செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : நியாயமற்ற கலவரங்கள்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Aishwarya Rai and Salman khanகடந்த 2001 ஆம் ஆண்டு சல்மான்கான் ஐஸ்வர்யாராயை தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதற்கு ஆதாரமாக இவர்களது உரையாடல் அடங்கிய டேப் ஒன்றை ஒரு பத்திரிக்கை இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த டேப் ஆதாரத்தின் நம்பகத்தன்மை குறித்து மாநில போலீஸார் மத்திய புலனாய்வுத்துறையுடன் இணைந்து ஆராந்து கொண்டிருந்த போதே மும்பை மற்றும் டெல்லியில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி என்ற பெயரில் வன்முறை கும்பல்கள் பெரிய அளவில் ஆர்பாட்டம் - போராட்டம் நடத்தி அப்போதுதான் ரிலீசான சல்மான்கானின் படம் ஒன்று திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இந்த ஆர்பாட்டங்களின் காரணமாக சல்மான் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டாரோ தெரியாது. ஆனால் மும்பை, டெல்லி மற்றும் பல வடமாநிலங்களில் நடந்த தொடர் வன்முறை - சூறையாடல் சம்பவங்களால் பொதுமக்கள் நிறையவே பாதிக்கப்பட்டார்கள். இவர்களோடு சேர்ந்து சல்மான்கானின் படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தை வெளியிட்ட திரைஅரங்குகளின் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள்.

தொலைபேசி ஆதாரத்தின் உண்மை நிலவரம் சமீபத்தில் வெளியானது - அதில் தெரிவித்திருப்பது என்னவென்றால் டேப் ஆதாரத்திலுள்ள குரம் உண்மையில் சல்மான் மற்றும் ஐஸ்வர்யாவின் குரல் கிடையாது. இதற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதுதான். ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை கட்கோபர் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக பா.ஜனதா மற்றும் சிவசேனா இணைந்து நடத்திய கடையடைப்புப் போராட்டங்களின் போது ஏற்பட்ட பொதுநலச் சேதத்திற்காக சம்மந்தப் பட்ட இரு கட்சிகளும் தலா 20 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்று மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளன. இந்நிலையில் தற்போதைய ஆதாரமற்ற புரளியை மையமாக வைத்து இக்கட்சிகளின் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவு என்னவாகுமோ?

குறிப்பாக கட்சிகளின் சார்பாக நடத்தப்படும் பெரும்பாலான போராட்டங்களில் கட்சி ஆட்களினால் பாதி சேதம் விளைந்தால், இத்தகைய போராட்டங்களைச் சாக்காக வைத்து வன்முறையாளர்கள் செய்யும் அட்டூழியங்களினால் மீதி சேதங்கள் விளைகின்றன. செய்த தவறுக்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்டால் உடனே பஸ்ஸை எறிப்பது, கடையடைப்பு நடத்துவது, பொதுமக்களை முடிந்த அளவிற்கு எல்லாவிதங்களிலும் இம்சிப்பது, ஆதாரமில்லாத வதந்திகளை நம்பிக்கொண்டு கோடிக்கணக்கில் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிடச் சொல்லி தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் கட்டளையிடப்போவதில்லை.. காரணம் அவர்களது சுயலாபம். கிடைத்ததுதான் வாய்ப்பு என்று இந்த மாதிரியான சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அராஜகவாதிகள் யாரும் தவறப் போவதில்லை.

ஆக மொத்தத்தில் இத்தகைய கலவரங்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நம் கையிலும் சட்டத்தின் கையிலும் தான் உள்ளது. முழு அடைப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்மானம் இயற்றி அதைத் தடை செய்திருப்பதைப் போலவே இத்தகைய விஷமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்கள் விஷயங்களிலும் எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதைக் குறித்து கூடிய விரைவில் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் நேரடியாக வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாது அவர்களைத் தூண்டி விடுபவர்கள் பேரிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் ஆவன செய்யவேண்டும். இல்லையென்றால் தொட்டதற்கெல்லாம் நம் நாட்டில் இத்தகைய கலவரங்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |