செப்டெம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : ஒரு மந்திரம்! - தீதும் நன்றும்..
- ஜி.கௌதம்
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. நம்மைச் சேரும் நன்மைகளும் தீமைகளும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவைதான்!

Gowthamஇந்த நிமிடமும் நான் மதிக்கும் ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தை விட்டு இரண்டு முறை நானாக வெளியே வந்திருக்கிறேன்!

பார்த்துப் பார்த்து உருவாக்கிய ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ வெற்றிகளை முத்தமிட ஆரம்பித்தபோது 'குட் பை' சொல்லிவிட்டு வெளியேறினேன்!

விகடனுக்கு போட்டியான குமுதத்திலும் பணி புரிந்திருக்கிறேன்!

குமுதத்தை விட்டு வெளியேறி, ராஜ முந்திரியில் நடந்த ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கு அஸோசியேட் டைரக்டராகப் போனேன்!

இரண்டே மாதங்களில் அங்கிருந்தும் ஜூட்!

விகடன், குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், விஜய் டி.வி., மின் பிம்பங்கள், ஜெயா டி.வி., மீடியா ப்ளானட்.. இப்படி நான் கடந்து வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை கொஞ்சம் நீளமானது. 'ஒரே இடத்தில் தேங்கிவிட்டால் குளம்- குட்டையாகிவிடுவோம். ஓடிக்கொண்டே இருப்பதுதான் கடல் போய்ச்சேரும் ஆறு' என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

இப்போதிருக்கும் ‘குங்குமம்’ எனக்கு பதிமூன்றாவது நிறுவனம் ! பொறுப்பாசிரியராகப் பணி புரிகிறேன்.

ஆக எனக்கு வயது அதிகமில்லை என்றாலும் கடந்துவந்த பாதை நீளமானது.

நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். கேள்விப்பட்டு கற்றதைவிடவும், மிக அதிகமாக பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

என் இந்த முழுநீளப் பயணத்தில் என்னைத் தன் வயப்படுத்திய ஒரு மந்திரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

அது.. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. நம்மைச் சேரும் நன்மைகளும் தீமைகளும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவைதான்!

சரி, நீங்கள் கற்றுக் கொண்ட மந்திரமாக எதைச் சொல்வீர்கள்?

பின்னூட்டங்களில் எழுதுங்களேன் நண்பர்களே. நானும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.


 

| | | |
oooOooo
ஜி.கௌதம் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |