செப்டம்பர் 23 2004
தராசு
கார்ட்டூன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
திரைவிமர்சனம்
க. கண்டுக்கொண்டேன்
சமையல்
நையாண்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நையாண்டி : அண்டார்டிகாவில் சு.சுவாமி
  - திருமலை கோளுந்து
  | Printable version |

  மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத அண்டார்டிகா பகுதியில் தன்னந்தனியாக உலாவிக் கொண்டு ஒரு பெரிய ஜஸ் கட்டியை ஆராய்ந்து கொண்டு இருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அவரை நமது அண்டார்ட்டிக் பகுதி அதி சிறப்பு நிருபரான பண்டாரம் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பல திடுக்கிடும் தகவல்களை அள்ளி விசினார். இதோ அவரது பேத்தலின் ஸாரி பேட்டியின் முழு விபரம். (இது ஒரு கற்பனைன்னு தனியா உங்களுக்கு சொல்லனுமா ?)

  பண்டாரம்: என்ன சார் ரொம்ப நாளாக தமிழ் நாட்டுல நீங்க இல்லை. மக்கள் நகைச்சுவை கருத்துக்கள் இல்லாம தவிக்கிறாங்களாமே?

  சுப்பிரமணியசுவாமி: எந்த மடையன் தமிழ்நாட்டுல இருப்பான். எங்க போனாலும் வெயில் கொளுத்துது. யாரைக் கேட்டாலும் தண்ணியில்லனு சொல்லுறானுங்க. ஒரு பக்கம் வை.கோ. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க தேவையில்லாமல் நடைபயணம் போறாரு. மற்றொரு பக்கம் கருணாநிதி ஏ.சி. அறையில உட்கார்ந்துக்கிட்டு தனது மகன், பேரன் சோடப்பூட்டி தயாநிதி நடத்துற சைக்கிள் பயணத்தை டி.வியில பார்த்துண்டு சேலத்துல மண்டல மாநாடு போடறாரு. இந்தக் கொடுமைய எதிர்த்து மாட்டு வண்டி பயணம் போகும் படி ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்டேன். ஈமெயில் அனுப்பினேன். யாரும் கேட்கல, உருப்படாத ஆளுங்களா இருக்காங்க என்னத்த சொல்ல. அது தான் கோபத்துல இந்தப்பக்கம் நடந்தே வந்துட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரியுது. இத்தாலிக்கு சோனியா காந்தி இங்கு இருந்தும் பனிக்கட்டி கடத்தி இருக்காங்கன்னு ஒரு குரங்கு சொன்னது. எனக்கு எப்படி எல்லாம் ஆதாரம் சிக்குதுனு பாருங்க. இந்தியா போன  உடனே கேஸ் போட்டு கலக்கப் போகிறேன் பாருங்கள்.

  பண்டாரம்: பாராளுமன்றத்துல பாரதீய ஜனதா கட்சி இப்படி அமளி பண்ணிக்கிட்டு இருக்காங்களே இதுக்கு எல்லாம் என்ன காரணம். நீங்க இல்லாத காரணமா சார்........?

  சுப்பிரமணியசுவாமி: பாராளுமன்றத்துல அமளி நடக்குறதுக்குக் காரணமே பாரதீய ஜனதாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்குது. பாரதீய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் காரங்களுக்கு ஏகப்பட்ட பணம் லஞ்சமா கொடுத்து இருக்காங்கனு எனக்கு செக் குடியரசு நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்து இருக்குது. இது ஒரு கூட்டு சதி. இந்த விஷயத்தை சொல்லலாமுனு சோனியா காந்திக்கு போன் செய்தேன். ஆனால் அவருக்குப் பதில அவரோட பேரன் போனை எடுத்து என்னிடம் பேசுகிறார். இந்த கூத்த யாரிடம் சொல்ல. அது தவிர நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் பொழுது வாஜ்பாய் எப்படி எல்லாம் மறைமுக சைகை செய்யுறாருனு கூர்ந்து பார்த்தாலே தெரியும். இத எல்லாம் யாரு பார்க்குற. எல்லாம் செம்பறியாட்டுக் கூட்டம் மாதிரி கேண்டினில் ஓசியில பிரியாணி சாப்பிட்டுட்டு  வர்றாங்க. இதுக்காகவே பெரிய போராட்டம் நடத்தலாமுனு யோசிக்கிறேன். கூட்டம் சேருமா என்பது தான் என்னோட கவலை. இது தவிர பாராளுமன்றத்துல நான் இல்லாத காரணத்தினாலும் அதிகமா சத்தம் போடுறாங்க என்ற உண்மைய சொன்ன உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  பண்டாரம்: தமிழ் சினிமா பற்றி என்ன நினைக்கிறீங்க? ஆபாசமாக அதிக படம் வருதே இது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?

  சுப்பிரமணியசுவாமி: நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுதே தமிழ் சினிமாவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கிட்டு இருக்கேன். ஆனால் அதை யாரு கேட்குறா சொல்லுங்கள். கருணாநிதியை கேட்டால் நான் வசனம் எழுதுறதால தான் ஆட்சியைப் பிடிக்க முடியுதுனு சொல்றாரு. ஜெயலலிதாவைக் கேட்டால் சசிகலாவை விட்டு துளைத்து விடுவேன் என்று என்னோட பி.ஏ சந்திரலேகவுக்கு மிரட்டல் விடுறாங்க. ஆனால் தரமணியில எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மாற்றப்பட்டதற்கு நான் தான் காரணம். அதே மாதிரி ரஜினி தன்னோட ஜக்குபாய் படத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கும் நான் தான் காரணம். படத்தை எடுத்தா முத்திரைத் தாள் மோசடியில் ரஜினியைப் பற்றி உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஜா.நா சபையில மனு கொடுக்கப் போறாத ஒரு கடிதம் போட்டேன். அதனால தான் ரஜினி பயந்து போய் ஜக்குபாயை எடுக்காம போட்டு இருக்காரு. இப்படி என்னால முடிந்த சமூக சேவைகளை யாருக்கும் தெரியாம செய்து கொண்டு தான் இருக்கிறேன். கேப்டன் விஜயகாந்த ஏதோ அரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு என்ன ஆச்சுனு தெரியல. அவரு அரசியலுக்கு வந்து புது கட்சி ஆரம்பிக்குறதுக்குப் பதில என்னோட ஜனதா கட்சிக்கு தலைவராக வரலாம். ஏன் என்றால் என் கட்சிக்கு செலவு செய்ய காசு இல்லை.

  பண்டாரம்:  இந்தியாவுக்கு ஒலிம்பிக்குல முதல் வெள்ளி பதக்கம் கிடைச்சு இருக்குதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

  சுப்பிரமணியசுவாமி: துப்பாக்கி சுடுவதில் இந்தியா பதக்கம் வாங்கி இருக்குறது எல்லாம் என்னைய மாதிரி ஆளுங்க இருக்குறதுனால தான். ஆனால் மத்த போட்டியில  பாருங்க எல்லாம் மண்ணக்கவ்வுறானுங்க. சின்ன நாடான கியூபா கூட பதக்கத்தை அள்ளுது. ஆனால் நம்ம ஆளுங்க நல்லா சாம்பார் வடையை சாப்பிட்டுட்டு பதக்கம் வாங்காம சோகமாக இருக்காங்க. இதுக்கு இரண்டு பேர் காரணம். ஒன்று மத்திய அரசு நிலையில்லாதது. மற்றொன்னறு என்னிடம் ஆலோசனை கேட்காதது. என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் பின்லேடனிடம் சொல்லி நான்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து இருப்பேன்.

  பண்டாரம்: தமிழ்நாட்டுல அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க சதி நடக்குதாமே உண்மையா? உங்களுக்கு தெரியாம இருக்காதே?

  சுப்பிரமணியசுவாமி: கவிழ்க்க அது என்ன கப்பலா? கருணாநிதி தன்னையே அதி புத்திசாலியா நினைக்குறாரு. பிகாருல ஆட்சிய கவிழ்க்கப் போன முந்தைய அரசுகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ தமிழ்நாட்டுல ஆட்சியக் கவிழ்க்கனுமுனு எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு இருக்காரு. ஆட்சிய கவிழ்க்க அவரு எல்லாரிடமும் யோசனை கேட்டுக்கிட்டு இருக்காரு. என்னிடம் சொன்னால் ஒரு டீ பார்ட்டி வைத்து ஒரு நிமிடத்தில் கவிழ்த்தி விடுவேன். ஆனால் என்னிடம் யோசனை கேட்டு அடுத்து வருகின்ற தேர்தலில் எனக்கு 3 தொகுதி ஒதுக்கச் சொல்லுங்க, தமிழக அரசை கவிழ்த்தி விடலாம். இல்லாவிட்டால் சர்பத் பார்ட்டி வைத்து மத்திய அரசை கவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். என்னை யாரும் குறை சொல்லக் கூடாது.

  பண்டாரம்: ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் நலனுக்காக போராட்டம் எதாவது நடத்துற எண்ணம் இருக்கிறதா?

  சுப்பிரமணியசுவாமி: ஒட்டு மொத்த தேசத்துக்கும் போராட்டம் நடத்த நான் என்ன காந்தியடிகள் இல்லை. ஆனால் என்னால் சிங்கப்பூராக மாற்றப்பட்ட மதுரை  தொகுதியில் இட்லிக் கடை வைக்கக் கூடாதுன்னு அடாவடி பண்ணுதாங்கனு இப்ப கூட புறாவிடம் தூது அனுப்பியுள்ளனர். மதுரைக்குப் போன உடனே பெரிய அளவில இட்லிக் கடைகளை திறந்து போராட்டம் நடத்தப் போகிறேன். முடிந்தால் நியூஸ் கலெக்ஷனுக்கு வந்து சப்போர்ட் பண்ணுங்க. சாப்பிட இட்லி தர்றேன்.

  சரி சார் உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  செய்தியை அனுப்பிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் பண்டாரம்.
              

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |