செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : குழந்தைகளை பாதிக்கும் காரீயம்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

Lead eating Babyபோன வாரம் ஒரு சீக்கியரின் குழந்தையின் இரத்தத்தில் காரீயம் (lead) கிட்டதட்ட 4 மடங்கு தேவைக்கு அதிகமாக இருந்தது கண்டு அவர்களின் வீட்டிற்கு சென்று மேற்பார்வையிட்டனர். அதேபோல நியு ப்ரன்ஸ்விக் (new brunswick) என்ற ஊரில் உள்ள பள்ளிகளில் குடிக்கும் தண்ணீரில் காரீயம் அளவு அதிகமாக இருப்பதால் அந்தப்பள்ளிகளில் உள்ள குழாய்கள் மூடப்பட்டுவிட்டன. பள்ளிகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

வட இந்திய உனவில் அதிகமாக செந்தூரம் கலக்கப்படுவதால் (செந்நிறம் வர) காரீயம் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல மெக்ஸிகோ நாட்டில் தயாரிக்கப்படும் மிட்டாய்களில் கூட காரீயம் அளவு அதிகமாக இருக்கிறது. இது போன்ற உணவு வகைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

காரீயம் ஒரு மிருதுவான நீல நிறமுள்ள தனிமம் (உலோகம்). இது குழாய்கள், வர்ணக்கலவைகள் இவற்றில் சேர்க்கப்படுகிறது. காரீயம் அளவு குழந்தைகளுக்கு மிக அபாயகரமானது. எலும்புகள் சரிவர வளராமல் தடுக்க கூடியதும், விஷமாக கொல்ல கூடிய தன்மையும் கொண்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட 500,000 குழந்தைகள் இரத்ததில் காரீயம் அளவு அதிகமாக இருக்கிதறது. இது தீர்க்க முடியாத விளைவுகளை தரலாம்.

காரீயம் உட்கொள்ளும் குழந்தையின் இரத்தத்தில் சிகப்பணுக்கள் உற்பத்தி குறைகிறது. மூளைவளர்ச்சியை  குறைந்த அளவான காரீயமே தடை செய்கிறது. தசைகள் வலுவை குறைத்து இரத்த சோகையும் ஏற்படுத்துகிறது.

மிக குறைந்த நேரத்தில் விரல்கள், கை கால்களில் உள்ள மூட்டுக்களை பாதித்து நோய்வாய்ப்பட வைக்கும். சிறுவர்களின் நினைவு திறனும் பாதிக்கப்படுகிறது. ஆண் குழந்தைகள் காரீயம் உட்கொண்டால் மலட்டு தன்மை வரவும் வாய்ப்பிருக்கிறது.

காரீயம் எவ்வாறு உட்கொள்ள படுகிறது?

பழையகாலத்து வீடுகளில் பயன் படுத்தபட்ட வர்ண கலவையில் உள்ளது. தண்ணீர் வரும் பழைய குழாய்கள், மேலும் வர்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி சாமான்கள் செய்யும் இடத்தில் இருந்தால் காரீயம் சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. டீகா மசாலா, விண்டாலு போன்ற மசாலாவில் உள்ள செந்தூரம், பெண்கள் வகிட்டில் உள்ள செந்தூரம், தலைவலிக்கு குழந்தைகளின் நெற்றியில் குழைத்து போடும் செந்தூரம் இவற்றால் காரீயம் தோல் மூலம் உறிஞ்சப்படுகிறது.

1978 ற்கு முன் கட்டிய வீட்டை வாங்க விரும்பினால் மூன்று நிலையில் காரீயம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். இதை நீங்கள் வீடு வாங்கும் படிவங்களில் சொல்லலாம். அமெரிக்கா சுற்று புர சூழலை பாதுகாக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அரசு நற்சான்றிதழ் பெற்ற நிபுணர்களை அனுப்புவார்கள் அல்லது அவர்கள் பணி புரியும் நிறுவனங்களின் தகவல்களை தருவார்கள்.

வீட்டை விற்பவர்கள் அவர்களுக்கு தெரிந்திருந்தால் எந்த வித வர்ணக்கலவை உபயோகிக்கப்பட்டது என்பதை எழுத்து வடிவத்தில் தரவேண்டியது கட்டாயமாகும்.

அரசு மூன்றுவகை பரிசோதனைகள் செய்ய சொல்கிறது.

- காரீயம் அபாய அளவு.

- இரண்டாவது காரீயத்தினால் வரும் விளைவுகளின் தாக்கம்.

- மூன்றாவதாக குழாய்கள் மற்றும் வீடு முழுதும் காரீயத்தின் அளவு குறித்து பரிசோதனை ஆகியவை அந்த பரிசோதனைகள் ஆகும்.

காரீய அபாய கண்காணிப்பு (lead hazard assessment): கண்காணிப்பாளர் வீடின் சுவற்றிலிருந்து வர்ணக்கலவை பெயர்ந்து வரக்கூடிய நிலையில் இருக்கிறதா, ஏதேனும் பராமரிப்பு வேலைகள் செய்யும் போது பெயர கூடிய நிலையில் இருந்தால் அந்த வர்ணத்துடன் கூடிய சுவற்றின் பிசறல்கள், மற்றும் தண்ணீர் மாதிரி எடுத்து பரிசோதனைச்சாலைகளுக்கு தந்து காரீயத்தின் அளவை பரிசோதிப்பார்.

காரீய வர்ணக்கலவை பரிசோதனை: X-Ray கதிர்வீச்சு கொண்டு வரணத்தில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள வர்ணத்தில் காரீய அளாவை பரிசோதிப்பார்.

காரீய அபாய அளவு அறிதல்: வீட்டில் உள்ள குழந்தைகள், வீட்டின் வயது ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டு. வீட்டின் முன் உள்ள மண், சுவற்றில் உள்ள வர்ணம் மற்றும் தண்ணீர் ஆகியவை, தூசி உறிஞ்சப்பட்டு பஞ்சு ஆகியவை பரிசோதிக்கப்படும். 1999 க்கு பின் இதற்காக சான்றிதழ் பெற்ற பரிசோதகர்கள் பொது நலத்துறையில் இருக்கிறார்கள்.
 
குழந்தைகள் மிக விரைவாக காரீயத்தை உரிஞ்சிக்கொள்வதாலும், வளர்ச்சியடைவதில் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதாலும் கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறார்கள்.

எல்லா குழந்தைகளுக்கும் இரத்த அளவை சரி பார்ப்பது இல்லை. ஆனால் வீட்டில் சில குறைகள் இருப்பது தெரிய வந்தால், அவர்களின் இரத்தம் எடுக்கபட்டு சரி பார்க்கப்படுகிறது.

சில ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்ளும் போது காரீயம் அளவு அதிகமாகிறது. மருத்துவரை கலந்தாலோசிக்காமல் எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ளாதீர்கள், குழந்தைகளுக்கும் தராதீர்கள்.

இப்போது இது பற்றி எழுத காரணம் ஆரம்பத்தில் சொன்னபடி நியுப்ருன்ஸ்விக் (New Brunswick)  பள்ளிகளின் அதிர்சியூட்டும் தகவலலும் மேலும் கொலு வைக்ககூடிய நவராத்திரி ஆரம்பம் என்பதாலும். நிறைய மண் பொம்மைகளில் வர்ண கலவையில் சில வித நச்சு பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால் குழந்தைகள் பொம்மையை வாயில் வைத்து கொள்ளாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்.

எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |