அக்டோபர் 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : திரு. எஸ்.வி.சேகர் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

கருணாநிதி பாணியில் சொன்னால் மதிப்பு என்பதே இங்கு இருந்தால் தானே மதிப்பீடே செய்ய முடியும்.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும், சினிமா, நாடக நடிகருமான எஸ்.வி.சேகர் மதுரை மத்திய தொகுதியில் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யவும், பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மதுரைக்கு வருகை புரிந்தார். கட்சிக்காரர்கள் மத்தியில் பிசியாக இருக்கும் இவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்.

தமிழோவியம் :- நீங்கள் ஒரு நடிகராக இருந்த பொழுது, கிடைத்த ஒரு மகிழ்ச்சி அரசியல்வாதியாக இருக்கும் பொழுது கிடைக்கிறதா?

Sve Shekherபதில் :- நடிகராக இருக்கும் பொழுது இருந்த சந்தோஷம், அரசியல்வாதி ஆகும் பொழுது எங்காவது போய் ஒளிந்து கொள்ளுமா என்ன? அப்படி எல்லாம் கிடையாது. நான் நடிகராக இருந்த பொழுது கிடைத்த சந்தோஷங்கள் அரசியல்வாதியாக ஆன பொழுதும் எனக்கு கிடைக்கிறது. இதில் வேறுபாடு குறைபாடு எல்லாம் பார்க்க வாய்ப்பு இல்லை.

தமிழோவியம் :- அரசியலில் அதிகமாக சமரசம் செய்துகொண்டு போக வேண்டிய நிலை இருக்கிறது. இந்தத் தன்மைகளை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

பதில் :- முதலில் நானும் அப்படித் தான் நினைத்தேன். ஆனால் அப்படி எல்லாம் இங்கு இல்லை. கட்சியின் நலனுக்காக சமரசம் செய்து கொண்டு போவதில் தவறில்லை. இவை எல்லாக்கட்சிகாரர்களிடமும் இருக்கக் கூடிய ஒரு தன்மை. அப்படி சமரசம் செய்து கொள்ளும் பொழுது நமது முழுத் தன்மையை இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தமிழோவியம் :- மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது என சொல்லப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

SVe Shekherபதில் :- தவறான கருத்தை தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்த அரசு பரப்புகிறது. இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மக்கள் கொடுக்கத் தான் போகிறார்கள். அதிகாரம் இருக்கிறது என்ற நினைப்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை எல்லாம் தி.மு.க. அமைச்சர்கள் மீறி செயல்படுகிறார்கள். பெண்கள் சுய உதவிக்குழுக்களை அழைத்து பணம் கொடுக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய காவல் துறையினர் அ.தி.முக.வினரை கைது செய்வதிலும், வழக்குப் போடுவதிலுமே குறியாக இருக்கிறார்கள். இது போன்ற அராஜகங்களுக்கு இந்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் ஒரு தீர்வை தரும் என நம்புகிறேன்.

தமிழோவியம் :- சமீபத்தில் அ.தி.மு.க.விற்கு எதிராக குரல் கொடுத்து தி.மு.க.வை புகழ்ந்து பேசிவரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சண்முகம், நீங்கள் மட்டும் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எளிதில் சந்திப்பதாகவும், கட்சியினர் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- அவருக்கு எதாவது குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை சொல்கிறார் அவ்வளவு தான். கட்சியின் பெயரை, சின்னத்தை பயன்படுத்தி, தொண்டர்களின் உழைப்பில் வெற்றி பெற்ற சண்முகம் இன்று தி.மு.க.விடம் விலை போய் விட்டார். அவர் ஜால்ரா அடிப்பதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களது கோரிக்கை எல்லாம் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான்.


தமிழோவியம் :- பொதுவாக இன்றைய தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த தி.மு.க. அரசினைப் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் என்ன?

பதில் :- கருணாநிதி பாணியில் சொன்னால் மதிப்பு என்பதே இங்கு இருந்தால் தானே மதிப்பீடே செய்ய முடியும். ஆட்சிக்கு வந்த உடனே சிக்குன் குனியா காய்ச்சலும் வந்து விட்டது. இந்தக் காய்ச்சலில் மக்கள் பாதிக்கப்பட்டு, இறந்தது தான் இந்த அரசின் சாதனை. அடுத்து டெங்கு காய்ச்சல் வருகிறது என்கிறார்கள். எல்லாருக்கும் டி.வி, நிலம், கேஸ் ஸ்டவ் என்று பொய் சொல்லி மக்களிடம் ஒரு பிரம்மையை தூண்டிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறாக மைனாரிட்டி அரசாகத் தான் இந்த அரசு இருக்கிறது. இந்த அரசு விரைவில் வீழ்ச்சி அடையும்.

தமிழோவியம் :- உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். நீங்கள் அதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- கண்டிப்பாக தி.மு.க.கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகும். எங்களோடு வர உள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறி தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் பங்கீடு என்று சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை பகிர்ந்து கொண்டாலும் அதன்படி அந்தக் கூட்டணிக் கட்சியினர் நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்குள்ளேயே அதிருப்தி உருவாகி தனித்து போட்டியிடுகிறார்கள். இவை எல்லாம் தேர்தலுக்குப் பிறகு எதிரொலிக்கும். மதுரையில் கூட மாநகராட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது.

தமிழோவியம் :- நீங்கள் அதிகமான சமூக சேவைகள், ரத்ததானங்கள் எல்லாம் செய்து மக்களிடம் பிரபலமானவர். தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக வேறு இருக்கிறீர்கள். இதில் உங்களின் பொறுப்பு அதிகரித்திருக்கும் இல்லையா?

பதில் :- கண்டிப்பாக, தொகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் என்னை நம்பி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் பக்குவம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வேண்டும். அது எனக்கு இருக்கிறது. அதே போல ரத்ததானம், பிற சேவைகள் எல்லாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. என்னால் முடிந்த அளவு நன்மைகளை எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் செயல்படுகிறேன். இனியும் செயல்படுவேன்.

| | | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |