செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : பிள்ளை பிடிக்கும் விளையாட்டாளர்
  - ரமா சங்கரன்
  | Printable version |

   

  அவர் ஒரு பிரபல  விளையாட்டாளர். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருப்பார். டிப்டாப் தோர்றத்துடன் எப்போது லண்டன் சென்றாலும் குழந்தைகளுடனேயே செல்வார். அந்த குழந்தைகள் பெரும்பாலும் சீனா, அங்கோலா நாட்டு குழந்தைகளாக இருப்பார்கள். அவர் என்ன குழந்தைகளை நேசிக்கும் அப்துல் கலாம் போலவா? இல்லை. ஒரு சமயம் வெளிநாடுகளில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்துபவரா? இல்லை. கால் பந்து மட்டுமே அவர் அறிந்தது. விமான நிலையம் மிக பரபரப்பாகவும் விமான டிக்கட்டுகள் கிடைப்பது நெருக்கடியாகவும் இருக்கும்போதுதான் அவர் பயணம் செய்வார். ஏன்? அவர் பிரபலம் என்பதாலா? இல்லை.

  இப்படி புதிரான மனிதராக இருந்த அந்த விளையாட்டாளர் ஒரு  போர்ச்சுகீசிய- அங்கோலா கலப்பு குடும்பத்தில் பிறந்தவர். அவர் பெயர் பெட்ரோ கோஸ்டா டாம்பா. (Pedro Miguel da Costa Damaba). 1990களில் கால்பந்து விளையாட்டில் மிகப் பிரபலமாக இருந்தவர். அன்று மூன்று குழந்தைகளுடன்  போர்ச்சுகல்லின்  ·பாரோ விமான நிலையத்திலிருந்து மூன்று குழந்தைகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்தில் டாம்பா ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். விமானதளத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தீடீரெனச் சந்தேகம் வந்தது. அவருடன் சென்ற 12 வயது அனா கார்ட்டினாவின் வீட்டிற்கு அதிகாரிகள் போன் செய்தார்கள். ஆனால் அனா கார்ட்டினா தன் அம்மாவுடன் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்ட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சி! இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த சிறுமி தன் அடையாள அட்டையைத் தொலைத்து விட்டதாக அவளின் அம்மா கூறினார். அனா பிரிட்டனுக்கு பயணம் செய்யத் தான் யாரிடமும் டிக்கெட் வாங்கவில்லை; அந்த யோசனையே கிடையாது என்று போனில் கோபத்தில்  கத்தினார்.

  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். டாம்பாவுடன் சென்ற  மூன்று குழந்தைகளும், இரண்டு பெண்களும் போலி பாஸ்போர்ட்டில் சென்ற விவரம் தெரியவந்தது. டாம்பா இதுபோல 88 டிக்கெட்டுகளை இதுவரை வாங்கியுள்ளார் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு என்ன ஆயிற்று? சன் செய்திகள் ஸ்டைலில் சொன்னால் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1998 முதல் 100 குழந்தைகளை டாம்பா கடத்தியிருக்கிறார். ஈராண்டுகள் கழித்து டாம்பா பின் சிறையில் அடைக்கப்பட்டார்  என்று தி கார்டியன் இதழ் ஒரு கதையைப் போல இச்செய்தியை விவரிக்கிறது. சீன, அங்கோலா குழந்தைகளை போர்ச்சுகல்லினுள் கொண்டு வந்து பின் பிரிட்டனுக்குள் கடத்துகின்றனர். இதுபோல பிரிட்டனில் 10,000 குழந்தைகள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். பாலியல் தொழில், வீடுகளில் வேலை செய்யும்  அடிமைத் தொழில், கட்டயமாகவோ அல்லது அடிஉதை வாங்கியோ வளர்ப்புக் குழந்தைகள் ஆவது- என்று பொதுவாக மூன்று வகையான அவதிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

  "Smuggling" என்பது ஒருவகை. இதன்கீழ் பிள்ளைகள் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் போய் சேர்கின்றனர். பிரிட்டனில் சென்று படிப்பதும் நல்ல குடும்பங்களில் வளர்வதும் இந்த பிள்ளைகளின் நோக்கமாகும். நேரடியாக விபச்சாரம், கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடத் தன் பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்புவதும் அவர்களுக்கே தெரியாமல் இப்படிப் பிள்ளைகளை பலியாக்குவதையும் "trafficking"  என்று பிரிட்டனில் பிரித்துக் கூறுகின்றனர். ஆனால் இந்த பிள்ளைகள் கடைசியில் என்ன ஆகிறார்கள் என்பதை அறிவது சிரமமாகி விடுகிறது என்கிறது ECPAT - அதாவது End Child Prostitution, Pornography and Trafiicking என்னும் உலகளாவிய அறக்கட்டளை. ஐவரி கோஸ்ட்டிலிருந்து லண்டனில் வசிக்கும் தன் வயதான அத்தைக்கு உதவி செய்ய ஐவரிகோஸ்ட்டிலிருந்து அனுப்பப்ட்டார்  ஒரு  8 வயது சிறுமி. அடி, உதை, தீக்காயங்களுடன் இந்த குழந்தையை விடுவித்தது ECPAT  அறநிறுவனம். மற்றொரு 5 வயது சிறுமியின் உடல் கைகள் வெட்டப்பட்டு, தலையில்லாமல் லண்டனில் தேம்ஸ் ஆற்றில் மிதந்த செய்தியை நம்மில் பல பேர் படித்திருக்கலாம்.

  உலகநாடுகளில் 89 நாடுகளை எடுத்துக் கொண்டு இங்கு மனிதர்களைக் கடத்தும் தொழில் எப்படி? ஏன்? நடைபெறுகிறது போன்ற விவரங்களை 2002ல் அமெரிக்கா வெளியிட்டது. இதில் ரஷ்யாவில் மட்டுமே  இப்பிரச்னை மிகக் குறைவு  என்று கண்டறியப்பட்டது. ஆனால் இதர நாடுகள் இங்கும் கடைசி பத்து ஆண்டுகளில் மட்டும் 500, 000 பெண்கள் கடத்தப்பட்டிருப்பதாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளன.  இதில் பாகிஸ்தான், ஈரான்,  கூட உண்டு. இந்தியாவில் குழந்தைகள்  பாலியல் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைகள் செய்வது  நீண்டகாலப் பிரச்னையாக இருந்து வருகிறது. மைசூரின் ஊதுவத்தி தொழிற்சாலையில் சிறுமிகளும் பதின்ம வயது பெண்களும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். வீடுகளிலேயே சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகளும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது.

  ஆனால் இங்கு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் படாம் (Batam) தீவில் மும்முரமாகப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகிறார்கள். வாங்கப்படுகிறார்கள்.  பாடாம் தீவு இந்தோனீசியாவிற்குச் சொந்தமானது. சிங்கப்பூரிலிருந்து அரை மணியில் படகில் சென்று விடலாம். இங்கு வரும் சுற்றுப்பயணிகளில் 80% சிங்கப்பூரர்கள். படாமின் மிக மலிவான பொழுதுபோக்குகளும் விபச்சாரமும் நைட் கிளப் பிசினஸ¤ம் சிங்கப்பூரர்களுக்குக் கவர்ச்சிகரமானது. இங்கு புள்ளி விவரப்படி 9000 இந்தோனீசியப் பெண்கள் அதாவது பாலியல் தொழிலாளிகள் உள்ளனர்.ஆனால் உண்மையில் 20000 பேர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  இவர்களில் 30% பெண்கள் 14- 16 வயதானவர்கள். சிலர் பருவமடையாத பெண்கள். சிங்கப்பூரர்களில்  கிட்டத்தட்ட 3000 பேர் கேளிக்கைக்காக இங்கு மாதந்தோறும் செல்கின்றனர்.

  இப்பெண்கள், குறிப்பாக சிறுமிகள் விபச்சாரத்தொழிலில் அதிக விலைப் போகின்றனர். பருவமடையாதப் பெண்கள் தம் முதல் இரவில் 750 முதல் 1200 சிங்கப்பூர் டாலர்  வெள்ளி வரை சம்பாதித்துக் கொடுக்கின்றனர். இவர்கள் தம் குடும்பங்களால் முகவர்களிடம் 500 முதல் 650 சிங்கப்பூர் டாலர் வரை விலை பேசப்பட்டு விற்கப்படுகின்றனர். சில விவரம் தெரிந்த பெண்கள் உணவகங்கள், பார்களில் வேலைபார்க்க அழைத்து வரப்பட்டு பின் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்படி  சிங்கப்பூர் ஆண்களும் இதில் சேர்ந்து கொட்டமடிப்பது சற்று வருத்தமாக இருந்தது. 

  கடந்த 2003ல் இந்தோனீசியாவில் அதிபர் சுகர்ணோ புத்ரி 8000 சிறுவர்களைக் கொண்ட மாநாடு நடத்தி தன் அரசாங்கம் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் வலுவாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். சட்டபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியடைமுடியவில்லை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். இந்தோனீசியா மட்டுமின்றி பிறநாடுகளும் இதற்காக்க இணைந்து செயலாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.    ஆனால்  ஆசிய நாடுகளில் பாலியல் தொழில் இன்று பெரும் வருவாய் ஈட்டும் தொழிலாக இருக்கிறது என்பது உண்மை. குறிப்பாக, தாய்லாந்தும், இந்தோனீசியாவும், சீனாவும் "Sex Sector"  என்பதை தனி பொருளியலாக ஆக்கிக் கொண்டது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. இதைப் பற்றிய மாநாடுகளும், ஆய்வறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

  நான் படாம் சென்று இக்குழந்தைகளின் வாழ்க்கை நிலையைப் பார்த்துவரப் போகிறேன். கண்டதைக் கேட்டதை உங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்வேன். சிங்கப்பூரிலும் இதுபோன்ற 'சிங்காரிகள்'  உண்டு. தெருவில் குப்பை போட்டால் அபராதம், டாய்லெட்டை பிளஷ் பண்ணாவிட்டால் அபாராதம் - இப்படி சிங்கப்பூரைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட ஊரில் இந்த சிங்காரிகள் எப்படி உல்லாசமாக பிழைப்பு நடத்த முடியும்?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |