செப்டெம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : திரு. எஸ்.வி. சண்முகம் எம்.எல்.ஏ. பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் பேசும் சுதந்திரம் அங்கு சுத்தமாக கிடையாது.

மதுரை மேற்குத் தொகுதி மக்களிடையே கூட பிரபலமில்லாமல் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ சண்முகம் இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அவரது அல்ட்ரா மாடர்ன் அரசியல் பாணி. 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சீட் பெற்று வெற்றியும் பெற்ற இவர், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் அடுத்த முதல்வர் என்று சொல்லப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளி விட்டார். அ.தி.மு.க.வில் தான் இன்னும் இருப்பதாக சொல்லும் இவர் அ.தி.மு.க. தலைமையை எதிர்த்துப் பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். போலீஸ் பாதுகாப்போடு வலம் வரும் இவரிடம் தமிழோவியத்தற்கு பேட்டி கேட்வுடன் ஒப்புக் கொண்டார். இணையதளம் பற்றி அதிகமாக இவருக்கு தெரிந்திருக்க வில்லை. பேட்டியை பளீச் சென்று போட வேண்டும் என்று மட்டும் கோரிக்கை வைத்தார். சரி என்று தலையை ஆட்டி விட்டு பேட்டி எடுத்தோம்.

தமிழோவியம் :- உங்கள் மீது மதிப்பு, மரியாதை வைத்திருந்த உங்கள் கட்சிக்காரர்கள் திடீரென்று செருப்பு, துடைப்பத்தோடு உங்களை மிரட்ட வந்ததை எப்படி பார்க்கிறீர்கள். இந்த சூழ்நிலை உருவாக நீங்கள் தானே காரணம்?

Stalin,Shanmugamபதில் :- நான் ஏதோ அ.தி.மு.க. வை விட்டு வெளியே போகப் போவது மாதிரியும், அ.தி.மு.க. விற்கு துரோகம் செய்து விட்டது மாதிரியும் கட்சிக்காரர்கள் சொல்லி கலாட்டா செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அ.தி.மு.க. நகரச் செயலாளர் மற்றும் சில கட்சிக்காரர்கள் தான் காரணம். எனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அதனால் நானும் கலந்து கொண்டேன். இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனது தொகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி நீண்ட காலத்திற்கு பின் இந்த அரசு செயல்படுத்துகிறது. அதனை நான் வரவேற்க வேண்டும். அதனால் தான் நான் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. கட்சிக்காரர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். இந்த விஷயத்தில் என் மீது எந்தத் தவறும் கிடையாது. அவ்வளவு தான்.

தமிழோவியம் :- திராவிட கட்சிகளை ஒன்று சேர்க்கும் தலைமைப் பண்பு, திறமை ஸ்டாலினிடம் இருப்பதாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். இது அவரால் முடிகிற காரியமா?

பதில் :- ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும் என நான் நம்புகிறேன். இன்றைக்கு தமிழக அமைச்சர்களிலேயே உள்ளாட்சித் துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுகிறார். அதனால் தான் அவருக்கு அப்படி ஒரு கோரிக்கையை நான் மேடையில் முன் வைத்தேன். நான் இப்படி பேசியதால் என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள். வேண்டும் என்றால் என்னை கட்சியை விட்டு நீக்கிப் பார்க்கட்டும். அதனை பற்றி எனக்கு கவலை இல்லை.

தமிழோவியம். :- உங்களை கட்சியை விட்டு நீக்கினால் எம்.எல்.ஏ. பதிவியை ராஜினாமா செய்வீர்களா?

பதில் :- எனது தொகுதி மக்கள் என் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு அதிகமாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். என்னை கட்சியை விட்டு நீக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் அப்படி நீக்கினால் நான் சுயேட்சை உறுப்பினராக செயல்படுவேன்.

தமிழோவியம் :- நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்களிடம் இருந்த கட்சிப்பதவி பறிக்கப்பட்டு இருக்கிறதே?

பதில் :- இது பற்றி நான் ஏற்கனவே பத்திரிக்கைகளுக்கு சொல்லி விட்டேன். மதுரையில் நான் பேசிய பேச்சில் தவறு இருக்கிறது என்றால் என்னை அழைத்து விசாரித்து எனது விளக்கத்தை பெற்று இருக்கலாம். ஆனால் தலைமை அப்படி நடந்து கொள்ளவில்லை.

 
 தமிழோவியம் :- அ.தி.மு.க.வில் தொண்டர்களை மதிக்கும் மனப்பான்மை இல்லை என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். இதனை கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

பதில் :- உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் எம்.எல்.ஏ. ஆனதற்கு கட்சியும், கட்சித் தொண்டர்களும் தான் காரணம். நானும் தேர்தலில் நன்றாக வேலை செய்தேன். கட்சி எனக்கு பணம் கொடுத்தது உண்மை தான். இதனை நான் மறக்க மாட்டேன். மறுக்க மாட்டேன். ஆனால் அங்கு தொண்டன், எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசுவதில்லை. குறைகளை சொல்ல நேரம் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் பேசும் சுதந்திரம் அங்கு சுத்தமாக கிடையாது. கட்சியில பல பிரச்சினைகள் இருக்கும் பொழுது அதனை தெரிஞ்சு சரி படுத்துறது தான் தலைமையோட வேலை. அதனை விட்டு விட்டு அதனை வெளியே சொன்ன என்னை திட்டி என்ன பயனும் கிடையாது.

தமிழோவியம் :- தி.மு.க. சார்பில் உங்களுக்கு இரண்டு கோடி கொடுக்கப்பட்டதா சொல்லப்படுகிறதே?

பதில் :- யாரு சொன்னது? இது எல்லாம் அப்பட்டமான பொய். யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு பேசும் பழக்கம் எனக்கு கிடையாது.

| | | | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |