செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  அமெரிக்கா Matters : குடியரசுக் கட்சி மாநாடு
  - மீனா
  | Printable version |

  Protest aganist Bushகடந்த நான்கு நாட்களாக ஆளும் குடியரசு கட்சியின் தேர்தல் மாநாடு நியுயார்க் நகரில் பரபரப்பாக நடந்து வருகிறது. மாநாடு நடந்து வரும் இடத்திற்கு நேர் எதிர் தெருவில் தான் எனது அலுவலகம் என்பதால் மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த பல சுவாரஸ்யமான அனுபவங்கள்.

  மாநாட்டில் ஆளும் கட்சியினர், ஜனநாயக கட்சி மற்றும் அதன் வேட்பாளரான ஜான் கெர்ரியை திட்டித் தீர்த்தனர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த மாநாட்டில் கவனித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.

  * முதல் நாள் நிகழ்ச்சியில்  ·பாரெண்ஹீட் 9/11 படத்தை இயக்கிய மைக்கேல் மூர் கலந்து கொண்டது. பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்துக்கொண்டு அவருடைய பாதுகாப்பு பற்றி கேட்ட போது "I hadn't even thought about it -- you're making me nervous," என்று நகைத்தபடியே பதில் சொன்னது.

  * இரண்டாம் நாள், அதிபர் புஷ்ஷின் இரட்டைப் பெண்கள் (ஜென்னா, பார்பரா) மேடையில் தோன்றி, தந்தைக்கு ஆதரவாக தங்களின் 'கன்னி'ப் §பச்சை தொடங்கினர்.

  * அவர்களைத் தொடர்ந்து கலிபோர்னியா கவர்னர் அர்நால்டு ஹீரோத்தனமாய் பேசிவிட்டுப் போனார்.

  * துணை ஜனாதிபதி டிக் சென்னி மாநாட்டு வேலைகளை பம்பரமாக சுழன்று கவனித்தார் என்று பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

  * மாநாட்டை எதிர்த்த எதிர்ப்பாளர்கள் பலர் பல விதங்களில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். ஞாயிறன்று நடைபெற்ற ஆர்பாட்டக்காரர்கள் பே¡ராட்டம் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியாக நடந்தது என்றாலும் செவ்வாய் அன்று போரை எதிர்க்கும் கோஷ்டி ஒன்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று போராட்டம் நடத்தி (அதில் ஏகப்பட்ட கலவரம்-அடிதடி நடவடிக்கைகள்) போக்குவரத்திற்கு ஏராளமான இடையூறு செய்து பொதுமக்களை முகம் சுளிக்கவைத்தார்கள்.

  * புஷ் எதிர்பாளர்களில் சிலர் கொஞ்சம் ஓவராகவே அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி தங்கள் எதிப்பைக் காட்டியது ரசிக்கத்தக்கதாக இல்லை.

  * வரலாற்றில் முதன் முறையாக என்று சொல்லும் அளவிற்கு இன்று மாலை வரை சுமார் 1700 ஆர்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

  * பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் போலீசார் பல தெருக்களை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் (எந்த ஒரு வாகனமும் அந்தத் ¦தருக்கள் வழியாகச் செல்ல அனுமதி கிடையாது) வைத்திருந்தார்கள். மாநாட்டிற்காக நியூயார்க் நகரம் முழுவதிற்குமாக 30,000 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக மாநாடு நடக்கும் இடத்தைச் சுற்றிலும் சுமார் 10,000 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும் போலீஸ் தலைதான்.

  * கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் மாநாடு நடந்த இடத்தில் பல கடைகள் 4 நாட்களாக மூடப்பட்டிருந்தன. என்னதான் நியூயார்க் கவர்னரும், மேயரும் மாநாடு நடந்ததன் மூலம் நியூயார்க் நகருக்கு வருமானம் கிடைத்துள்ளது என்று கூறினாலும், குறிப்பிட்ட சில இடங்களில் கடை வைத்திருப்போர் 4 நாட்களாக பலத்த நஷ்டப்பட்டது அப்பட்டமான உண்மை.

  * மாநாடு நடக்கும் இடத்தில் இப்படியென்றால், நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் சுற்றி நல்ல நாளிலேயே நடப்பதற்கே ஒரு வழிப்பாதைதான். தற்§பாது அதற்கும் வைத்தார்கள் வேட்டு. அந்தப் பகுதியில் நடக்கவே தடை. போதாத குறைக்கு பார்த்தாலே நடுக்கம் வரும் அளவிற்கு விதவிதமான வ¡கனங்களில் (கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள், குதிரை) அமர்ந்தவாறு கணக்கிலடங்காத அளவிற்கு போலீஸ்காரர்கள்.

  * ஏற்கனவே தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் நியூயார்க் நகரில் ஆளும் கட்சி ஏன் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி கழுத்தை அறுக்கிறார்கள் என்ற பலரது கேள்விக்கு - நியூயார்க் நகரம் எல்லா விதங்களிலும் பாதுகாப்பாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கவே இந்த மாநாடு என்பதே ஜனாதிபதி மற்றும் அவரது கட்சியினரின் பதில். ஆமாம்.... ஆயிரக்கணக்கில் போலீசைக் குவித்துவிட்டு, வருகிற போகிறவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு நகரம் பத்திரமாய் இருக்கிறது என்கிறார்களே!!! ஒரு சாதாரண நாளில் வந்து பாருங்கள் நியூயார்க்கின் பாதுகாப்பு நடவடிக்கைகளை. பிறகு சொல்லுங்கள் நியூயார்க் நகரம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறது என்று !

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |