செப்டெம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : மலையில தீ எரியுது
- ராசுகுட்டி [raasukutti@gmail.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சும்மா ஒரு விளையாட்டுக்காகத்தான் அனைவரையும் அழைத்தேன், இப்போது அனைவரும் திரும்பிச் செல்லலாம்.

மிகப் பழங்காலத்தில் யூ என்றொரு சீன அரசன் ஷியான் பிரதேசத்தை ஆண்டு வந்தான், மாபெரும் வீரனாக விளங்கியவன் தன் அண்டை நாடுகள் அனைத்தையும் படையெடுத்து வென்று தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான், எனினும் தோல்வியுற்ற அரசர்களை வைத்தே அந்தந்த பிரதேசங்களை ஆண்டு வந்தான்.

ஆனால் இந்த பேரரசனுக்கும் ஒரு மனக்குறை இருந்தது. பாவோஸி என்றொரு பேரழகியை மனமுடித்திருந்தான் யூ அரசன். மன்னனுக்கு அவள் அழகில் பெரும் மயக்கம் உண்டு. உலகத்திலேயே அவளைப் போல அழகி இருப்பாளா என்று சந்தேகிக்க வைக்கும் அழகு, ஆனால் அவளை சிரிக்க வைக்க அவனால் ஒரு போதும் முடியவில்லை. குறிப்பாக காரணமொன்றும் இல்லை, அவள் வாழ்நாளில் சிரித்ததே இல்லையாம் அவ்வளவுதான்.

உலகத்திலேயே சிறந்த ஆடை ஆபரணங்களை அவள் காலடியில் கொட்டினான், ஆனால் ஒரு புன்முறுவலைக்கூட பரிசாக திரும்பப் பெறமுடியவில்லை மன்னனால், பாவோஸியை சிரிக்க வைப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று பரிசு கூட அறிவித்துப் பார்த்தான். அந்த நாட்டின் மிகச்சிறந்த விதூஷகர்கள் ஏதேதோ செய்து பார்த்தும் தோல்வியையே சந்தித்தனர்.

இந்நிலையில் குவோ ஷிஃபு என்ற அமைச்சன் மன்னனுக்கு ஒரு யோசனை தெரிவித்தான். அதன்படி அன்றே அரசன், அரசி, அமைச்சன் மற்றும் பலரும் லிஷான் மலையுச்சிக்கு சென்றார்கள். அங்கு சென்றதும் பீகான் கண்காணிப்பு கோபுரத்தில் புகையெழுப்பினார்கள்.

யூ அரசனின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களுக்கும் மன்னனுக்கிமிடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றுண்டு. பீகான் கோபுரத்தில் நெருப்போ அல்லது புகையோ வந்தால் யூ மன்னனின் உதவிக்கு தத்தம் படை பரிவாரங்களோடு சிற்றரசர்கள் அனைவரும் விரைந்தாக வேண்டும். எதிர்பாராத ஆபத்து சமயங்களில் தன் சிற்றரசர்களை தொடர்பு கொள்ள மன்னன் இந்த வழியையே பின்பற்றி வந்தான்.

ஒப்பந்தப்படி இப்போதும் அனைத்து அரசர்களும் தங்கள் முழு படைகளோடு மலைக்கு கீழே குழுமினர். அனைவரும் வந்தபின் மன்னன், " சும்மா ஒரு விளையாட்டுக்காகத்தான் அனைவரையும் அழைத்தேன், இப்போது அனைவரும் திரும்பிச் செல்லலாம்" என்று கூறினார். திரண்டிருந்த அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் முணுமுணுத்துக் கொண்டே திரும்பிச் சென்றனர். இந்தக் காட்சி பாவோஸியை சிரிக்க வைத்தது. முத்துக்களை கொட்டினார்ப் போல் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பேரழகி.

மன்னனுக்கோ மிகுந்த மகிழ்ச்சி, அறிவித்த படி ஆயிரம் பொற்காசுகளை அமைச்சனுக்கு அளித்தான். பின்னர் எப்போதெல்லாம் தன் ராணியை சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டுமோ, அப்போதெல்லாம் லிஷான் மலைக்கு வந்து பீகான் கோபுரத்தில் புகையெழுப்பி, சிற்றரசர்களும் வீரர்களும் ஏமாந்து திரும்புவதை வேடிக்கை பார்த்து திரும்புவர்.

ஒரு முறை நிஜமாகவே மங்கோலிய மன்னன் படையெடுத்து வர, உதவி வேண்டுமென பீகான் கோபுரத்தில் புகையெழுப்பப்பட்டது. ஏற்கனவே நிறைய முறை ஏமாந்திருந்த அரசர்கள் இம்முறை யூ அரசனின் அழைப்புக்கு வரவில்லை. ஷியான் நகர் எதிரிகள் கையில் சிக்கியது!

என்னது "மலையில தீ எரியுது"ன்னுட்டு சின்னப்புள்ளை-ல சுத்திச்சுத்தி ஓடுவமே அது ஞாபகத்துக்கு வருதா? தெரியலங்க நம்ம நாட்டுக்கு வந்துட்டுப் போன யுவான் சுவாங், ஷியான் நகருக்கு பக்கத்துலதான் கல்வெட்டுக்களால் ஆன நூலகத்தை நிர்மானித்திருக்கிறார்.

| |
oooOooo
ராசுகுட்டி அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |