செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : உண்ணாவிரதப் போராட்டம்
  - என்.டி. ராஜன்
  | Printable version |

  திருட்டி வி.சி.டிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

  நடிகர் பார்த்திபன் திருட்டு வி.சி.டி தயாரிப்பவர்களுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார். அவரது குடைக்குள் மழை பட ரிலீஸ் அன்று பார்த்திபன் தென்இந்திய பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலகத்தின் முன்பு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தொடர் உண்ணாவிரதப்  போராட்டத்தின் சிறப்பு அம்சம் திரைப்படத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் அனைவரும் குழுக்களாகப் பிரிந்து தினமும் போராட்டத்தில் ஈடுபடுவதுதான். பார்த்திபன் தலைமையில் நடந்த முதல்நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன், சிந்தாமணி முருகேசன், நடிகர் - இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  இதைக்குறித்து நிருபர்களிடம் பேசிய பார்த்திபன், " இந்தப் போராட்டம் மக்களுக்கு திருட்டு வி.சி.டிக்களால் படத் தயாரிப்பாளார்களும், திரைப்படத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களும் படும் கஷ்டங்களைப் புரியவைப்பதற்காகவே என்றார். பல சிரமங்களுக்கு இடையே எடுக்கப்படும் ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகும் அன்றே வி.சி.டிக்களிலும் வந்துவிடுகிறது. இதன் காரணமாக பட அதிபர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. இன்றெல்லாம் கடைகளில் கத்தரிக்காய், தக்காளி விற்பதைப் போல வி.சி.டிக்களும் விற்பனை ஆகின்றன. என்னதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் இதைத் தடுக்க இயலவில்லை என்பதே உண்மை. பொருள் திருட்டுப்போனால் கண்டுபிடித்து உரியவரிடம் காவல் துறை சேர்க்கிறது. ஆனால் படத்தை ஒருவர்வி.சி.டி மூலமாக ஒரு முறை பார்த்தபிறகு என்ன செய்யமுடியும்? ஆகவே பொதுமக்கள் திருட்டு வி.சி.டி. மூலமாக படம் பார்க்கும் வழக்கத்தை விட்டொழிக்க வேட்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். " என்று கூறினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் திரைப்படத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் சார்பாக தினமும் தொடரும் என்றும் பார்த்திபன் கூறினார்.

  தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

  கடந்த வெள்ளியன்று பார்த்திபன் துவக்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டத்தின் தொடர்சியாக சனிக்கிழமை திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமும், ஞாயிறு அன்று இயக்குனர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமும், திங்கள் கிழமை திரைப்பட கதாசிரியர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கதாசிரியர்-இயக்குனர் விசு, ஷண்முக சுந்தரம், லியாகத் அலிகான், கே.பிரபாகர், செந்தில்நாதன், கோகுல கிருஷ்ணன், ரமேஷ் கண்ணா, ஆரூர் தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

   

  ஆசாமி

  சுரேஷ் வர்மா இயக்கும் ஆசாமி திரைப்படத் துவக்கவிழா அட்டகாசமாய் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. வரும் ஜனவரியில் திரைக்கு வரவுள்ள இத்திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் வர்மா பிரபல ஹிந்தி இயக்குனர் ராம்கோபால்வர்மாவிடம் உதவியாளராக இருந்தவர். தெலுங்கில் பிரபலமான இயக்குனரான இவர் இயக்கும் முதல் தமிழ் படம் ஆசாமி. இத்திரைப்படத்தின் நாயகன் உதயா. நாயகி பிரபல் இந்தி மற்றும் தெலுங்கு நடிகை நேகா. இப்படம் பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு, இந்தப் படம் தமிழில் எனக்கு ஒரு சாதனைப் படமாக அமையும் என்று நம்புகிறேன். அதே போல படத்தின் நாயகன் உதயாவிற்கும் இதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உதயா, இந்தப் படம் முடியும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார் என்ற உறுதி பெற்ற பிறகே அவரை இதன் நாயகனாக்கினேன். ஆகவே அவரது முழு ஈடுபாட்டுடன் இதில் நடித்து வருகிறார்.  இது நிச்சயம் ஒரு வெற்றிப்படம் தான்!!" என்றார். நாயகி நேகா, " நான் மும்பையைச் சேர்ந்தவள்... தெலுங்கு படமான தில் நடித்தவள்.. என்றாலும் தமிழில் நடித்து வெற்றி பெருவதையே நான் விரும்புகிறேன். பணம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை!! " என்றார். இந்தப் படம் குறித்து நாயகன் உதயா அளித்த பேட்டியில், " நான் நடித்து எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே நான் நடித்த சில படங்களும் பல காரணங்களினால் வெளிவரவில்லை.  தொடர் தோல்வியில் நான் துவண்டிருந்தபோதுதான் என் நண்பனும், இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான மகேஷ் எனக்காக இந்தப் படத்தைத் துவக்கினார். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாவேன்.! " என்று கூறினார். கலாபவன் மணி மற்றும் வடிவேலுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
  படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.


  கீர்த்தனா நடிப்பிற்கு நோ!!

  டீம்வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கண்ணாடிப் பூக்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த பார்த்திபனிடம், அவருடைய குடைக்குள் மழை படம் பற்றி கேட்டபோது, " படம் பார்த்து என்னைப் பாராட்டியவர்களுள் முக்கியமானவர் இயக்குனர் பி.வாசு. படத்தில் எனது நடிப்பு பிரபல மலையாள நடிகர் சத்யனைப் போல இருந்தது என்று பாராட்டினார். என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் படத்திற்காக நான் செய்யும் விளம்பரம் இல்லை. கடவுள் அருளால் குடைக்குள் மழை, திருட்டு வி.சி.டி.களின் பிரச்சனையிலிருந்து தப்பித்தது!! " என்றார். கீர்த்தனா தொடர்ந்து நடிக்க பார்த்திபன் அனுமதிப்பாரா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக அனுமதி கிடையாது, அவரை அவரது படிப்பில் கவனம் செலுத்துமாறு கூரியுள்ளேன் என்றார்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |