அட்டோபர் 06 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
அடடே !!
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 7
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 3  வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


இந்த வார கேள்விகள்

1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல் ஆசிரியர் யார்?

2. திருவாய்மொழி யார் எழுதியது? அந்த தொகுப்புக்கு முதன்முதலாக உரை எழுதியவர் யார்?

3. 'சிவஞான போத'த்தை எழுதியவர் யார்?

4. பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்?

5. நைடதம் யாருடைய வரலாற்றைக் கூறுகின்றது? யாரால் இயற்றப்பட்டது?

6. கலித்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? தொகுத்தவர் யார்?

7. நெடுந்தொகை என்பது எந்த நூலைக் குறிக்கும்?

8. நெஞ்சாற்றுப்படை என்பது எந்த நூலைக் குறிக்கும்? அந்த நூல் எந்தப் பாவால் ஆகியது?

9. ஏலாதியின் ஆசிரியர் யார்?

10. கொங்குவேளிர் மாக்கதையின் ஆசிரியர் யார்? யாருடைய வரலாற்றை உரைக்கின்றது?


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. கைய காலா நினைச்சீன்னா கால என்னவா நினைப்பே ? (பார்த்திபன் - பாரதி கண்ணம்மா)

2. மகனே ! பொறுத்தது போதும் பொங்கி எழு. (கண்ணாம்பா - மனோகரா)

3. கிடைகிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது. (ரஜினி - முத்து)

4. நாயர் ! நான் உன்னை சாப்பிடியான்னு கேட்டேன், பதிலுக்கு நீ என்ன கேட்டியா ? (நாகேஷ் - எதிர் நீச்சல்)

5. அதாண்னே இது... (செந்தில் - கரகாட்டகாரன்)

6. ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ! (வீராசாமி - முதல் மரியாதை)

7. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது. (கமல் - பம்மல் K சம்பந்தம்)

8. உங்களை திருத்த 1000 பெரியார் வந்தாலும் முடியாதுடா. (விவேக் - திருநெல்வேலி)

9. சபாஷ் சரியான போட்டி  (வீரப்பா - வஞ்சிக் கோட்டை வாலிபன்)

10. ரெங்கசாமி உன் பையன் என்ன பயந்துட்டானா ? (ரகுவரன் - பாட்ஷா)

 

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி(கள்) :

Suresh - penathal (sudamini@gmail.com ) & Gayathri (gayavenka@yahoo.com)

வாழ்த்துகள் :)

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |