செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சாணக்யா
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |
"விளம்பரப் பிரியரான இவரை தெரிந்தவர்கள் அனைவரும் "பப்ளிசிட்டி கணேஷ்" என்றே அழைக்கிறார்கள்."

தமிழ் திரையுலகில் சாதனை செய்த படங்களாகிய புதிய பறவை, பாட்ஷா போல ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதைதான் சாணக்யா..

ஆட்டோ ஓட்டுனரான கணேஷ்(சரத்குமார்) தன்னைச் சுற்றியுள்ள ஏழைகள் மீது மிகவும் பரிவுள்ளவர். விளம்பரப் பிரியரான இவரை தெரிந்தவர்கள் அனைவரும் "பப்ளிசிட்டி கணேஷ்" என்றே அழைக்கிறார்கள். தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் செய்யாத கொலையைக் கூட தான் செய்ததாகக் கூறிக்கொள்ளும் அளவிற்கு விளம்பரப் பிரியர். ஒரு கட்டத்தில் சரத்தின் மீது காதல் கொள்கிறார் அவர் ஓட்டும் ஆட்டோவிற்கு சொந்தக்காரியான நமிதா. இடையிடையே சரத்தின் நண்பராக வரும் வடிவேலு, சரத் மற்றும் நமீதாவிற்கு அள்ளி விடும் ஆலோசனைப் படலங்களும் நிறையவே உண்டு...

இதற்கிடையே தான் எடுக்கும் விளம்பரப்படம் ஒன்றில் நடித்தே ஆகவேண்டும் என்று சரத்தை நிர்பந்திக்கிறார் லயா. உண்மையில் சரத்தின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள காவல் துறையால் அனுப்பப்படும் ரகசிய போலீஸ் லயா. ஆரம்பமாகிறது சரத்தின் பிளாஷ்பேக் : சரத் சிறுவனாக இருக்கும்போது நேர்மையான அவரது தந்தை (அப்பா சரத்) மற்றும் தாய் சீதா ஆகியோர் வில்லன்கள் வின்சென்ட், ஹனீபா மற்றும் சலீம் கவுஸ் ஆகியோரால் கொல்லப்படுகிறார்கள். இவர்களது சதி முயற்சியிலிருந்து தப்பிக்கும் சரத் எப்படி வில்லன்களைப் பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.

தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரமாகவே மாறியிருக்கிறார் சரத். எத்தனை பேர் வந்தாலும் அவர் அநாயாசமாக அடிப்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் ஒல்லிப்பிச்சான் ஹீரோக்களே பாய்ந்து பாய்ந்து எதிரிகளை அடிக்கும் இக்காலத்தில் சரத்தின் கட்டுமஸ்தான உடல் கட்டு நிஜமாகவே அவர் அப்படி அடித்தாலும் பொய்யாக இருக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்த ரொம்பவும் உதவுகிறது. ஆரம்ப காட்சிகளில் சரத் செய்யும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பலமான அஸ்திவாரமாக இருப்பது வடிவேலுதான். பல காட்சிகளில் வடிவேலுவின் காமெடி ரசிக்கும்படி உள்ளது.

நமிதாவை இயக்குனர் கவர்சிக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது.. ஹ¥ம் என்னத்தை சொல்ல.. போதாத குறைக்கு லயா வேறு. அப்பா சரத்திற்கு ஜோடியாக சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக இருக்கிறது சீதா வரும் காட்சிகள். ஒருவருக்கு மூன்று வில்லன்கள் - இருந்தாலும் வில்லன்களின் நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒன்றுமே இல்லாதது பெரிய குறை.

கதை - பஞ்சு அருணாசலம். மது அம்பட்டின் ஒளிப்பதிவு ஓக்கே ரகம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ரொம்பவும் சுமார். ஏற்கனவே சரத்தை வைத்து ஏய் படம் இயக்கியிருக்கும் வெங்கடேஷ் இந்த முறை சரத்தின் பேவரிட்டான இரட்டை வேடக் கதையுடன் களம் புகுந்திருப்பது - நிச்சயம் ஜெயிக்கலாம் என்ற நினைப்பில் தான்.. என்றாலும் சாணக்யா ரொம்ப சாதாரணம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |