அக்டோபர் 7 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : கலை
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  பொது வாழ்க்கையில் தூய்மையாக இருப்பவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி ஆண்டாண்டுகாலமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான கலை வித்தகர்களின் தனி மனித வாழ்க்கை அப்படியொன்றும் தூய்மையானதாக இருந்துவிடுவதில்லை என்கிற கசப்பான உண்மையையே நாம் சந்தித்துவருகிறோம். கலைஞர்களிடையே இருக்கும் இத்தகைய குறைபாட்டைத்தான் காந்திஜியும் நொந்து கொள்கிறார்.

  'கலைக்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், தங்கள் கலை ஈடுபாட்டுடன் அப்பழுக்கற்ற தூய வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் சாதனை புரிந்ததாக இதுவரை தெரியவரவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையின் தூய்மைக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கும் பழக்கம் எப்படியோ நமக்கு ஏற்பட்டுவிட்டது. இதைவிட உண்மைக்கு புறம்பானது வேறேதும் கிடையாது என்பது என்னுடைய அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரை தனிமனித வாழ்க்கையில் தூய்மைதான் மிக உன்னதமான, மிக உண்மையான கலை என்று சொல்ல முடியும்' (ஹரிஜன், 19.2.1938)

  அதற்காக காந்திஜி, ஆய கலைகளையோ, கலைஞர்களையோ குறைசொல்லவில்லை. உண்மையான கலை பற்றி காந்திஜிக்கு உயர்வான அபிப்பிராயம் இருந்திருக்கிறது.

  'உண்மையான கலை என்பது ஆத்மாவின் வெளிப்பாடு.  மனிதனின் உள்ளுணர்வுக்கு வெளிப்பாடாக இருக்கும் அளவையொட்டியே வெளிப்புற வடிவங்களுக்கு மதிப்பு உண்டு. உண்மையான அழகு என்பது உள்ளத்தின் தூய்மையில் அடங்கியிருக்கிறது.' (யங் இந்தியா 20.10.1927) (யங் இந்தியா, 13.11.1924)

  அப்படிப்பட்ட உண்மையான கலையானது வெறுமனே வெளிவடிவத்திற்கு மட்டுமல்லாமல் அதற்கு பின்னாலிருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிடுவதற்கு காரணம் எந்தவொரு கலைக்கும் ஒரு உயர்வான நோக்கம் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

  காந்திஜி போன்ற சமூகவியலர்களுக்கு கலைகளில் ஆர்வம் குறைவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும், ரோம் நகரத்து சிலுவைகளிலும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளிலும் ஒளிந்திருக்கும் நுட்பங்களையும் அவை சொல்லும் செய்திகளையும் காந்திஜி கவனிக்க மறக்கவில்லை. அத்தகைய கலைப்படைப்புகள் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதில் அவருக்கு மகிழ்ச்சி.

  காந்திஜி, பிர்லா மாளிகையிலிருந்தபோது தோட்டத்தில் பலவகையான பூச்செடிகளை நடுவதற்கு முயன்று கொண்டிருந்த ஆசிரமவாசிகளை தடுத்து காய்கறிகளை பயிரிடுமாறு சொல்கிறார். காரணம், பூச்செடியோ, காய்கறிகளை தரும் செடியோ... இரண்டுமே கண்ணுக்கு அழகுதான். ஆனால், பூச்செடியை விட காய்கறிகளை தரும் செடியினால் வரும் ஆதாயங்களுக்குத்தான்!

  போராட்ட காலத்திலெல்லாம் காந்திஜிக்கு இசை நிம்மதியளித்திருப்பதை பற்றி நிறைய படித்திருக்கிறோம். காந்திஜியை பொறுத்த வரை ஓவியம் போன்றவையெல்லாம் தேவையில்லாத விஷயங்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். வானவெளியில் வாரியிறைக்கப்பட்டிருக்கும் விண்மீன்களை கண்டு ரசிப்பது என்று அவரது கலையார்வம், இயற்கை எழில் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. காந்திஜி, நல்ல கலைஞராக இல்லாவிட்டாலும் நல்ல கலா ரசிகராக இருந்திருக்கிறார்.

  'கலைத்திறன் என்று சொல்லப்படும் அம்சம் எதையும் என்னிடம் காணமுடியாது என்ற போதிலும், என் வாழ்க்கையில் உண்மையாகவே போதிய கலையம்சம் இருப்பதாக நான் உரிமை பாராட்டக்கூடும். சத்தியத்தில் அல்லது அதன் வாயிலாக அழகினை நான் காண்கிறேன். சத்திய சிந்தனைகள் மட்டுமின்றி உண்மையானவை எல்லாமே அதாவது உண்மையான முகங்கள், சித்திரங்கள், உண்மையை பிரதிபலிக்கும் பாடல்கள் எல்லாமே அழகும் கலையம்சமும் கொண்டவை. எல்லோரும் சத்தியத்தின் அழகு சொரூபத்தை பார்க்க தவறிவிடுகிறார்கள். அதில் பொதிந்திருக்கும் செளந்தர்யத்தை உணருவதுதான் உண்மையான கலையம்சமாக இருக்க முடியும்.' (யங் இந்தியா 13.11.1924)

  லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னால் கலையெல்லாம் வெகு சாதாரண விஷயம் என்பதிலிருந்தே அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார் என்பதும் தெரிந்துவிடுகிறது.

  'பசியால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு எது பயன்பட முடியுமோ அதுவே என் மனதில் அழகாக தோன்றுகிறது. வாழ்க்கைக்கு அவசியமானதை முதலில் நாம் அளிப்போம். அதற்கு பின்னர் வாழ்க்கையின் அணிநயங்களும் அலங்காரங்களும் தானாகவே பின்தொடரும் ' (யங் இந்தியா, 20.11.1924)

  ஒரு கலைப்படைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்? ஒரு கலா ரசிகராக அவருடைய எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது? 

  'ஒரு கலைப்படைப்பு பற்றி எனக்கு விளக்கி கூறுவதற்கு ஒரு கலைஞரின் தேவை எதற்காக வேண்டும்?  அந்த கலைப்படைப்பு ஏன் அதுவாகவே சுய விளக்கமாக அமைதல் கூடாது? கலை, லட்சக்கணக்காகன மக்களுக்கு புரியும் வகையில் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.' (ஹரிஜன், 14.11.1936)

  சரி, கலை, வாழ்க்கைக்கு அவசியம்தானா என்கிற கேள்விக்கு காந்திஜி சொல்லும் பதிலை ஒரு பன்ச் டயலாக்கில் அடக்கிவிடலாம்! வாழ்க்கையில கலை இருக்கவேண்டியதுதான்.. ஆனா, கலையே வாழ்க்கையாயிடக்கூடாது!

  'கலைக்காகவே கலையில் ஈடுபடுகிறேன் என்று சொல்லிக்கொள்பவர்களால் சொல்வதை நிரூபிக்க முடிவதில்லை. வாழ்க்கைக்கு கலை அவசியம்தான்.  ஆனால், நாம் அடைய வேண்டிய லட்சியத்தை எட்டுவதற்கான வழிமுறையாகத்தான் கலை இருக்க முடியும். கலையே, லட்சியமாக மாறிவிட்டால் மனித இனத்தையே அது அடிமைப்படுத்தி இழிவுபடுத்திவிடும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |