொருளாதார அடிப்படைகள், பங்குச் சந்தை வியாபார நுணுக்கங்கள் முதலியவற்றை அலசும் நிகழ்ச்சிகள், விலைவாசி நிலவரங்கள், கொள்முதல் தகவல்கள், போன்ற வணிக நிகழ்ச்சியொன்று தினமும் இடம் பெறும்

  16. மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் விதத்தில் ஏமாற்று நிறுவனங்கள், ஏமாற்று விளம்பரங்கள், போலிகள், தர நிர்ணயம் செய்யும் விதங்கள் போன்றவற்றை விளக்கும் ஒரு நிகழ்ச்சிகள் பெறும். மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட விபரங்களும், உரிமைகளும் சுவையான நாடகங்கள் மற்றும் குறும் படங்கள் மூலம் விளக்கப்படும்.

  17. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நடைபெறும் முன்னேற்றங்கள் குறித்தான செய்திகள் மக்களிடம் எளிய விதத்தில் கொண்டு செல்லப்படும்.

  18. இளைஞர்களுக்குத் தேவையான சுய முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள் உரிய முறையில் வழங்கப்படும். உலகளாவிய செய்திகளும் தேவைகளும் வழங்கப்படும்.

  19. அரசாங்க அமைப்புகளை சீர்திருத்தவும், ஊழல், சிகப்பு நாடா முறைகள், கால தாமதம் போன்ற அமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அலசவும், வரையறுக்கவும் ஒரு நிகழ்ச்சி ஒதுக்கப்படும்.

  20. கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகளும் இருப்பது உணர வைக்கப்படும். அத்தகைய விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பபடும். பிற விளையாட்டுக்களையும், தடகளப் பந்தயங்களையும் முன்னேற்றுவதற்கான பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளும், உடல்பயிற்சி, ஆரோக்கிய உணவு, மருத்துவ விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளும் அமையும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |