செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ப்ளூடூத் - 3
- எழில்
| Printable version | URL |

ப்ளூடூத் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளுமுன் அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் அக்கருவிகளுக்கிடையே தெரிந்திருக்க வேண்டும். அதாவது இரு வேறு சேவை வழங்கும் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால் பயனில்லையே.  உதாரணமாக, கோப்புப் பரிமாற்றம் செய்ய வேண்டுமனில்,  இரண்டு ப்ளூடூத் கருவிகளிடமும் கோப்புப் பரிமாற்றத்துக்கான சேவை (File Transfer) இருக்க வேண்டும்.

ப்ளூடூத் கருவிகள் (சென்ற பதிவில் கூறியது போல்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இணைந்தவுடன் இணைப்பு (Pairing) ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கருவிகளின் சேவையை கண்டுபிடிக்கும் (Service discovery) நிகழ்வும் ஏற்படுத்தலாம். அவ்வாறு சேவை கண்டுபிடித்தல் செய்த பின்பே ஒரு கருவியின் உபயோகம் மற்ற கருவிக்குத் தெரிய வரும். கடவுச் சொல் கொண்டு ஏற்படுத்தப்படும் இணைப்பு பாதுகாப்பானது. அவ்வாறு கடவுச் சொல் இல்லாமல் ஏற்படுத்தப்படும் இணைப்புகளால் உங்கள் அனுமதியின்றி தகவல் உங்கள் கணினி அல்லது செல்பேசியிலிருந்து திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்துகையில் பாதுகாப்பான (Secured data transfer) பரிமாற்ற வகையை உங்கள் கருவியின் அமைப்புப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

Bluetooth Connectபொதுவிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் சாலச் சிறந்தது. உங்களது செல்பேசியின் ப்ளூடூத் கருவி இயக்க நிலையில் இருந்தால் பிற கருவிகள் உங்களது செல்பேசியுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கலாம் . பாதுகாப்பான பரிமாற்ற முறையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கவில்லை எனில் உங்கள் செல்பேசியிலிருக்கும் தகவல்களை நீங்கள் அறியாமலேயே பிறர் திருடிக்கொள்ளலாம் . விஷமிகள் , பொதுவிடங்களில் இயக்கத்திலிருக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து , மிரட்டும் தகவல்களை அனுப்பலாம். "You are Bluejacked" என்ற தகவல் இவற்றுள் பிரபலமான பயமுறுத்தும் தகவல் . இத்தகவலால் செல்பேசிக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் , நாம் மிரண்டு போய், செல்பேசிக்கு ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று தவறாய் எண்ண வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.இம்மாதிரித் தகவல்கள் உங்கள் செல்பேசியில் , நீங்கள் பொதுவிடங்களில் இருக்கும் போது ஏற்படின் தகவலப் புறக்கணித்து உடனடியாக உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள்.

சென்ற வருடத்தில் பரபரப்பூட்டிய கபீர் எனும் செல்பேசி வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கணினி வைரஸ் பல உலவும் இன்னாளில் , முதன் முதலில் செல்போனில் பரவிய வைரஸ் கபிர் ஆகும். எல்லாச் செல்பேசிகளிலும் இது பரவவில்லை. ஸிம்பியன் இயங்குதளம் அமைந்துள்ள செல்பேசிகளில் தான் இது பரவியது. நோக்கியாவின் செல்பேசிகள் பலவும் இந்த இயங்குதளம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பவை . ப்ளூடூத் மூலம் ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்குப் பரவும் வைரஸ்தானிது. ப்ளூடூத் மூலம் உங்களது செல்பேசிக்கு வரும் இந்த கோப்பு தகவல்பெட்டியில் (Inbox) சேகரிக்கப்படுகிறது. எதோ தகவல் வந்திருக்கிறது என்று எண்ணி இந்தக் கோப்பைத் திறந்தீர்களேயானால் , உங்களது ப்ளூடூத் அமைப்பினை மாற்றி, இந்தக் கோப்பினை அருகிலுள்ள பிற ப்ளூடூத் வசதியுள்ள செல்பேசிகளுக்கு அனுப்பி அந்தச் செல்பேசியையும் பாதிக்கும் குணம் கொன்டது இந்த வைரஸ் . இந்த வைரஸினால் செல்பேசியின் இயல்பான ப்ளூடூத் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ப்ளூடூத் இயக்கத்தினை நீங்கள் நிறுத்தி வைத்தாலும் , இந்த வைரஸ் உங்களது செல்பேசியில் நுழைந்து விட்டதெனில், தானாக, ப்ளூடூத் இயக்கத்தை ஆரம்பித்து அருகே உள்ள பிற ப்ளூடூத் செல்பேசிகளுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஒரு வைரஸ் மட்டுமே செல்பேசி வைரஸ் என அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு புரளிகள் இணையத்திலும் , மின்னஞ்சல் வழியாகவும் கிளப்பி விடப்படுகின்றன. "இந்த வகை எண்களிலிருந்து அழைப்பு ஏற்படின் அவ்வழைப்பை ஏற்க மறுத்து விடுங்கள் . அவ்வழைப்பினை ஏற்றுப் பேசினீர்களேயானால், உங்கள் செல்பேசியின் எண், ஸிம் அட்டையின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் " என்றெல்லாம் கூறிப் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகைத் தகவல்கள் அனைத்தும் புரளியே !

ப்ளூடூத் கருவிகளின் பயன்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது கம்பியில்லா காது பேசியும், கணினியில் பயன்படும் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியும் தான் . அழைப்பு ஏற்பட்டால், ப்ளூடூத் காதுபேசியைப் பயன்படுத்தி, செல்பேசியின் விசையை அழுத்தாமலேயே தானாக அழைப்பை ஏற்றுப் பேசலாம் (Auto Answer). தற்போது செல்பேசியிலேயே பாடல் கேட்கும் வசதி வந்துவிட்டதால் ஸ்டீரியோ வகை ப்ளூடூத் காதுபேசிகள் அறிமுகமாகப் போகின்றன. ஆக, இனிவரும் காலங்களில் , மின்னணுவியில் சாதனங்களில் மின்சார கேபிள்கள் தவிர வேறு எந்தத் தேவைக்கும் கேபிள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது !

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |