செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : வர்க்கப்புரட்சி
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  அந்த குறுகலான சந்திலிருக்கும் கீற்று கூரையுடன் கூடிய கட்டிடத்தில் வெளுத்துப்போன சிவப்புக்கொடி பறக்கிறது. சுவற்றில் ஸ்டாலின் தொடங்கி வாயில் நுழையாத பெயர் அடிக்குறிப்புடன் அயல்நாட்டு பிரபலங்களின் கருப்பு வெள்ளை படங்கள் பளிச்சிடுகின்றன. ஆங்காங்கே, பிட் நோட்டீஸ்களும், முதலாளிகளை எதிர்க்கும் டீஸெண்டான கண்டனக் குரல்களும் சுவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ
  கட்சி அலுவலகங்கள் நிறைய உண்டு.  இது போன்ற அலுவலகத்தை எட்டிக்கூட பார்க்காதவர்களுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலும் தென்படும் புரட்சிகர வாசகங்களை படித்த அனுபவம் நிச்சயமாக இருக்கும்.

  நாடு சுதந்திரமடைவதற்கு முன்னபாகவே இந்தியாவிலும் ஒரு வர்க்கப்புரட்சி நிச்சயம் நடக்கும் என்று நிறையபேர் நினைத்திருந்தார்கள். வெள்ளையர்களை வெளியேறிய பின்னர் நிச்சயம் இது நிகழக்கூடும் என்றுதான் சாமானியர்களிலிருந்து ஜவர்ஹலால் நேரு வரை எல்லோருமே நினைத்திருந்தார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ கொள்கையில்தான் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனார்ல, காந்திஜியோ அப்போதே வர்க்கப்போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தியா போன்ற நாடுகளில் பெரிதாக வர்க்கப்புரட்சி எதுவும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும் நல்ல மனமாற்றம் இருந்தாலே போதும் என்பதுதான் அவரது கருத்து.

  'வர்க்கப்புரட்சி என்பது இந்திய மண்ணிற்கு அந்நியமான விஷயம். அடிப்படை உரிமைகளை பரந்த நிலைத்தளமாக கொண்டு அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் ஒரு புதுவடிவான கம்யூனிஸத்தை உருவாக்கும் திறமை நமக்கு இருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji)

  காரல் மார்க்ஸின் மூலதனத்தை வரிக்கு வரி படித்த பின்னர் வாத முடிவுகளை காந்திஜியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வர்க்கப்போர், வன்முறை தவிர்த்த வழிமுறையில் கொண்டுவரப்படவேண்டும் என்றுதான் காந்திஜி சொல்வார் என்பது எல்லோரும் எதிர்பார்த்த விஷயம்தானே!

  மேலைநாடுகளில் பரபரப்பாக பரவிக்கொண்டிருந்த கம்யூனிஸ சித்தாந்தங்களை இந்திய மண்ணின் நேட்டிவிட்டிக்கு ஏத்தபடிதான் நாம் மாற்றிக்கொண்டாகவேண்டும் என்பதில் காந்திஜிக்கு நம்பிக்கை இருந்தது. இயந்திரமயமாகிக்கொண்டிருக்கும் மேலைநாடுகளில் சமூக சூழ்நிலையை விவசாயிகள் நிறைந்த இந்தியச் சூழலோடு ஓப்பிடக்கூடாது என்பதால்தான் அவர் கம்யூனிஸ சித்தாந்தங்களை வேறு வடிவில் வலியுறுத்த ஆரம்பித்தார்.

  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம்
  தொழுதுண்டு பின்செல் பவர்.

  என்கிற வள்ளுவனின் வாக்குதான் காந்திஜியின் கொள்கையும்.

  'உங்கள் நிலம் உங்களுக்கு எப்படி சொந்தமோ, அதே போல  நிலத்தில் உழுகிற குடியானவனுக்கும் அது சொந்தம்தான்'  (25.7.1934 ஒரு பேட்டியில்)

  இவ்வுலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக 'சபி பூமி கோபால் கீ' என்கிறார் காந்திஜி. நிலத்துக்கு சொந்தக்காரனை போல உழுபவனுக்கும் நிலத்தில் உரிமையுண்டு. அதை அவர்கள் அறியச்செய்வதுதான் நமது வேலை என்கிறார்.

  'நிலம் மற்றும் அதன் உடமைகளும் யார் அதில் வேலை செய்கிறார்களோ அவர்களுடையதே. துரதிருஷ்டவசமாக இந்த எளிய உண்மை பாட்டாளி மக்கள் அறியாமலிருக்கின்றனர். அல்லது அறியமுடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  (ஹரிஜன், 2.12.1937)

  அதிகப்படியான நிலத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர்களை வறுமையிலேயே வைத்திருந்து நிலவரி வசூலிப்பவர்களாக மட்டுமே நிலச்சுவான்தாரர்கள் இருக்க விரும்புகிறார்கள் என்று சொல்லி நில உச்சவரம்பு சட்டத்திற்கு அப்போதே அச்சாணி போட்டுவிட்டார்.

  'கண்ணியமான வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதற்கு அதிகமாக யாரும் நிலம் வைத்துக்கொள்ளக்கூடாது. தமக்கென்று நிலம் இல்லாததால்தான் பாமர மக்கள் கொடுமையான வறுமையில் வாடுகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்? ' (ஹரிஜன், 20.4.1940)

  உழபவனுக்கே நிலம் சொந்தம் என்பது தீவிர கம்யூனிஸவாதிகளின் கருத்து.  காந்திஜியோ, இருதரப்புக்கும் சொந்தமானதுதான் என்கிறார். அதை எப்படி உரிமை கொண்டாடுவதில் பிரச்னை ஏற்பட்டு அதை தீர்ப்பதிலேயே இருதரப்பினரின் கவனமும் போய்விடக்கூடாது என்பது அவரது நியாயமான கவலை. உழைப்புதான் தொழிலாளியின் மூலதனம். அந்த உழைப்பை வைத்துதான் அவன் எதையும் சாதிக்கவேண்டுமே தவிர வேறு வழிகளை தேர்ந்தெடுப்பது மூடத்தனம் என்கிறார்.

  'நீங்கள் பயிரிடும் நிலம் உங்களுக்கு சொந்தமானதே. ஆனால், உடனடியாக உங்களுக்கு சொந்தமாகிவிடாது. ஜாமீன்தார்களிடமிருந்து நிலத்தை பலவந்தமாக பறித்துக்கொள்ள முடியாது. அகிம்சையே ஓரே வழி; உங்கள் சக்தி பற்றிய விழிப்புணர்வுதான் ஒரே வழி' (ஹரிஜன், 20.5.1939)

  காந்திஜி சொல்வது போல உழைப்பு, மூலதனம், மேல்வகுப்பினர், பாகுபாடெல்லாம் மலைகள் போன்று ரொம்ப காலமாகவே இருந்துவருகின்றன. முடவன் குருடனை வழிநடத்தி செல்வது போல உழைப்பின் வலிமையை இருதரப்பும் புரிந்துகொண்டதாகத்தான் தெரியவில்லை. அப்படியொரு பரஸ்பர புரிதல் நிலவும் பட்சத்தில் உழைக்கும் விஷயத்தில் இந்தியாவும் இன்னொரு ஜப்பான்தான்.

  ஆனாலும், சோஷலிஸம் பற்றிய கனவுகள் நாட்டில் இருந்து கொண்டே இருப்பதாக ஒரு மாயை இன்னும் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் வர்க்கப்போராட்டம் தீவிரமாவதை மக்கள் விரும்பவில்லை என்கிற காந்திஜியின் அழுத்தமான நம்பிக்கை அமிர்த் பஜார் (2.8.1934) பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிகிறது.

  'கோடிக்கணக்கான மக்களிடையே நேர்மையாக ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் சொத்துரிமை படைத்த வகுப்பினரின் உடமைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக அரசாங்கம் பறித்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நிச்சயம் சொல்வேன்'

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |