Tamiloviam
அக்டோபர் 9 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : பிரச்னைகளால் நாடே திண்டாடுகிறது... நாம் எம்மாத்திரம்
- [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

பிரச்னைகளால் நாடே திண்டாடுகிறது... நாம் எம்மாத்திரம் என்று நினைப்பதுண்டா ?

நமது பிரச்னைகளுக்கு வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது என்று நினைப்பதுண்டு !

ஓர் ஊரில் பேராசைக்கார பையன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டில் சிறிய கழுத்து உள்ள ஜாடி இருந்தது. அதில் பாதியளவு உலர்ந்த திராட்சை இருந்தது. அவன் ஜாடிக்குள் கையை விட்டான். கை நிறையப் பழங்களை அள்ளிக்கொண்டான். கையை எடுத்தான். கை வரவில்லை. கை நிறைய பழங்கள் இருந்ததே காரணம். அழ ஆரம்பித்து விட்டான். அம்மா வந்தாள்.

மகனே ! என்ன ஆயிற்று?

எனது கை உள்ளே அகப்பட்டுக் கொண்டது

உனது கையிலிருக்கும் பழங்களில் கொஞ்சத்தை ஜாடிக்குள் போட்டுவிடு. பிறகு உனது கையை வெளியே எடு !

அப்படியே செய்தான். கை வெளியே வந்து விட்டது. இப்போது அவன் முகத்தில் மகிழ்ச்சி. அன்னை சொன்னாள் :

மகனே ! இனி ஒருபோதும் இப்படிப் பேராசை கொள்ளாதே !

இது சுவாமி சிவானந்தர் சிறுவர்களுக்குச் சொன்ன கதை.


(நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதனின் கேள்வி - பதில்கள்)

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   கேள்விக்கென்ன பதில் ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |