அக்டோபர் 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜோதிட விளக்கங்கள் : கோச்சார பலன் என்றால் என்ன?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

எந்த கிரகமும் அசையாமல் ஓரிடத்திலேயே இருப்பதில்லை;  எல்லாம் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் நகர்கின்ற வேகம்தான் மாறு படுகின்றன. ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சந்திரன் ஓர் ராசியை 2 1/4 நாளில் கடக்கின்றார்.  சூரியன் அதே ராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு ஒரு ஆண்டும், ராகு, கேதுக்களுக்கு 1 1/2 ஆண்டும், சனிக்கு 2 1/2 ஆண்டுகளும் ஆகின்றன.  கிரகங்கள் அல்லது கோள்கள் நகர்வதையும், அதனால் ஏற்படும் பலன்களையும் தான் கோச்சார பலன் என்றழைக்கிறோம்.

பொதுவாகப் பலன் சொல்ல வேண்டுமென்றால் ஒருவரின் ஜாதகம் வேண்டும். அப்போது தான் பலன் சொல்ல முடியும்.  இதில் யார் ஜாதகமும் இல்லையே! எப்படிப் பலன் சொல்வது?  இதில் ஒருவருடைய ராசியை வைத்துப் பலன் சொல்வது.  அதாவது ஒருவரின் ஜென்ம ராசியை வைத்துப் பலன் சொல்வது.  இந்த உலகத்தில் உள்ள அனைவரும் 12 ராசிகளுக்குள் அடக்கம்.  உதாரணமாக இந்தியாவில் 108 க் கோடிப் பேர் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். இந்த 108 க் கோடிப் பேரும் 12 ராசிக்குள் அடக்கம்.  தோராயமாக ஒவ்வொரு ராசிக்கும் 9 கோடிப் பேர் இருக்கின்றார்கள். உதாரணமாக மேக்ஷ ராசியை எடுத்துக் கொண்டால் அதில் மேற் கூறியவாறு சுமார் 9 கோடிப் பேர்கள் இருக்கின்றார்கள்.

இந்த மேக்ஷ ராசியை லக்கினமாக வைத்துக்கொண்டு மற்ற கிரகங்களின் நிலையையும் பார்த்துப் பலன் சொல்வதுதான் கோச்சார பலன். இந்தப் பலன் 9 கோடிப்பேருக்கும் சரியானதாக இருக்குமா? இருக்காது. இது அந்த ராசிக் காரர்களுக்கான பொதுப் பலந்தான். சரியாகவும் இருக்கலாம்; இல்லை; சரியில்லாமலும் இருக்கலாம். எப்படி 9 கோடிப் பேர்களுக்குப் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியும்? மேக்ஷ ராசிக் காரர்களுக்கு இப்போது 4-ம் வீட்டில் சனி! அதாவது கடகத்தில் சனி இருக்கிறார்.  இதை வட மொழியில் "அர்தாஷ்டமச் சனி" என்றழைப்பார்கள். இது அந்த ராசியில் இருக்கிற 2 1/2 ஆண்டுக் காலமும் கஷ்டத்தைக் கொடுக்கும் என்பார்கள்.

மேக்ஷ ராசியில் உள்ள அனைவருமா கஷ்ட ஜீவனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இல்லையே! ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார். மற்றொருவர் அதைவிட உன்னத நிலையில் இருக்கிறார். மற்றொருவர் மிக தரித்திர நிலையில் இருக்கிறார். எல்லோரும் சமமாக இல்லையே!  ஆகவே இந்தப் பொதுப் பலன்கள் சரியாக இருக்காது. சிலருக்கு சரியாக இருக்கலாம்; சிலருக்குப் பொருந்தாமலும் போகலாம்.

சரி! அப்படியானால் எதற்குப் பலன்கள் எழுத வேண்டும். சரியாக இருக்காது என்று தெரிந்தும் பலன்கள் எழுத வேண்டுமா? சரியான கேள்வி. பதில் சொல்லியே தீர வேண்டும்.

எல்லோருக்கும் ஜாதகம் இருப்பதில்லை;  இருந்தாலும் அவர்கள் லக்கினம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.  ராசிதான் தெரியும்.  ஜாதகம் இல்லாதவர்களுக்கு அந்த ராசிப்படி காலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே எழுதப் படுபவைதான் இந்த ராசிபலன்கள். மிகவும் பொதுவான பலன்கள்.

ஆகவே 100 சவீதம் பலன்கள் சரியாக இருக்குமென்று எதிர்பார்ப்பது சரியல்ல. குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு, கேதுப் பெயர்ச்சி பலன்கள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.

சரி! அப்படியென்றால் கோச்சாரபலன்களால் பலனே இல்லையா? அப்படியல்ல; தனிப் பட்டவரின் ஜாதகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு நடக்கும் தசா, புக்தி நாதர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று பலன் சொல்வது மிகுந்த பலனைக் கொடுக்கிறது இது நமது அனுபவம்.

| | |
oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |