செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ப்ளூடூத் ( Bluetooth) - 2
- எழில்
| Printable version | URL |

ப்ளூடூத் கருவிகள் மற்றும் அவற்றின் உபயோகங்களைக் குறித்துப் பார்ப்போம்.

Bluetooth Headsetகருவிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையான ப்ளூடூத் சாதனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ப்ளூடூத் காதுபேசி (Bluetooth headset)  செல்பேசியைக் கையில் பிடித்துப் பேசுவதற்குப் பதில் காதில் மாட்டிக்கொண்டு கையை வீசிக்கொண்டு பேசிச் செல்ல உதவுபவை இந்த ப்ளூடூத் காதுபேசிகள். முன்பெல்லாம் இத்தகைய கருவிகளை எவரேனும் பொருத்தியிருப்பின் பார்ப்பவர்கள் "ஐயோ , அவருக்குக் காது கேளாது போலிருக்கிறது" என்று பரிதாபப் படுவர். ஆனால் இப்போது உம்மாதிரியாகக் காதில் மாட்டிக் கொண்டு கையை வீசிக்கொண்டு தனியே பேசிச் செல்பவர்களை யாரும் ( "ஆள் ஒரு மாதிரியோ" என) ஐயுறுவதில்லை. ப்ளூடூத் சுட்டி மற்றும் விசைப்பலகை (Bluetooth Mouse and Keyboard) அலுவலகத்தில்/வீட்டில் பயன்படும் மேசைக் கணினியில் இருக்கும் விசைப்பலகை மற்றும் சுட்டியை நீங்கள் கேபிள் இணைப்பின்றி ப்ளூடூத் இணைப்பு மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். கணினியிலும் ஒரு ப்ளூடூத் கருவி இணைக்கப்பட்டு விசைப் பலகை மற்றும் சுட்டியின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.

Bluetooth Adapter - Dlink adapterகணினியுடன் இணைந்திருக்கும் சிறிய ஒலி பெருக்கிகளும் ப்ளூடூத் வசதியுடன் கேபிளின்றி இணைக்கப்பட்டால் கணினி மேசையில் கசமுசா என்று சிக்கிக் கிடக்கும் கேபிள்களிருந்து விடுதலை பெறலாம். மேலும் நினைத்த இடத்திற்கு சுட்டியையோ விசைப்பலகையையோ , நகர்த்தி உபயோகிப்பது சுலபமாகிறது பொது உபயோக ப்ளூடூத் பொருத்தி (General Purpose Bluetooth Adaptor).

கணினியில் இக்கருவியை இணைத்துக் கொண்டால் போதும். பிற ப்ளூடூத் கருவிகளுடன் அவற்றின் உபயோகத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புப் பரிமாற்றம் (File Transfer ), இணைய இணைப்பு வசதி , காது பேசியுடன் இணைப்பு, தொடர் துறை (Serial Port) இணைப்பு, தொலைநகல் அனுப்பல் போன்ற பல வசதிகளை இந்தப் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கருவியும் மேற்கூறிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திறன் படைத்தது. செல்பேசியிலிருந்து கணினிக்கோ , கணினியிலிருந்து செல்பேசிக்கோ ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, கோப்புப் பரிமாற்றம் செய்வது எளிதாகிறது. ஜி பி ஆர் எஸ் வசதி கொண்ட செல்பேசியிலிருந்து இணைய இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, அழைப்புவழி (Dial up)சேவையைப் பயன்படுத்தி , இணைய இணைப்பினை கணினிக்கு கொண்டு செல்ல முடியும். மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம். கேபிள்கள் ஏதும் இல்லாமலேயே இணைய வசதியை எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ப்ளூடூத் அணுகு புள்ளி (
Bluetooth Access Point) இணைய இணைப்பினையோ அல்லது அலுவலகத்தின் உள் வலையமைப்பில் (Intranet) இணையவோ ப்ளூடூத் அணுகு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அலுவலகங்களில் புதிய கணினி இணைப்புகளை ஏற்படுத்துவதும், இருக்கும் இணைப்புகளை எளிதாக வேறிடத்துக்கு மாற்றுவதும் நொடியில் முடிகிறது. இதுபோலவே அலுவலகத்தின் அச்சடிப்பானுடன் ( Printer) ப்ளூடூத் இணைப்பின் மூலம் கோப்புக்களை அச்செடுக்க முடியும். தொலைநகல் எடுப்பதும் அனுப்புவதும் எளிதாகிறது. குறுக்கும் நெடுக்குமாக அலுவலகங்களில் விரவிக்கிடக்கும் கேபிள்களை நீக்க இந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ப்ளூடூத் நுட்பத்தினால் வேகம் சற்றே குறைவாக இருப்பதால் கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்பு ( Wireless Local Area Network , WLAN) தற்போது பிரபலமடைந்து வருகிறது.

இது தவிர, கார்களிலும் ப்ளூடூத் கருவிகளைக் கொண்டு (Bluetooth Car-kit) செல்பேசிகளுடன் தொடர்பேர்படுத்திக் கொண்டு, செல்பேசியைக் கையில் தொடாமலேயே அழைப்புகளை இணைக்கவும், பேசவும் முடியும். கார்களில் நாம் இசை கேட்டுக்கொண்டே செல்கையில் ஏதேனும் அழைப்பு ஏற்படின், இசையை நிறுத்தி வைத்து, நாம் பேசி முடித்ததும் மீண்டும் இசையைத் தொடர இந்தக் கருவிகள் உதவுகின்றன. சரி, இரு ப்ளூடூத் கருவிகள் அருகருகே நெருங்கையில் தாமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து தகவல் அனுப்பத் தொடங்கிவிடுமா? இல்லை. அவ்வாறு தாமாக இணைந்து கொண்டு தகவல் பரிமாரிமாறும் வசதி இருந்தால் அது பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையே அல்ல. ப்ளூடூத் கருவிகள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதைப் பின்வருமாறு எளிதாய் விளக்கலாம்.

1. இரு கருவிகளிலும் ப்ளூடூத் இயக்கம் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (Bluetooth ON).

2. கருவிகள் இரண்டும் கண்டுபிடிப்பு நிலையில் (Discoverable mode) இருக்க வேண்டும். இந்த நிலையானது ஏற்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே பிற கருவிகள் அந்தக் கருவி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக, நீங்கள் உங்களது ப்ளூடூத் கருவியை இயக்கியவுடன் அது கண்டுபிடிப்பு நிலையில் இயங்கத்தொடங்கும்.

3. ப்ளூடூத் கருவிக்கென அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புப் பகுதிக்குச் (Settings) சென்று , அருகிலுள்ள பிற கருவிகளைக் கண்டுபிடிக்கும் பட்டியை சுட்டுங்கள் . உங்களது ப்ளூடூத் கருவி உடனே, பிற கருவிகளைத் தேட ஆரம்பிக்கும். கண்டுபிடிப்பு நிலையில் உள்ள பிற கருவிகளைத் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு உங்கள் முன் நிறுத்தும்.

4. நீங்கள் இணைப்பு ஏற்படுத்த விரும்பும் கருவியைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களது கருவி குறிப்பிட்ட மற்றொரு கருவியுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இணைப்புக் கேட்டவுடன் இணைப்பு ஏற்படுத்த அனுமதிப்பதும், மறுப்பதும் எதிர்கருவியின் விருப்பம்.

5. உங்களது ப்ளூடூத் கருவியுடன் இணைய விருப்பம் எனில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடவுச்சொல்லை (Pass key) இணைத்து அனுப்பும்.

6. அக்கருவி அனுப்பும் கடவுச்சொல்லை உங்கள் கருவியில் உள்ளிட்டு அனுப்புங்கள். கடவுச் சொல் வேறுபட்டால் தொடர்பு மறுக்கப்படும். சரியான கடவுச் சொல் சரிபார்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்படும். இணைப்பு ஏற்படுத்தியாகி விட்டது. எவ்வாறு தகவல் பரிமாறுவது? அல்லது எவ்வாறு ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துவது? அடுத்த வாரம் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |