செப்டெம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : உனக்கும் எனக்கும்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சிறுவயதில் பிரபு - த்ரிஷாவின் அப்பா அவர்களது அம்மாவை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் ஓடிவிடுகிறார். இதனால் மனமுடைந்த அவர்களது அம்மா இறந்துவிட, சின்ன வயதிலேயே அனாதைகளாகி நிர்கதியாக நிற்கிறார்கள் பிரபுவும் அவரது தங்கை த்ரிஷாவும். இவர்களுக்கு உதவி செய்யும் ஸ்டேஷன் மாஸ்டர் மெளலி பிரபு ஒரு நல்ல நிலைக்கு ஆளாக உதவுகிறார். தாய் தந்தையை இழந்த பிரபுவும் த்ரிஷாவும் ஒருவர் மீது ஒருவர் உயிராக இருக்கிறார்கள். த்ரிஷாவின் உயிர் தோழி ரிச்சா பலோட்டின் திருமணத்திற்காக சென்னை செல்கிறார் த்ரிஷா. அங்கே லண்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் பாக்யராஜ் - கீதா தம்பதியின் ஒரே மகன் ஜெயம் ரவியைச் சந்திக்கிறார். ரவி ரிச்சாவின் உறவினர். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாகிறது.

Ravi,Trisha,RichaBalotஅதே திருமணத்திற்கு வரும் மணிவண்ணன் தன் மகள் தேஜாஸ்ரீக்கு ஜெயம் ரவியைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். இதற்கு ரவியின் அம்மா கீதாவும் முழு மனதுடன் சம்மதிக்கிறார். ஆனால் த்ரிஷா - ரவியின் காதலைக் கண்டுபிடிக்கும் தேஜாஸ்ரீ அதை மணிவண்ணனிடம் சொல்ல வீடு ரணகளமாகிறது. உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிரபுவையும் த்ரிஷாவையும் அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

நடந்த உண்மையை தெரிந்து கொள்ளும் ரவி அம்மாவுடன் லண்டன் போவதாகச் சொல்லிவிட்டு பாதிவழியிலேயே திரும்பி த்ரிஷாவின் கிராமத்திற்கு வருகிறார். அங்கே பிரபு ரவி - த்ரிஷாவின் காதலை எதிர்க்க - அண்ணனை எதிர்த்து பேச வழியில்லாமல் கலங்கி நிற்கிறார் த்ரிஷா. எந்த விவசாயி வாழ்க்கையை ரவியின் தாய் கீதா கேவலமாக பேசினாரோ அதே விவசாயி வாழ்க்கை வாழ்ந்து - தன்னைவிட ஒரு படி அதிகமாக அறுவடை செய்து காட்டினால் தன் தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கத் தயார் என்று சவால் விடுகிறார் பிரபு.

இதற்கிடையே த்ரிஷாவை ஒருதலையாகக் காதலிக்கும் தண்டபாணியின் மகன், த்ரிஷாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபுவிடம் பெண் கேட்டுச் செல்ல கதையில் விறுவிறுப்பு.

கோடீஸ்வர வீட்டுப்பிள்ளையான ரவியால் ஒரு எளிய விவசாயி வாழ்க்கை வாழ முடிந்ததா? சவாலில் வெற்றி பெற்றாரா? த்ரிஷாவைத் திருமணம் செய்துகொள்ளத் துடித்த தண்டபாணியின் மகன் என்ன ஆனார்? இவைதான் படத்தின்  கிளைமாக்ஸ்.

அண்ணன் - தங்கை செண்டிமெண்டுடன் ஆரம்பிக்கும் கதை ரவியின் வரவிற்குப் பின்னால் கலகலப்பாகிறது. ரவிRavi,Trisha - த்ரிஷா இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளும் சரி - காதலிக்கும் காட்சிகளும் சரி.. செம ரகளையாக நகர்கிறது படம். காதல், செண்டிமெண்ட் ஆக்ஷன் என்று அனைத்திலும் அருமையாக நடித்து சபாஷ் போட வைக்கிறார் ரவி.

அண்ணனாக பிரபு - அருமை. தங்கை பாசத்தில் உருகும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார். பாசமான அப்பாவாக வரும் பாக்யராஜ் மகனிடம் லண்டன் வருமாறு கெஞ்சும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார். இவர்களுடன் கீதா, ஹனிபா, மணிவண்ணன், தேஜாஸ்ரீ, ரிச்சா பலோட், கஞ்சா கருப்பு, மல்லிகா, காதல் தண்டபாணி என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. அனைவரும் கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்துள்ளார்கள்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவும் சூப்பர். தேவிஸ்ரீபிரசாத்தின் இசை ஓக்கே ரகம். பார்த்துப் பார்த்து சலித்துப்போன காதல் கதை என்றாலும் அதை அழகான திரைக்கதையாக்கி இயக்கிய விதத்தில் அனைவரையும் சபாஷ் போட வைக்கிறார் ராஜா. ஆனாலும் அநியாயத்திற்கு அந்தஸ்து வித்தியாசம் பார்க்கும் கீதா எப்படி திருந்தினார் என்று இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். மொத்தத்தில் உனக்கும் எனக்கும் எல்லோர் மனதிலும் நிச்சயம் இடம் பிடிக்கும்.

| | | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |