செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : பேஸ்பாலும் பேபி ரூத்தின் சாபமும்
  - வந்தியத்தேவன்
  | Printable version |

   

  கிரிக்கெட்டில்தான் ஆர்வம் அதிகமே தவிர பேஸ்பால் அவ்வளவாக என்னை என்றுமே கவர்ந்ததில்லை. பள்ளிப் பருவத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கு கிரிக்கெட் என்றால் சுத்தமாக ஆகாது. அதனால் வேண்டுமென்றே பேஸ் பால் மட்டையும், பந்தையும் பள்ளிக்குத் தருவித்தார். வெறும் மட்டையும், பந்தும் போதுமா? பேஸ் பால் சொல்லித்தரவும், தகுந்த ஆடுகளமும் வேண்டாமா? இறுகிய முயல்குட்டியின் வெளிப்புறம் போன்ற
  பந்து என்னையொத்த சிறுவர்களின் மனம் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. என்ன செய்வதென்று யோசித்தோம். தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிய பருவத்தில் உருண்டையான மட்டையும், அடிபட்டால் கொஞ்சமே ஜாஸ்தியாய் வலிக்கும் பெரிய பந்தொன்றும் கிட்டினால் போதாதா? பள்ளியின் உதைபந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டோம். நொந்து போன உடற்கல்வி ஆசிரியர் தனது பூப்பந்து விளையாட்டின் தோழரான என் தந்தையிடம் போட்டுக் கொடுத்தது வேறு விஷயம். இவ்வாறுதான் பேஸ்பால் எனக்கு கிரிக்கெட்டாய் அறிமுகமாகிய கட்டம்.

  அமெரிக்கா வந்தவுடன், டெஸ்ட் மேட்சையும் ஒரு பந்து விடாமல் கொட்டக் கொட்டப் பார்க்கும் பேறு கிட்டவில்லை. அதனால் சரி, என்னதான் அப்படி பேஸ்பால் என்று விளையாட்டாய்ப் பார்க்க ஆரம்பித்தேன். தொற்றிக் கொண்டது பேஸ்பால் வியாதி. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, "If you have 3 hits you are out and if you have 4 balls you can walk a base", என்று கிண்டலடிக்கும் வகையில் நிபுணத்துவம் வந்தது. சோதனைய¡க அரிசோனாவின் டயமண்ட் பேக்ஸ் (DiamonD Backs) அணி 2001'ல் உலக சேம்பியனாக, பேஸ்பாலின் பரம ரசிகனாகிப் போனேன். அவ்வணியில் கர்ட் ஷில்லிங் மற்றும் ரேண்டி ஜான்சன் மனங்கவர்ந்த பந்து எறிபவர்களாகவும், டோனி வோமாக் மற்றும் லூயி கொன்ஜாலெஸ் சிறந்த மட்¨டயாளர்களாவும் ஆகிப்போனார்கள்.

  ஒரு ஆட்டத்தில் அணிக்கு மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் கிட்டும். ஒவ்வொரு இன்னிங்ஸ¤ம் முடிய மொத்தம் 3 மட்டையாளர்களை எதிரணியினர் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். குறிப்பிட்ட சதுரத்தில் 3 முறை பந்தை அடிக்கத் தவறினாலும், அடித்த பந்து பிடிக்கப்பட்டாலும், பேஸை அடையுமுன் பந்துடன் தொடப்பட்டாலும் மட்டையாளர் ஆட்டமிழப்பார். இதை முறையே கிளீன் போல்டு (3 முறை?), காட்ச் அவுட் மற்றும் ரன் அவுட்
  என வைத்துக் கொண்டால் பேஸ் பால் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்து விடும். இதே போல் குறிப்பிட்ட 'V' பகுதியில் மைதானத்தை விட்டு வெளியே அடித்தால் 'Home Run' (சிக்ஸ்ர்?), மூன்று பேஸிலும் ஆளிருக்க 'Home Run' அடித்தால் 'Grand Slam' என்னும் நான்கு ரன்கள், ஒருவர்

  அடித்துவிட்டு அனைத்து பேஸ்களையும் ஒருமுறை வலம் வந்தால் ஒரு ரன். ஐய்யோ கிரிக்கெட் மாதிரியே இருக்கின்றதேவென உள்ளம் துள்ளும். அதேபோல் பந்து எறிபவரும் 'Fast Ball', 'Break Ball', 'Curve Ball' என்று கிரிக்கெட் பௌலிங் போன்று பலவகைகளில் வீசுவார். லீக் போட்டிகளில் சமீபத்தில்தான் அரிசோனாவின் ராண்டி ஜான்சன், மிகவும் புகழ் பெற்ற மட்டையாளரான பேரி பாண்டுக்கு (சான் பிரான்சிஸ்கோவின் 'Giants' அணி) 95 மைல்வேகத்தில் ஒத்தடம் கொடுத்தார். தோளில் அடிபட்டதால் தப்பினார் பாண்டு. இவர் இதுவரை 699 'Home Run' அடித்துள்ளார்.

  தொடர்ந்து டயமண்ட் பேக்ஸ் ஆட்டத்தில் லயிக்க முடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்த ராசியோ என்னமோ? அடுத்தடுத்து தோல்விகளைக்கண்டதால் வசதியாக அவ்வப்போது அணிகளைத் தேர்ந்தெடுத்து பார்க்கின்றேன். பேஸ்பாலின் பிதாமகன் சந்தேகமில்லாமல் பேபி ரூத் (Babe Ruth) தான். இவரை செல்லமாக 'Sultan of Swat' என்று அழைக்கின்றார்கள். இவரது சாதனைகளைப் பற்றி புத்தகமே போடலாம். இணையத்தில் கொள்ளைத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவருக்கென்று அங்கீகரிக்கப்பட இணையதளம் http://www.baberuth.com.

  பேபி ரூத் போல் மக்களின் செல்வாக்கை 'அவ்வளவாகப்' பெறாதவர் பேரி பாண்ட். இதோ இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில் பாண்ட், ரூத்மற்றும் ஹேன்க் ஆரன் (Hank Aaron) போல 700 ஹோம் ரன்களை அடித்திருப்பார். பலமுறை இவர் ஆடவரும் போது எதிரணி இவருக்கு ஆடவாய்ப்பே தராமல் 'வாக்' கொடுத்தும் (4 முறை ஓரங்கட்டியிருக்கும் கீப்பரிடம் பந்தை எறிந்தால் போதும்; மட்டையாளர் அடுத்த பேஸிற்கு
  சென்றுவிட வேண்டும்) இந்த சாதனை மலைக்க வைக்கின்றது. ரூத்திற்கு இந்த அளவு எதிரணியினர் பயந்து வாக் கொடுக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

  அதே போல் பாஸ்டன் ரெட் சாக்ஸ் (Red Sox) மற்றும் நியுயார்க் யான்க்கீஸ் (Yankees) ஆட்டங்கள், இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போல் பயங்கர சூடு கிளப்பும். நான் பார்த்தவரை தோற்பதே தொழிலாகிப் போனது ரெட் சாக்ஸ் அணிக்கு. இதற்கு பேபி ரூத்தின் சாபமே (The Curse of the Bambino) பேஜாரான காரணம்  சொல்வோரும் உண்டு.

  1918'ல் ரெட் சாக்ஸ் 5'வது முறையாக உலக சீரிஸில் வென்றனர் (உலக சீரிஸ் என்பது அமெரிக்காவினுள்ளேயே நடக்கும் போட்டி என்பதறிக!). அப்போது ரெட் சாக்ஸ் அணியின் சொந்தக்காரரான ஹேரி பிரேஜீ (Harry Frazee) தனது பெண் தோழியின் பணத் தேவைக்காக பேபி ரூத்தை 1920'ல், எதிரணியான யாங்க்கீஸிடம் $1,00,000 டாலருக்கு விற்று விட்டார். காண்ட்ராட்டை ரூத்தினால் மீற முடியாமல் போனது. அன்று அவர் கெ¡டுத்த சாபம்தான் காரணமாம்; 1918'ற்கு பிறகு இன்றுவரை லீக் போட்டிகளில் வெற்றி பெற்று 4 முறை உலகச் சுற்றில் தகுதி பெற்றாலும் சொல்லி வைத்தாற் போல் கடைசி ஏழாவது ஆட்டத்தில் ரெட் சாக்ஸ் தோற்றுப் போவது. உலகச்சாம்பியன் பட்டத்தை, ரூத்தை தாரை வார்த்த பிறகு, இன்றுவரை ரெட் சாக்ஸால் ஒருமுறை கூட ருசிக்க முடியவில்லை. ஆனால் ரூத் சேருமுன்னர் ஒரு முறை கூட உலக சுற்றில் வெல்லாத யாங்க்கீஸ், இன்றுவரை அமெரிக்காவின் சாம்பியன் பட்டத்தை 26 முறை கைப்பற்றியுள்ளது. சாபமா சதியா? விந்தையாய் இல்லை?

  பேஸ்பாலை மையமாய் இரண்டு ஹாலிவுட் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று 61* (2001). பில்லி கிரிஸ்டலின் இயக்கத்தில் 1961'ல் யாங்க்கீஸ் அணியில் ரூத்தின் சாதனையை முறியடிக்க இரு மட்டையாளர்கள் போட்டியிடுவதை மிகவும் சுவாரஸியமாக, லயிக்கும் அளவில் வெளியான படம். 1927'ல் ரூத் 60 ஹோம் ரன்கள் அடித்தார். அதாவது அவ்வருடத்தில் அமெரிக்க லீக் போட்டிகளில் அடிக்கப்பட்ட மொத்த ஹோம் ரன்களின் எண்ணிக்கையில் 14% ரூத் மட்டுமே விளாசினார். இச்சாதனையை முறியடிக்க 1961'ல் யாங்க்கீஸின் இரு
  மட்டையாளர்கள் மாரிஸ் மற்றும் மேன்டில் (Roger Maris and Mickey Mantle) முயற்சிக்கின்றனர். இவர்களில் மேண்டிலுக்கு டெண்டுல்கர் போல புகழ் அதிகம். மாரிஸோ நமது திராவிடைப் போல் மிகவும் அடக்கி வாசிப்பவர். ரூத் மொத்தம் 154 லீக் ஆட்டங்களில் 60 ஹோம் ரன்கள் அடித்தார். ஆனால் புதிய திருத்தியமைக்கப்பட்ட லீக்கில் மொத்தம் 162 ஆட்டங்கள். எனவே ரூத்தைப் போலவே 154 ஆட்டங்களில் 60 ஹோம் ரன்களுக்கு மேல் அடித்தால்தான் அவரது சாதனையை முறியடித்தாய் கருதப்படும்; இல்லையென்றால் சாதனை இதே லீக்கில் முறியடிக்கப்பட்டாலும் அடிக்கப்பட்ட ஓட்டங்களின் எண்ணிக்கை மீது ஒரு ஸ்டார் வைக்கப்படுமென்று MLB (Major League Baseball) கமிஷனர் அறிவிக்க லீக் ஆட்டம் களை கட்டுகின்றது. மாரிஸாக பெப்பரும் (Barry Pepper), மேண்டிலாக ஜேனும் (Thomas Jane) நடிப்பில் விளாசித் தள்ளியிருப்பார்கள். சாதனையை முறியடித்து யார்? எவ்வாறு? மீதிக் கதையை வெண்திரையில் காணுங்கள்.

  அதேபோல் இன்னொரு படம் A League of Their Own (1992). டாம் ஹேங்ஸ் (Tom Hanks) ஒரு குடிகார பேஸ்பால் கோச். யாருக்கு? 1940'ல் முதன் முதல் உருவாக்கப்படும் பெண் பேஸ்பால் குழுவிற்கு. இப்படம் 61* போல் விறு விறுப்பாக இல்லையென்றாலும், 1940'ல் பெண் வீராங்கனைகளின் நிலையை அப்பட்டமாய்க் காட்டும். மடோனா கூட இப்படத்தில் உண்டு (அட ஒரு பார்க்கும் ஆர்வத்தை உங்களுக்கு தூண்டுவதற்காகத்தான் சொல்கின்றேன்). இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஆழ்ந்து கிடந்த போது, பொழுது போக்காய் சில
  பணக்காரர்கள் பெண்களுக்கும் பேஸ்பால் ஆட்டத்தை அறிமுகப்படுத்துவர். ஆண்களுக்கே உரிய ஆட்டமாகக் கருதப்பட்ட பேஸ்பாலில் பெண்களும் நுழைய, எதிர்பார்ப்புகளை விஞ்சி ரசிகர்கள் கூட ஆரம்பிக்கின்றர்கள். சுயலாபத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பெண்கள் லீக் தொடரப்பட்டதா?கிராமத்திலிருந்து வந்த இரு பெண் ஆட்டக்காரர்கள் எவ்வாறு பரிமளிக்கின்றார்கள்? ஒரே அணியிலிருந்து பின்னர் வெவ்வேறு அணிகளுக்கு
  சூழ்நிலையால் பிரியும்போது அவர்களுக்குள் நிலவும் போட்டித்தன்மை என்று அடுத்தடுத்த சம்பவங்கள் / எதிர்பார்ப்புகள் படம் பார்ப்பவரை கட்டிப்போடுகின்றன.

  ரூத், பாண்டை விட நமது டெண்டுல்கருக்கு ரசிகர்கள் அதிகமென்றால் அமெரிக்கர்கள் வியக்கின்றார்கள். ஆமாம்...இதே உருண்டை மட்டையுடன், புல் டாஸாக 100 மைல் வேகத்தில் வரும் பேஸ்பாலை டெண்டுல்கர் ஹோம் ரன் அடிப்பாரா?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |