செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்பதற்கு மருத்துவ காரணம்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |
"இதனை நோய் என்று சொல்வதைவிட நேர்முறைக்கு மாறான ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்."

குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. என் பெண்/பிள்ளை நல்ல மதிப்பெண் எடுக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகளை மருத்தவரின் கேள்வி பதில் முதல் ஜோதிட கேள்வி பதில் வரை பார்க்கிறேன். அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே க்ளாஸ்தான் ஒரே டீச்சர்தான் ஏன் உன்னால மார்க்கு வாங்க முடியல என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல்தன்மையாக கூட இருக்க கூடும்.

டிஸ்லெக்ஸியா என்பது ஒரு நரம்புமண்டலத்தை சார்ந்த ஒருவகை மாற்றம். இதனை நோய் என்று சொல்வதைவிட நேர்முறைக்கு மாறான ஓட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் அடிப்படை அறிகுறி ஒ ருவருக்கு படிப்பதில் அல்லது எழுதுவதில் உள்ள தடுமாற்றமே ஆஅகும். இது சில உயிர்வேதியியல் மற்றும் மரபணுக்களின்  குறியீடு மாற்றத்தால் வரும் ஒரு மாறுபட்ட சிந்தனை ஆகும். ஆனால் சிலர் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்க பட்டிருந்தாலும் நன்றாக சரளமாக படிக்க கூடும். இவர்களின் சிந்தனை ஓட்டம் சற்றே தடை பட்டு இருக்கும். 1887 இல் முதன் முதலாக இம்மாதிரி மாற்றங்களுக்கு டிஸ்லெக்சிக் என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படி பட்ட மாற்றங்கள் உள்ளவர் அவரை ஒத்த மற்றவரைவிட எழுத படிக்க யோசிப்பதில் என்று ஒரு தரம் தாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.

dyslexicகண் பார்வை சரியில்லாமல் போனால் இத்தகு மாற்றம் ஏற்படுமா அல்லது வேறு ஏதாவது நுண்ணிய நரம்பு மண்டல மாற்றங்களால் ஏற்படுகிறதா என்றூ ஆராய்ந்ததில், மூளையின் அமைப்பில் வெளி தோற்றத்தில் சில மாறுதல்கள் இருப்பது தெரியவந்தது. டிஸ்லெக்ஸியா இருப்பவர்கள் சரியாக உச்சரிக்க கூடிய சக்தியை குறைவாக பெற்றிருப்பார்கள். டிஸ்லெக்ஸிக் உள்ளவர்கள் கீழே உள்ள பட்டியலில் ஏதேனும் சில அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். இவை நிமிடத்திற்கு நிமிட ம் மாறக்கூடும். அல்லது நாளாக நாளாக இன்னும் குழப்பமும் தெளிவின்மையும் அதிகரிக்க கூடும்.

பொது

 • பார்க்க நல்ல புத்திசாலிபோலவும், நல்ல ஆற்றொழுக்கு பேச்சும் உடையவராக இருக்க கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களை போல எழுத படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
 • சோம்பேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் உன்னால் முடியும் ஆனால் நீ உழைப்பதிலை என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.
 • சில சமயம் நல்ல பொது ஞானம், அ  றிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். ஆனால் அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வர்கள்.
 • முட்டாளை போல தோற்றமும். தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்
 • நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவிய வரைவது போன்ற கலைகளில் அல்லது நல்ல கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.
 • பகற்கனவு காண்பவராக இருக்க கூடும்
 • நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களையும் பார்க்க கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.


பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப்பிழைகள்:

 • படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.
 • எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்
 • திரும்ப திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறிவரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றி படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.
 • கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையில் ஒரு குறையும்  இருக்காது


கேட்டல், பேசுதல்:

அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்க கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும் முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

 • எழுதுதல் மற்ரும் இயக்க திறமைகள் ( Motor skills):
 • பென்சிலை பிடித்து கொள்வதில் மாற்றம் இருக்கும். கை எழுத்து நன்றாக இருக்காது. புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
 • இடமிருந்து வலமாக எழுதுவதோ அல்லதுஇடது கை பழக்கம் உள்ளவராக இருக்க கூடும்.
 • நேரம் தவறாமை, அல்லது நேர நிர்வாகம்:
 • இவர்களுக்கு நேரம் சொல்வது கடினம். ஒரு வரிசை கிரமத்தில் வேலைகள் செய்வதும் நினைவில் வைத்து கொள்வதும் கடினம்.
 • பண விஷயத்தில் கவனம் போதாது. எண்னுதல் மிகவும் கடினமான செயல்.
 • கணக்கில் விவரங்களுடன் கூடிய கணக்குகளை போட சிரமப்படுவார்கள்.
 • நினைவுத்திறனும் புரிந்து கொள்ளும் திறனும்
 • நீண்டநாட்களுக்கு முன் நடந்ததை எல்லா விவரங்களுடனும் நினைவு வவத்திருப்பார்கள். மனித முகங்கள், நிகழ்வுகளை நினவு கொள்ளும் இவர்களால் பெயர்களையோ அல்லது சற்றே எண்களுடன் கூடிய விவரங்களையோ நினைவு படுத்த முடியாது.


சில உண்மைகளும் புள்ளிவிவரங்களும்

5% லிருந்து 15% மக்கள் டிஸ்லெக்ஸிக் என்று சொல்ல பட்டாலும் நல்ல மருந்துகள், கவனம் இவற்றால் இதை குணப்படுத்த முடியும். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.
ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் நன்றாக வாய்விட்டு படிக்க தடுமாறும் போது டிஸ்லெக்சியா இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்க படுகிறது. இது கண் பார்க்கும் எழுத்து வடிவத்திற்கும், மனதில் பதிந்துள்ள ஒலி வடிவத்தையும் பொறுத்தி பார்க்க தாமதம் ஆவதால் ஏற்படும் தடுமாற்றம் ஒரு காரணம். இதற்கு  பெரும்பாலும் பிறக்கும் போதே நடக்கூடிய நிகழ்வுதான் காரணம் என்பதால் சுற்று புர சூழலோ மற்ற வேதி பொருட்களின் தன்மையோ காரணம் இல்லை. இவர்களின் இடது பக்க மூளளயில் நடக்கும் செயல்கள் சற்றே தாமதமாக செயல் படுவது காரணமாக சொல்ல படுகிறது.

எப்படி குணப்படுத்த முடியும்?

இப்படிப்பட்ட குறையுள்ள குழந்தைகளுக்கு வார்த்தைகளை பிரித்து பொருள் சொல்லி தருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். வார்த்தைகளை பிரிக்கும் போது ஒலியில் வரும் சிறிய மாற்றங்களை உணரும் வண்ணம் சொல்லி தந்தால் நாளாவட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இடது பக்க மூளை வடிவங்கள் அவற்றின் அமைப்புகள் இவற்றில் திறன் கொண்டது. இது இடது டெம்ப்போ பெரைடல் மூளைக்கு அருகில் உள்ளது. எனவே படங்களுடன் கூடிய வார்த்தைகளை அவற்றின் ஒலியை புரிந்து கொள்ளுதல் எளிதாக வரும். மிக இளைய வயதிலேயே கண்டறியப்பட்டால் இது பூரணமாக குணமாக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப சில வேலைகளை சொல்லி தாருங்கள். அவற்றை செய்யும் போது அவற்றுடன் கூட நேரம், அவற்றின் வடிவம் இவற்றையும் பதிய வைக்க முயற்சி செய்யுங்கள். ஒரு அறை யில் உள்ள தொலை பெட்டியை சுத்தம் செய்தால் அதன் வடிவம் மனதில் பதிய வைக்க முடியும். துடைக்கும் பொது கைகளால் அதன் வடிவத்தை ஒற்று நோக்குவதால் வடிவம் புலப்படும். மேலும் இது போன்ற சின்ன செய்கைகள் அவர்களின் தாழ்வு மனப்பானமையை போக்குவதோடு, அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

ஒரு முக்கிய குறை இரு கண்களையும் ஒரு நேரத்தில் ஒரு சொல்லில் குவிப்பது. இது பலநேரங்களில் டிஸ்லெக்ஸிச் மானவர்கள் எழுத்துக்கள், எண்கள் இவற்ரின் வரிசை கிரமத்தில் குழப்பம் அடைவதை விளக்குகிறது. வலது கண் சொல்லின் ஆரம்பத்திலும் இடது கண் சொல்லின் முடிவிலும் ஆரம்பித்து இரண்டையும் ஒன்றாக பார்க்கிறார்கள். இதற்கு கண்ணில் ஒருவித கறுப்பு patch அணிந்து கொண்டு படித்தால் சரியாவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மேலும் கண்களின் தொடர்பான சில நியுரான்கள்  குவிக்க படுவதால் மூளையில் உள்ள பார்வை மையத்தில் தொடர்பு ஏறபட தாமதம் ஆகிறது. அதேபோல க்ரோமோசோம் 1, 6 இவற்றில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பிற்கும் டிஸ்லெக்ஸிற்கும் தொடர்பு இருக்க கூடும்.

இது போல சில குறைபாடுகளால் குழந்தைகள் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அல்லது நன்றாக படிக்க முடியாமல் போகலாம். அடிப்படை குறைபாடுகளை புரிந்து கொள்ளாமல் நன்றாக பழகுவதில்லை, படிப்பதில்லை, கவனம் போதாது என்று குறை கூராமல், குறைகளை களைய அறிவியல் ரீதியில் முயன்றால் நிச்சயம் குழந்தைகள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |