செப்டம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
க. கண்டுகொண்டேன்
கட்டுரை
உங்க. சில புதிர்கள்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உங்க. சில புதிர்கள் : மனசுக்குள் ஒரு சூனியக்காரி !
  -
  | Printable version |

  உங்களில் பலருக்கு ரஃபன்சல் கதை தெரிந்திருக்கும்.  அவள் மாபெரும் அழகி ! பிறந்தவுடனேயே இவளைச் சூனியக்காரி ஒருத்தி, பெற்றோர்களிடமிருந்து அபகரித்துப் போய்க் காட்டிலே உள்ள கோட்டைக் கோபுரத்தில் சிறை வைத்துவிட்டாள்.  படிக்கட்டுகளோ, கதவுகளோ இல்லாத அந்த உயரமான கோபுரத்தில் ஜன்னல் மட்டும் உண்டு. 

  வெளி உலகத்தையே பார்க்காமல் ரஃபன்சல் வளர்கிறhள்.  பொன்நிறத்தில் மிக நீளமான கூந்தல் ! ரோஜாவோடு போட்டி போடும் அளவுக்கு நிறம் ஆனால், ரஃபன்சலுக்குத் தான் இப்படி ஒரு பேரழகியாக இருக்கிறோம் என்பதே தெரிந்துவிடக்கூடாது என்பதில் சூனியக்காரி கவனமாக இருந்தாள்.  தான் அழகி என்று தெரிந்தால் தன்னம்பிக்கை வந்து, எங்கே தப்பித்துப் போய்விடுவானோ என்ற எண்ணத்தில், ரஃபன்சலை அடைத்து வைத்திருந்த கோபுரத்தில் ஒரு கண்ணாடிச் சில்லுகூட வைக்கவில்லை அந்தச் சூனியக்காரி !

  குரங்கு மாதிரி இருக்கிற இந்த முகத்தை வைத்துக்கொண்டு என் முன்னாடி வந்து நிற்காதே.. . என்று சூனியக்காரி பொழுது விடிந்து பொழுது சாயும்வரை ரஃபன்சலைத் திட்டி தீர்ப்பாள்.  இதை ரஃபன்சலும் உண்மை என்று நம்பி, ஐயையோ... ஆண்டவன் என்னை இப்படி அவலட்சணமாகப் படைத்துவிட்டானே.. என்று நினைத்து வேதனைப்பட்டு அழுது கொண்டே இருப்பாள்.

  ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட வந்த இளவரசன், அந்தக் கோபுரத்தின் ஜன்னலில் தெரிந்த ரஃபன்சலின் முக அழகைப் பார்த்து, அவள்மேல் காதல் கொள்கிறான் ! ஒரு நாள் சூனியக்காரி கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம்... இளவரசன் கோபுரத்துக்கு அருகே சென்று ரஃபன்சலைப் பார்த்துத் தனது காதலை வெளிப்படுத்தினான்.

  உலகிலேயே உன்னைப் போலப் பேரழகி கிடையாது ! உன் முடியைப் போலப் பொன்நிறமான நீள முடி யாருக்குமே இல்லை, என்று அவன் புகழ, தான் அவலட்சணம் இல்லை, தான் நிஜமாகவே அழகி - பேரழகி என்பதை வாழ்க்கையில் முதல்முறையாக ரஃபன்சல் உணர்கிறாள்.  பிறகு இருவரும் பலமுறை சந்தித்துக் கொள்கின்றனர்.  கடைசியில், ரஃபன்சலின் நீண்ட முடியையே கயிறு மாதிரி கீழே விடச் சொல்லி அதன் வழியாகக் கோட்டையின் உச்சிக்குப் போய் சூனியக்காரியை வீழ்த்திவிட்டு இளவரசன், ரஃபன்சலைக் கோபுரச் சிறையிலிருந்து மீட்டுத் திருமணம் செய்து கொண்டான்.  பிறகு, நீண்ட நாள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இந்தக் கதை முடிகிறது !

  சரி ! இப்போது எதற்கு நான் இந்த கான்வென்ட் கதையைச் சொல்கிறேன் ? கதையின் காரணத்தைச் சொல்வதற்கு முன்னால், கிரியேட்டிவிட்டி பற்றி நாம் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை இங்கே நினைவுப்படுத்திக் கொள்வோம்.

  மாணவன் ஒருவன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பில் இருக்கிறான்.  ஏதோ காரணத்தினால் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் குறைவாக மதிப்பெண் எடுக்கிறhன்.  குடும்பத்திலும் பள்ளியிலும் ஒருவர் மாற்றி ஒருவர், நீ இங்கிலீஷில் வீக் ! உனக்கு இங்கிலீஷ் வராது என்று அரை டிராயர் கிளாஸிலிருந்து டிகிரி படிப்பு முடித்துக் கல்லூரியைவிட்டு வெளியே வரும்வரை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் !

  நீ குரங்கு மாதிரி அசிங்கமாக இருக்கிறhய் என்று ரஃபன்சலைப் பார்த்துச் சூனியக்காரி சொன்னதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? இதுதான் Negative Belief (அவநம்பிக்கை).

  மாணவனும் ரஃபன்சலைப் போலவே இதை உண்மை என்று நம்பி வருகிறான்.  அதனால் இங்கிலீஷ் பாடத்தில் அலர்ஜி மட்டுமில்லை. ஆங்கில நியூஸ் பேப்பர் பக்கம்கூட அவன் போவதில்லை.  இங்கிலீஷில் யாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் இல்லை ! அந்த மொழியில்  பேசும் நிர்ப்பந்தம் வரும்போது கூட இங்கிலீஷ் எல்லாம் எனக்கு வராது என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறான்.  இதுதான் Repetative Mind. ஆதாவது செக்குமாட்டுச் சிந்தனை ! ரஃபன்சல் கோட்டை கோபுரத்துக்குள் சிறை பட்டதைப் போல், இந்த மாணவன் செக்குமாட்டுச் சிந்தனைக்குள் மாட்டிக் கொள்கிறhன்.  அவன் அந்த உணர்ச்சியால் ஆங்கிலும் கற்கும் முயற்சியில் இறங்கவே இல்லை.

  இந்த மாணவனின் தன்னம்பிக்கையை வளர்க்க இளவரசன் ஒருவன் வரவேண்டும்.  இந்த இளவரசனைத்தான் நான் creativity என்கிறேன்.  இந்த இளவரசனால்தான் அவநம்பிக்கை என்ற சூனியக்காரியை வீழ்த்த முடியும் ! இந்த கிரியேட்டிவிட்டி என்ற இளவரசனால்தான் நம்முடைய ஆற்றல் என்ற இளவரசியை ரெப்பிடேடீவ் மைண்ட் என்ற சிறையிலிருந்து விடுவிக்கவும் முடியும் !

  இங்கிலீஷ் பேசக் கூச்சப்படுவது என்பது ஒரே ஒரு உதாரணம்தான் ! வாழ்க்கையில் இதுமாதிரி பல உதாரணங்கள் நிகழ்கின்றன.  பாரபட்சம் காட்டும் மேலதிகாரி, வாங்கிய கடனைக் கொடுக்காமல் ஆட்டம் காட்டும் கடன் காரன், மரியாதை கொடுக்கால் பேசும் மனைவி அல்லது கணவன் போன்றவர்களை எதிர்கொள்ளும்போது சே.. . இந்த ஜென்மத்தையெல்லாம் திருத்தவே முடியாது ! திருத்தவே முடியாது.. என்ற Repetative Mind டோடு சிந்தித்தால் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்காது ! இவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தெளிவாக சிந்திக்க, நமக்குக் கற்பனாசக்தி (creativity) மிக மிக அவசியம் !

  சரி, இந்தக் கற்பனாசக்தி நமக்கு வராமல் தடுக்கிற எதிரி எது.. ?

  முக்கிய எதிரியே இந்த Repetative Mind தான் எந்த ஒரு விஷயத்தையும் புதிதான கோணத்திலிருந்து பார்க்கத் தடையாக இருப்பதே இந்தச் செக்குமாட்டுச் சிந்தனைதான் !

  (நன்றி : மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |