செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : யோசனை
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

- ப்ரியா கிருஷ்ணமாச்சாரி

வார்த்தை ஜாலம் செய்யலாம் வாருங்கள்
மழை தடுக்கும்  குடை, உயிர் நனைக்கும் சோகம்
வானவில் அழிக்கும் காற்று, பூக்க மறந்த மரம்
இறுதியாய் இமை மூடும் நேரங்கள்
சத்தம் போடும்  மவுனங்கள்
சந்தித்துக் கொள்ளாத சூரியனும் சந்திரனும்
வானத்தையே மறைக்கும் கூரை

சுயம் எரித்த தீண்டாமை, மனிதம் எரித்த மதம்
இமை நிரப்பும் கண்ணீர், வாழ்வற்ற நேரங்கள்
தாளம் தப்பும் ராகங்கள், குளிர் மறந்த மேகங்கள்
மன்னிக்காத  பாவங்கள், ஒப்புக்கொள்ளாத  குற்றங்கள்
ஒளியற்ற விளக்குகள், விடையற்ற கேள்விகள்
நாம் மறந்த  மனிதம், தாளம் தப்பும்  ராகங்கள்
ம்ம் எழுதிக் கொண்டே போகலாம்
வழி விடாமல்  தடுக்கும் நெருக்கடி
ம்ம் எல்லாம் விதிப்படி- அது சரி

உயிரற்ற வார்த்தைகள்
உருப்படியாய்  என்ன செய்யலாம்?
இதுதான்  என் யோசனை

இப்படி யோசித்துக் கொண்டே...

...... வார்த்தை ஜாலம் செய்யலாம் வாருங்கள்

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |