செப்டெம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜோதிட விளக்கங்கள் : நாள் என்பது என்ன ?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

என்ன இது? 5-ம் வகுப்பு மாணவரைக் கேட்க வேண்டிய கேள்வியை நம்மிடம் கேட்க்கின்றாறே என நீங்கள் நினைக்கலாம்.  அப்படியல்ல ! இதில் பலர் குழப்பமடைந்து இருக்கின்றனர். ஏனெனில் தமிழ்த்தேதியும், ஆங்கிலத் தேதியும் சேர்ந்து கணக்கிடும் போதுதான் குழப்பமே வருகிறது.

சரி ! இன்று என்ன தேதி ? எல்லோருக்கும் ஆங்கிலத் தேதிதான் ஞாபகத்திற்கு வரும். இன்று 26-09-2006 செவ்வாய்க்கிழமை. தமிழ்த்தேதி - பஞ்சாங்கத்தில் புரட்டாசி மாதம் 10-ம் தேதியென்று போட்டிருக்கிறார்கள். இதில் எந்த குழப்பமும் இல்லை; சரி! இன்று இரவு சுமார் 1.00 மணியளவில் ஒரு குழந்தை சென்னையில் பிறக்கிறது? தேதி, கிழமை என்ன? 

ஆங்கிலக் கணக்குப்படி இரவு 12.00 - க்கு நாள்முடிந்து மறுநாள் பிறந்து விடுகிறது. அதாவது 26-ம் தேதி இரவு 12.00 மணியுடன் முடிந்து 12-01 - க்கு 27ம் தேதி பிறந்து
விடுகிறது.  ஆகவே 1.00 மணிக்குப் பிறந்த குழந்தையின் பிறந்த ஆங்கிலத் தேதி 27-ம் தேதியாகும்.

அப்படியானால் தமிழ்த்தேதியில் மாறுதல் வருமா? 10-ம் தேதி யில்லையா? தமிழ்த்தேதியில் மாறுதல் வராது.  அன்று புரட்டாசி மாதம் 10-ம் தேதிதான். ஏன்?

நம்முடைய இந்திய நாட்டுக் கணக்குப்படி சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயம் உள்ளவரை உள்ள காலமே ஒரு நாள் என்பது.  அதாவது சென்னையில் அன்று சூரிய உதயம் காலை 5:50 - எனக் கொள்ளுங்கள். காலை 5:50 -ல் இருந்து மறுநாள் காலை சூரிய உதயம் வரை உள்ள காலமே நாள் எனப்படும். மறு நாள் காலை சூரிய உதயம் 5:51 ஆக இருக்குமேயானால் இந்த 24 மணி நேரம் ஒரு நிமிஷமே ஒரு நாள் எனப்படும். இந்த இடைவெளியில் பிறந்த குழந்தைகள் புரட்டாசி 10-ம் தேதியில் பிறந்ததாகவே கொள்ள வேண்டும்.

அப்படியானால் கிழமை என்ன?  நம் தமிழ்க் கணக்குப்படி குழந்தை செவ்வாய்க் கிழமையில் ஜனனம் ஆனதாகவே கொள்ள வேண்டும். சிலர் ஆங்கலத் தேதி மாறிவிட்டதால் புதன் கிழமை பிறந்ததாகக் கொளவ்ர். அது சரியல்ல.

உங்களுக்கு இந்த மாதிரி இரவு 12-00 மணிக்குமேல் குழந்தை பிறந்திருந்தால் சரியான ஆங்கிலத் தேதியை ஜோதிடருக்குக் கொடுத்து சரியான ஜாதகத்தைக் கணிக்கப் பெறுவீர். இது மிக முக்கியமான விஷயமாகும்.

| |
oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |