செப்டெம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : இரண்டல்ல, மூன்று - ஒரு சிந்தனை !
- ஜி.கௌதம்
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

நன்மை - தீமை, நல்லது - கெட்டது, சரி - தவறு, வெற்றி - தோல்வி.. இப்படி மனித வாழ்வின் எல்லா சவால்களும் சங்கடங்களும் இரண்டிரண்டாகவே இருக்கின்றன." என்றார் ஆசிரியர்.

"மன்னிக்க வேண்டும். இரண்டில்லை, மூன்று" என்றாள் திடீரென எழுந்து குறுக்கிட்ட ஒரு மாணவி!

அவள் படிப்பும் பண்பும் உள்ள அருமையான பெண் என்பதால் எட்டிப் பார்த்த கோபத்தை மறைத்துக் கொண்டு எரிச்சலோடு கேட்டார் ஆசிரியர்.. "எப்படி என விளக்க முடியுமா உன்னால்?"

தெளிவாகப் பேசினாள் அவள்.. "ரோஜா மலருக்கு முயற்சி செய்வதாக உதாரணம் செய்து கொள்வோம். முயற்சி திருவினையானால் மலர் கிடைக்கும். இது ஒரு வாய்ப்பு. அல்லது மலர் கிடைக்காமல் போகலாம், இது இரண்டாவது வாய்ப்பு"

"அப்படியானால் மூன்றாவது?!"

"மலருக்குப் பதிலாக முள் கிடைக்கலாம்!"

மாணவியின் பதிலுக்கு கைத்தட்டிப் பாராட்டினார் ஆசிரியர். அவளது புத்திசாலித்தனத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்க விரும்பினார். கேள்விகளைத் தொடர்ந்தார்.

"சரி, இதே உதாரணத்தில் தொடர்வோம். முயற்சி செய்தது நீயாக இருந்து மலர் உனக்கே கிடைக்குமானால் என்ன செய்வாய்?"

"அதுதானே என் ஆசை, மகிழ்வேன். ஆனால் பேராசையாக இல்லை என்பதால் பெரு மகிழ்ச்சியோ ஆர்ப்பாட்டமோ இருக்காது!"

"மலர் கிடைக்கவில்லை எனில்?"

"எனக்காகக் காத்திருக்கும் இதைவிடச் சிறந்த வேறு ஒரு மலருக்காக முயற்சிகளையும் பயிற்சிகளையும் செய்ய ஆரம்பிப்பேன்!"

"முள் கிடைத்தால்?"

"மகிழ்வேன். மலர்போல ஒரே நாளில் வாடிவிடாது முள். நின்று நிதானித்து, அடுத்த வெற்றிக்கான முயற்சிகளை நான் கூர்ப்படுத்திக் கொள்வதற்கான வைராக்கியத்தை எனக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்!"


 

| | |
oooOooo
ஜி.கௌதம் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |