செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : வேலைநிறுத்தம்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  அதிகாரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் விஞ்சியது எதுவுமில்லே... அரசு ஊழியர் கொடி பிடித்தால் ஆட்சியில இருக்கிறவங்க நடுங்கி போய்த்தான் ஆகணும்னு வாய் கிழிய பேசியபடி தாம்பரத்திலிருந்து கோட்டைக்கு வந்து போய்க்கொண்டிருந்த வயதான மாமாவின் குரல், மீட்டர் கேஜ் மாதிரி கேஜ் கன்வர்ஷனில் காணாமல் போய் ஒரு வருஷமாகிறது. குரைக்கிற நாய் கடிக்கவே கடிக்காது என்கிற உதாரணத்தை முதல்முறையாக தலைகீழாக மாற்றியமைத்தது ஆளும் அரசு. அதனால்தான் ஆளும் கட்சி, பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போனது என்கிற பட்டிமன்றமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். அரசு இறங்கி வரும் என்கிற நிலை மாறிப்போய் அரசு ஊழியர்கள் இறங்கி வந்து கெஞ்ச வேண்டிய சூழ்நிலை உருவானதே ஆச்சரியமான விஷயம்தான்.

  இந்தியா போன்ற ஜனநாயகம் ஜாஸ்தியாகவே இருக்கும் நாடுகளில் எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பது என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது. காந்திஜியோ, வேலைநிறுத்தங்களை கூடுமானவரை தவிர்க்கவேண்டும் என்கிறார். எங்கெல்லாம் வேலைநிறுத்தங்கள் அதிகமாகிறதோ அங்கெல்லாம் பரஸ்பர புரிதல் இல்லையென்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது என்கிறார் இந்த சமாதான தூதர். ஒழுங்கான முறையில் நடைபெறும் ஒரு நிறுவனத்தில் வேலை நிறுத்தம் ஏன் ஏற்பட§வ்ண்டும்? தொழிலாளிகளுக்கம் முதலாளிகளுக்கும் பரிபூரண நம்பிக்கை இருந்து பரஸ்பர மரியாதையும் சமத்துவ அங்கீகரிப்பும் இருந்துவிட்டால் வேலை நிறுத்தம் என்பது தேவையில்லாத விஷயமாகிவிடும் என்பது அவரது கருத்து.

  நல்லதொரு ஜனநாயக சமூகத்தில் சட்டமீறிய ஒழுங்கின்மைக்கோ வேலை நிறுத்தங்களுக்கோ இடமோ சந்தர்ப்பமோ இருக்காது. (ஹரிஜன், 1.2.1948)

  இதுபோன்ற சமத்துவ நிலையை எல்லா இடங்களிலும் நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். தவிர்க்க முடியாத பட்சத்தில் வேலைநிறுத்தங்களில் இறங்கும்போது சம்பந்தப்பட்ட தொழிலாளியோ அல்லது முதலாளியோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவரே அறிவுரையாக சொல்கிறார். வேலைநிறுத்தங்கள் நடைபெறும்போது முதலாளிகள் சாம, பேத, தான தண்டத்தை பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை குலைக்கச் செய்யும் காரியத்தை செய்வது இயல்புதான் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காரியங்களை முதலாளிகளால் எப்படி செய்ய முடிகிறது?

  'இந்தியாவில் முதலாளிகள் கூடியவரை இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், தொழிலாளரோ தொழிற்சங்கங்களும் அநேகமாக இன்னும் ஒன்றுபடாத நிலையிலேயே இருந்து வருகிறார்கள். ஆகையால் உண்மையான ஒருங்கிணைந்து பணியாற்றும் ஆற்றல் தொழிலாளருக்கு இல்லை' (ஹரிஜன், 31.4.46 )

  காந்திஜி இந்தியா வந்த புதிதில் ஏகப்பட்ட வேலைநிறுத்தங்களை பற்றி கேட்டறிந்தார். அப்போது நாட்டையே கலக்கிய வேலைநிறுத்தங்களான பஞ்சாப் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பம்பாய் வேலைநிறுத்தம். டாட்டா இரும்பு தொழிற்சாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், கோரக்பூர் வேலை நிறுத்தம் என பலதுக்கும் பொதுவான காரணமாக சம்பளம் போன்றவற்றை சொல்லலாம். சம்பளம் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடுவதில் தப்பில்லை என்று சொல்லும் காந்திஜி அதை முறையே எப்படி செய்வது என்பதையும் விளக்குகிறார்.

  1. வேலைநிறுத்தத்திற்கான காரணம் முதலில் நியாமானதாக இருக்கவேண்டும்.

  2. வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கிடையே நடைமுறைக்கு உகந்த கருத்து ஒற்றுமை இருக்கவேண்டும்.

  3. வேலைநிறுத்தத்தில் சேராதவர்களை கட்டயாப்படுத்தக்கூடாது.

  4. வேலை நிறுத்த காலத்தில் தொழிற்சங்க நிதியை கொண்டு வசதிகளைப் பெறாமல் தாங்களே பிழைப்பை சமாளித்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் ஒரு தற்காலிக தொழிலை ஏற்கவேண்டும்.

  5. வேலை நிறுத்தம் செய்திருப்பவர்களுக்கு பதிலாக வேலை ஏற்க போதுமான அளவு வேறு தொழிலாளர்கள் இருக்கும்போது வேலை நிறுத்தம் ஒரு பரிகாரமே அல்ல. அப்படிப்பட்ட நிலையில் குறைந்த கூலி கொடுக்கப்பட்டாலோ அல்லது அநியாயமாக நடத்தப்பட்டாலோ ராஜினாமா செய்து விடுவதுதான் நல்லது. (யங் இந்தியா 16.2.1921)

  பெரும்பாலான வேலைநிறுத்தங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் முதலாளிகள் பலவீனர்களாகவும் குற்றமுள்ள நெஞ்சம் உடையவனராகவும் இருப்பதுதான் என்று காந்திஜி சொல்வதில் உண்மை இருக்கிறது. தொழிலாளர்கள் பல்வேறு சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்துவிடுகிறார்கள். வரலாற்றில் வேலை நிறுத்தங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ரணங்கள் ரொம்பவும் அதிகம். வேலைநிறுத்தம் போன்ற சென்ஸிடிவான பிரச்சினைகளில் தொழிலாளர்கள் தடலாடியாக முடிவெடுக்கக்கூடாது என்பதைத்தான் காந்திஜி சொல்கிறார்.

  'மோசமான வேலைநிறுத்த போராட்ட உதாரணங்களை பார்த்து பின்பற்றும்போது நாம் பயங்கர தவறுகளை செய்துவிடுகிறோம். விஷயம் முழுவதும் தெரியாத உதாரணங்களை பின்பற்றாமல் இருப்பதே நல்லது' (யங் இந்தியா 16.2.1921)

  நியாயமற்ற வேலை நிறுத்தங்கள் வெற்றியடைவது எப்போதுமே மக்களுக்கு நல்லதல்ல. எந்தவொரு வேலைநிறுத்தமும் வெற்றிபெறுவது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படுவதும் அதன் பயனை அனுபவிக்கப்போவதும் மக்கள்தான். அத்தகைய வேலை நிறுத்தங்களில் பொதுமக்களில் அனுதாபம் காட்டக்கூடாது என்கிறார் காந்திஜி. வேலைநிறுத்தம் என்பது இயல்பாக வரவேண்டியது. அதை மெனக்கெட்டு திணிப்பது கூடவே கூடாது என்கிறார்.

  'வேலைநிறுத்தம் புறத்தூண்டுதலற்ற தன்னியலாக நிகழ வேண்டுமேயல்லாமல் சூழ்ச்சித் திறனுடன் அதற்கான ஆயுத்தங்கள் எதுவும் செய்யக்கூடாது'  (ஹரிஜன், 2.6.1946)

  சரி, என்னதான் சோஷலிஸம் பேசி நடவடிக்கைகள் எடுத்தாலும் வேலைநிறுத்தங்கள் நாள்தோறும் புற்றீசல் போல பெருகிக்கொண்டேதானே இருக்கின்றன. இன்றும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் அல்ப காரியங்களுக்காக கூட வேலைநிறுத்தங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது. அதையெல்லாம் எப்படி தடுக்கமுடியும்? காந்திஜி என்னதான் சொல்கிறார்?

  'வேலை நிறுத்தங்கள் என்பது கொள்ளை நோய் மாதிரி. வேலை நிறுத்தமே இல்லாத இடம் உலகத்தில் இருக்காது' (ஹரிஜன் 22.9.46 )

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |