Tamiloviam
செப்டெம்பர் 27 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : உற்சாகம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Sherin, Nandhaபடித்துவிட்டு வேலை தேடும் நந்தா கல்லூரி மாணவி ஷெரீன். ஷெரீனை நந்தா சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே ஷெரீனை நந்தா காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற - நட்பு ரீதியாக நந்தாவுடன் பழக ஆரம்பிக்கிறார் ஷெரீன். தன் காதலைச் சொல்ல தகுந்த சமயம் பார்த்து நந்தா காத்துக்கொண்டு இருக்கும்போது வெளிநாட்டு மாப்பிள்ளை தினேஷ் லாம்பாவுக்கு ஷெரீனை நிச்சயம் செய்கிறார்கள் பெற்றோர்கள். இதை அறிந்து தன் காதலை மனதிற்குள்ளேயே பூட்டி விடுகிறார் நந்தா.

திருமணத்திற்கு முன்பு ஷெரீனுடன் நெருகி பழக நினைக்கும் தினேஷ் நந்தா - ஷெரீன் நட்பை வெறுக்கிறார். சந்தேகப் பேய் மனதில் வெறிகொண்டு ஆட, தொட்டதெற்கெல்லாம் ஷெரீன் மீது சந்தேகப்பட்டு அவரைத் துன்புறுத்துகிறார் தினேஷ். ஒரு கட்டத்தில் கணவனாக வரப்போகிறவன் செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறார் தினேஷ். தினேஷின் இத்தகைய நடவடிக்கைகளால் ஷெரீன் தினேஷை வெறுக்கிறார். ஆனால் தினேஷ் ஷெரீன் மீது பைத்தியமாக இருக்கிறார்.

தினேஷின் கொடுமைகளை பொறுக்க முடியாமல் நந்தாவுடன் தப்பி வெளியூருக்குச் செல்கிறார் ஷெரீன். ஷெரீனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தினேஷ் ஷெரீனின் அம்மாவைக் கொல்கிறார். ஷெரீன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கடத்த முயல்கிறார். முடிவில் நந்தா ஷெரீன் இணைந்தார்களா? தினேஷின் கதி என்ன ஆயிற்று.. கிளைமாக்ஸ் இதற்கான விடை அளிக்கிறது.

நந்தாவின் இறுக்கமான நடிப்பு ஓக்கே என்றாலும் அவர் ஏன் அவ்வளவு இறுக்கமானவராக இருக்கிறார் என்பது தெரியவில்லை. மேலும் அவர் என்ன செய்கிறார் அவரது பின்புலம் என்ன என்கிற கதையில் ரொம்பவே குழப்புகிறார் இயக்குனர். இனி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க அவருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வில்லனாக அறிமுகமாகியுள்ள தினேஷ் லாம்பா முதலில் எரிச்சலூட்டினாலும் போகப் போக தன் தனித்துவத்தைக் காட்டி பார்ப்பவர்களை ஆக்கிரமித்து விடுகிறார். அப்பாவித்தனம், நரிச்சிரிப்பு, வஞ்சகம், வீரம், ஏமாளித்தனம் என்று எல்லாவற்றையும் கலந்து ஆளை அசர அடிக்கிறார். உருட்டும் விழிகளும் உள்ளுக்குள் புகையும் சந்தேகமுமாய் கடைசி வரை திரியும் தினேஷ் எல்லாரையும் ஓரம் கட்டி விட்டு மனதில் பதிந்து விடுகிறார்.

முதலில் எல்லாம் லைலா ரேஞ்சிற்கு சிரிக்கும் ஷெரீன் பிற்பாதியில் அழுவதைத் தவிர ஒன்றுமே செய்யவில்லை. கொடுமைக்கார மாப்பிளையிடமிருந்து தப்பி ஓடிவந்து நந்தாவிடம் அடைக்கலம் கேட்கும் காட்சியில் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார்.

ஜேப்படித் திருடனாக வரும் விவேக்கின் செல்·போன் காமெடியும் டி.வி. சீரியல் காமெடியும் ஓக்கே. ஆனாலும் விவேக் புதிதாகச் சிந்திக்க ஆரம்பித்தால் அது அவருக்கும் நல்லது.. ரசிகர்களுக்கும் நல்லது..

முதலில் மோதலில் ஆரம்பித்து பிறகு நட்பாகப் பழகுவதும், நட்பு காதலாக மலர்வதும் பெற்றோர் நிச்சயிக்கும் மாப்பிள்ளையின் குணம் பிடிக்காமல் தன்னை விரும்பும் நண்பனுடன் காதலி சேர்வதும் நம் தமிழ்ச் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால் இந்தக் கதையை ஏகப்பட்ட குழப்பங்களுடன் எடுத்ததுதான் இயக்குனர் செய்த தவறு.

படத்தில் நந்தா ஷெரீன் நட்பை  காதலை வலுப்படுத்த போதிய அழுத்தமான காட்சிகள் இல்லை. தினேஷ் ஷெரீன் சம்பந்தப்பட்ட சந்தேகக் காட்சிகள் அதிகம் இருப்பதால் காதலை விட இவைகளே மனதில் அதிகம் பதிகின்றன. மேலும் ஆஸ்பத்திரியின் உள்ளே நுழைந்து ஒரு கொலையை செய்துவிட்டு போகிறார் வில்லன். ஆனால் அதைப் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. மேலும் தலைமறைவாக இருக்கும் ஹீரோ  ?ஹீரோயின் தங்கள் பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டி.வி.யில் பேட்டி கொடுக்கிறார்கள். அரசியல் செல்வாக்கும் பணபலமும் படைத்த வில்லன், ஓடிப்போனவர்களைத் தேடிப்பிடிக்க வழி இல்லாமல் டி.வி. இவர்களின் அந்தப் பேட்டியில் பார்த்துவிட்டு அவர்களைப் பிடிக்க சுறுசுறுப்பாகக் கிளம்பும் லாஜிக் எரிச்சலைக் கிளப்புகிறது.

குருதேவின் கேமரா படத்தை பளிச்சென தூக்கி நிறுத்த முயல்கிறது. ரஞ்சித் பாரோட்டின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ரஹ்மான், ஹேரிஸ் ஜெய்ராஜ் இசையைக் கேட்பது போலவே இருக்கிறது.

பலவீனமான கதையாலும் வலுவற்ற திரைக்கதையாலும் படத்தில் உற்சாகமும் விறுவிறுப்பும் கொஞ்சமும் இல்லை. கண்ணெதிரே தோன்றினாள் படத்தை எடுத்த அந்த ரவிச்சந்திரனா இந்த கதை இல்லாத படத்தை எடுத்தார் என்று ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |