செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : கடவுள் உங்களுக்கு ஏழு வரங்கள் கொடுத்தால்
  -
  | Printable version |

  "நடக்க வேண்டியவை எல்லாம் அப்படியே நடக்கட்டும்"

  நமக்கு எப்பொழுதுமே அடுத்தவர்களின் செயல்பாடுகளில் ஒரு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டு. குறிப்பாக சினிமா, அரசியல், டிவி, விளையாட்டு என்று இப்பட்டியல் நீளும். இதையே மையமாக வைத்து தமிழோவியத்தில் இந்த புதிய பகுதியை தொடங்கியுள்ளோம்.

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  கடவுள் உங்களுக்கு ஏழு வரங்கள் கொடுத்தால் அதை எப்படி உபயோகிப்பீர்கள் ?


  கே.வி. ராஜா

  1. கலீஞர் தாத்தாவும் செயலலிதா அம்மாவும் ஒண்ணு சேந்துடணும். ரெண்டு பேரும் பாசமலரு சிவாசி சாவித்திரி கணுக்கா "அண்ணா... தங்காச்சி"ன்னு கூவிக்கணும்.

  2. வூரு ஒலகத்துல பெட்ரோலு கெடிக்காம போயி குப்புசாமி வளிக்கிற ரிக்ஷா அகில ஒலக வாகனமா அறிவிக்கப்படணும். அமேரிக்க ஜார்ஜ் புச்சும் ஆப்கானிஸ்தான் பின் லேடனும் அதுல ஒண்ணா குந்திகின்னு சவாரி வுடணும்.

  3. வூருல கீற அல்லா கண்ணாலங்கட்டினவங்களும் அவுங்க வூட்டுக்காரம்மா மன்.¤ல இன்னா நெனிக்கிறாங்கோன்னு தெர்ஞ்சிக்கணும்.

  4. இணையம், குழுமம், சிறு பத்திரிகை, வலைப்பதிவு இங்கேல்லாம் சண்டையே வரக்கூடாது.

  5. தொல்லைக்காட்சியிலே சீரியலே போடக்கூடாது. ஒரு தபா போட்ட சினிமா பாட்டை அடுத்த ஆறுமாசத்துக்கு போடக்கூடாது.

  6. ஸ்ரீதேவியை ஈரோயினா போட்டு என்னை ஈரோவா போட்டு பயாஸ்கோப்பு எடுக்கணும். அதுல மூக்கு ஆப்ரேஷனுக்கு முன்னாடி இருந்த, ஸ்ரீதேவி வோணும்.

  7. இனிமே வரம் தரேன் அது இதுன்னு டிகால்டி வுட்டுக்கின்னு வேற ஆராண்டையும் போயி இந்தக் கடவுளு கேக்கக்கூடாது.


  Prakashஐகாரஸ் பிரகாஷ்

  கடவுள் கொடுத்த ஏழு வரங்கள்.

  1. தலையில் முடிமுளைக்க வேண்டும் என்பது முதல் வரம்.  ரயிலில், ஆர்.ஏ.சியில் டிக்கட் கிடைத்து, டிடிஈ ஐ பார்த்து கெஞ்சி கூத்தாடி, பர்த் ஒன்று வாங்கி, சைட் அப்பர் பர்த்தில் செட்டில் ஆகும் போது, பக்கத்தில் இருக்கும் நாற்பது வயது மாமா, சாருக்கு எத்தனைக் குழந்தைகள் என்று கேட்பார். இது என் இருபத்து ஏழாவது வயதில். மூடுக்கு ஏற்றாற்போல, ஒன்று , இரண்டு, மூன்று , நான்கு என்று சொல்வதுண்டு. மாமா பக்கத்தில் ஏதாவது சிட்டு உட்கார்ந்திருந்தால், அவமானம் தாங்காமல்  பர்த் மாற்றிக் கொண்டு போய்விடுவேன். 18 வயது பக்கத்து வீட்டுப் பெண் அங்கிள் என்று கூப்பிடும் போதுதான் மண்டையில் முடியில்லாதது  உறைக்கும். பசுமாட்டை தலையில் நக்கச் சொல்வததில் இருந்து ஹேர் ப்ளாண்ட்டிங் வரை ஏராளமான ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறேன். அது பசு மாட்டுக்கும் நல்லதில்லை, என் ஏடிஎம் கார்டுக்கும் நல்லதில்லை என்பதால், கடவுளிடம் வரம் கேட்பதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி.

  2. அடுத்த வரங்கள் எல்லாம் பொது நோக்கத்துக்காகத்தான். என் அடுத்த வரம், அடுத்த பொதுத்தேர்தலில், சிதம்பரம் சீ·ப் மினிஸ்டர் ஆகவேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் அரசியலும் பொருளாதாரமும் தெரிந்த, லஞ்சம் வாங்காத ஒரே அறிவாளி சிதம்பரம் தான். அவர் முதலமைச்சர் ஆனால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறிவிடும்.

  3. சென்னையில் வருவதாக இருக்கின்ற seawater desalination project, ஒழுங்காக திட்டமிட்ட படி, திட்டமிட்ட நேரத்தில் வரவேண்டும். [பேரும் புகழும் 'அம்மாவுக்கு' கிடைத்தாலும் பரவாயில்லை.] இது போன்ற first-of-its-kind திட்டம் நிறைவேறினால், மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாகத் தமிழகம் திகழும். இந்த திட்டத்தைப் போடுகின்ற எஞ்சினியர், நிறைவேற்றுகின்ற கான்டிராக்டர், துட்டு கொடுக்கின்ற வங்கி அதிகாரிகள், ஒழுங்காக அப்ரூவல் கொடுக்கின்ற அரசு அதிகாரிகள் அனைவரும் கடன் தொல்லைகள் இல்லாமல், சீரியல் பார்க்காத மனைவி மக்கள் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழ வரம் கேட்பேன்.

  4. பருவ மழை தவறினாலோ, அல்லது, காவிரி நீர் தரமாட்டேன் என்று கர்நாடகா அடம்பிடித்தாலோ, அதையே நம்பிக் கொண்டிருக்காமல், நம் விவசாயிகள் பாசன நீரில் தன்னிறைவு பெற, ஏதாவது புது விவசாயத் தொழில்நுட்பத்தை, நம் விவசாய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் என் அடுத்த வரம்.

  5. ஜக்குபாய் சூப்பர் ஹிட்டாக ஓடி, ரஜினி,  பாபாவில் விட்ட இடத்தைப் பிடித்த உடன்,  வலைப்பூவில் ரஜினிகாந்தை தாக்கி எழுதுகின்றவர்களைப் பார்த்து ' ஹா ஹா ஹா' என்று பி.எஸ்.வீரப்பா போல சிரிக்க வேவேண்டும். இது ஐந்தாவது வரம்.

  6. அகநானூறு புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களை சுஜாதா நாவல் படிப்பது போல, எளிமையாகப் புரிந்து கொள்ளத் தேவையான தமிழ் அறிவு இன்ஸ்டண்ட்டாக வேண்டும். முடிந்தால் சாருநிவேதிதா, கோணங்கி ஆகியோரைப் புரிந்துகொள்ளத் தேவையான தமிழ் அறிவும். இது ஆறு.

  7. இன்னும் ஏழு வரங்கள் வேண்டும். இது ஏழாவது வரம்.


  பாலாஜி (bb)

  கடவுள், கந்தசாமிப் பிள்ளையின் மகள் வள்ளியோடு 'வட்டும் கரித்துண்டும்' ஆடிக்கொண்டிருந்தார். வயதாகி விட்டதால் கொஞ்சம் மூச்சிறைத்தது. பொரி கடலையை சாப்பிட்டுக்கொண்டே வட்டில் தோற்றுக்கொண்டிருந்தார். மெதுவாக அவர் பக்கம் சென்று சைகை காண்பித்தேன். 'என்ன விஷயம்' என்று கடலை தெறிக்க கேட்க, 'ஏழு வரம் கேக்க வந்தேன்' என்று தமிழோவியம் கொடுத்த டிஸ்கவுண்ட் கூப்பனைக்காண்பித்தேன். 'கூப்பன் சரி, ஆனால் இதை பயன்படுத்த ஒரு ஈ புக் வாங்கியிருக்க வேண்டுமே' என்ற கடவுளிடம் ஈ புக் ரசீதையும் காட்டினேன்.

  ஒரு வழியாக வள்ளியிடம் தோற்றுவிட்டு, அவளை 'பத்து பக்களி போடு' என்றெல்லாம் கொஞ்சிவிட்டு, என் பக்கம் வந்தார். 'எனக்கு டென்னிஸ் எல்போ, அதான் விட்டுக்கொடுத்துவிட்டேன்' என்று சப்பைக்கட்டு வேற. விஷயத்துக்கு வாங்க என்று சொல்லும்படியாக திரும்பவும் கூப்பனை நீட்டினேன். ஒரு பெருமூச்சுடன், 'என்ன வரம் கேட்டாலும் அதைக் கொடுப்பதும் கொடுக்காததும் என்னுடைய உரிமை; இரண்டு வருடத்திற்கு
  செல்லுபடியாகிவிட்டு அதற்குப் பிறகும் வேண்டுமென்றால் மாதத்திற்கு $19.99 கொடுக்கவேண்டும்' என்றெல்லாம் ஒரு பத்து நிமிடத்திற்கு சொல்லிக்கொண்டே இருந்தார் கடவுள். இடம் மாறி வந்துவிட்டோமா என்று சந்தேகம் வர, என் மனதைப் புரிந்தவாறு கடவுள், 'இப்போதெல்லாம் கோர்ட்டு கேஸ¤ன்னு நிறைய அலைவதால் தான் இந்த டிஸ்க்ளைமர் எல்லாம்' என்றார் மெதுவாக. 'சீக்கிரம் கேளுப்பா, This conversation may be recorded for quality purposes' என்று மெக்கானிக்கலாக சொல்லி முடித்தார்.

  அவரிடம் நான் கேட்ட ஏழு வரங்கள்:

  1. நல்ல ருசியாக ஏதாவது சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதில்லை என்கிறார்கள். உடலுக்கு நல்லதாக சாப்பிட்டால் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது. ஆக, எது சாப்பிட்டாலும் உடம்புக்கு கெடுதலே செய்யக்கூடாது. ரெண்டு சீஸ் கேக் ஒன்றாக சாப்பிட்டாலும் தொப்பை வரக்கூடாது. 'லைட்' மேயோ, வனஸ்பதி டால்டா, டீகப்பினேட்டட் காப்பி, இந்த 2%, 1% பால் எல்லாம் மார்க்கெட் விட்டு ஓடிவிடவேண்டும். திகட்டும் அளவுக்கு ருசியாக சாப்பிட்டுவிட்டு, குண்டாகாமல், அப்படியே இருக்க வேண்டும். அப்புறம் நானும் நாலரைப் பால் குடித்து அர்ஜுன் அம்மாவுடன் டூயட் பாடுவேன். 

  2. இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் எல்லாரும் ஒரே ·பாண்ட் பயன்படுத்த வேண்டும். அது யூனிகோடோ யூனிரோடோ எதுவாக இருந்தாலும் சரி. எல்லா ப்ரவுசர்களிலும், எல்லா மென்பொருள்களிலும் தமிழ் எழுத்துக்கள் துல்லியமாகத் தெரிய வேண்டும். விகடனுக்கு ஒரு ·பாண்ட், குமுதத்துக்கு ஒரு ·பாண்ட் என்றெல்லாம் இல்லாமல் எல்லாரும் பேசாமல் தினகரன் ·பாண்ட்டுக்கு தாவிவிடலாம். (அப்போதும் திண்ணை மட்டும்
  TAB-இல் இருக்கும்).

  3. அஜீத் இனிமேல் தன் படங்களில் பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசப் போகிறாரம். ஆண்டவா! காப்பாத்து! அஜீத் படங்களில் அவர் வாய் பேசாத ஊமையாகவே நடிக்க வேண்டும். சிட்டிசன் படத்தில் முகத்தில் ஒட்டியிருந்த சப்பாத்தி மாவை இனிமேல் வாயில் அடைத்துக்கொண்டுதான் நடிக்க வேண்டும். விஜய்யின் 'மதுர' படத்துக்கு எதிராக 'எரும' என்றெல்லாம் அஜீத் படம் பண்ணாமல் இருக்க வேண்டும். அதை விட நல்லது, சினிமாவில் இருந்து கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு ஷாலினியை நடிக்க விட வேண்டும்.

  4. கருணாநிதி பேசு(த்து)வதை இனிமேல் எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கக் கூடாது. அவர் பாட்டுக்கு பகவத் கீதை மோசம், பெரியார் கனவில் டான்ஸ் ஆடினார், வைரமுத்து தான் பிறவிக் கவிஞன் மத்தவங்கல்லாம் வேஸ்ட்டு என்றெல்லாம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். யாரும் கண்டுக்கொள்ளக் கூடாது (ராம கோபாலன் கூட). வேண்டுமானால் துக்ளக் சத்யா மட்டும் அதற்கு அவர் பாணியில் கிண்டல் அடித்துக்கொள்ளட்டும்.

  5. இளையராஜாவின் சிம்பொனி வெளிவர வேண்டும்; திருவாசகம் இல்லை; அவர் பத்து வருடங்களுக்கு முன் செய்தது. ஏற்கனவே அதுக்கு விழா எடுத்து, மேஸ்ட்ரோ பட்டம் கொடுத்து எல்லாரும் முழ நீளத்திற்கு பேசியாச்சு; அதனால் அதை ரிலீஸ் செய்ய வ்ண்டும். அது சிம்பொனியாக இருந்தாலும் சரி, சேமியா உப்புமாவாக இருந்தாலும் சரி. கேட்டுட்டுத் தான் போறோமே!

  6. மரத்தடியிலும் மற்ற வலைத்தளங்களிலும் இனிமேல் யாரும் கவிதை எழுதக் கூடாது. மீறி எழுதினாலும் அது நல்லாயிருக்கு என்று யாரும் சும்மானாச்சும் கமெண்ட் போடக் கூடாது. கூகிளில் தேடிக் கண்ட கண்ட கட்டுரையை அப்படியே தமிழ்ப்படுத்தி, பெரிய பிஸ்து மாதிரி காட்டிக்கொள்ளக் கூடாது. குறைந்த பட்சம் ஐநூறு சிறந்த படங்களைப் (imdb list படி) பார்த்துவிட்டுத் தான் பட விமர்சனம் செய்ய ஆரம்பிக்கவேண்டும். வலைப்பதிவாளர்களை விட வலைப்பதிவு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது நூறு மடங்காக வேண்டும்.

  7. அதோ பறந்துட்டிருக்குதே, அந்தப் பட்டம் என் மடியில் வந்து விழ வேண்டும். அப்புறம் பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்..ஒன், டூ.....

  கடவுள் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, வெறுமனே 'கதம்! கதம்!' என்று சொல்லிவிட்டு மிருகி முத்திரையைக் காண்பித்துவிட்டு மீண்டும் வட்டும் கரித்துண்டும் ஆட ஆரம்பித்தார். இந்த வரமெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கும். எதற்கும் ஒரு triple scoop banana split icecream with whipped cream and hot fudge சாப்பிட்டுவிட்டு சொல்கிறேனே!


  Sundarசுந்தர்

  முதல் வரம் :

  "இயற்கை அழிவுகள், கொள்ளை, கொலை ஆகியன ஏற்படாது, துர்ப்புத்தி நீங்கி, துன்பங்கள் அகன்று மானுடர்கள் இன்பம் பெற்று இப்பூமியில் சொர்க்கலோகத்தில் வாழ்வதைப் போன்று வாழவேண்டும். நினைத்ததும் என் குடிசை கோபுரமாகி, காகிதங்கள் கரன்சிகளாகி, வேண்டியவர்கள் உயிர்பெற்று, இருப்பவர்கள் சாகாவரம் பெற்று, நினைத்தவற்றை நினைத்தமாத்திரத்தில் அடையும் சக்திவேண்டும்"

  என்பது போன்று இயற்கைக்கு முரணான எந்தவித வரமும் கேட்கமாட்டேன். :)

  இவ்வுலகத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நடந்தே தீரும். அதை மந்திர தந்திரங்களால் திடீரென்று மாற்றினால் பயங்கரக் குழப்பம் விளையும் என்று நம்புகிறேன். நல்லவையோ, தீயவையோ - உலகின் நிகழ்வுகளே மனிதனை 'அடுத்து என்ன?' என்று துரத்திச் செல்ல வைக்கும் நெம்புகோல் என்று நம்புகிறேன். ஆகையால் "நடக்க வேண்டியவை எல்லாம் அப்படியே நடக்கட்டும்" என்ற முதல் வரத்தை மட்டும் கேட்டுக்கொண்டு மற்ற ஆறு வரங்களும் தாமாகவே Not Applicable ஆகிவிடக் கோருவேன்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |