அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நடிகை விந்தியா பேட்டி (அரசியல்)
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார் நடிகை விந்தியா. குணச்சித்திர நடிகையான இவர் தெள்ளத் தெளிவாக பேசுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பேசுவதை கேட்க நன்கு கூட்டம் கூடுகிறது. கட்சிக்காரர்களின் மத்தியில் பரபரப்பாக இருந்த இவரிடம் ஒரு பேட்டி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியதிலிருந்து .......


தமிழோவியம் :  உங்களின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறதா?

பதில் :- கண்டிப்பாக. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் சரி, இந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் சரி எனது பேச்சை கேட்க ஆண்கள், பெண்கள், என பொதுமக்கள் பாகுபாடு இன்றி கூட்டமாக கூடி கேட்கிறார்கள். இது மகிழ்ச்சியான ஒன்று. மக்களிடம் வரவேற்பு இருப்பதனால் தான் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து வருகிறேன்.

தமிழோவியம் :- பொதுவாக நடிகர், நடிகைகள் பணத்திற்காகத் தான் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறதே?

Vindhyaபதில் :- அப்படி எல்லாம் என்னிடம் கிடையாது. அம்மா அவர்களின் தலைமையிலான அ.தி.மு.க.வில் நான் இணைந்ததில் இருந்து கட்சிக்காகத் தான் பிரச்சாரம் செய்கிறேன். இப்படி பிரச்சாரம், கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் மக்களின் பல தரப்பட்ட பிரிவினரை அறிந்து கொள்ள முடிகிறது. இவை எல்லாம் மிக அற்புதமானதாக நான் நினைக்கிறேன். பணம் தான் பிரதானம் என்ற நோக்கத்தில் எண்ணத்தில் நான் பிரச்சாரம் செய்ய வந்ததில்லை. இனியும் வருவதுமில்லை போதுமாப்பா.

தமிழோவியம் :- சினிமாவில் கதாநாயகியாக வெற்றியடையவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில் :- கொஞ்சம் வருத்தம் தான். அதற்காக அதனை நினைத்துக் கொண்டே இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் எனக்கு என்று நல்ல பெயர் இருக்கிறது. குணச்சித்திர வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் எனக்கான வாய்ப்புகள் வரும். வந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழோவியம் :- நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து கலக்கிக் கொண்டு இருக்கிறார். அதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் :- நோ கமண்ட்ஸ்.

தமிழோவியம் :- தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசினை பற்றி உங்களின் கருத்து?

பதில் :- இ;ந்த ஆட்சி, அம்மா ஆட்சி மாதிரி இல்லை. இலவசம், இலவசம் என்று சொல்லி ஜெயித்து விட்டனர். ஆனால் சொன்னதை எதுவும் சரியாக நடக்கவில்லை. அனைவருக்கும் டி.வி என்றார்கள் ஆனால் சிலருக்கு மட்டுமே கொடுத்தார்கள். அம்மா அவர்கள் சொன்னது படி இந்த ஆட்சி விரைவில் கவிழும். அம்மா மீண்டும் ஆட்சிக்கு வருவார். வந்து மக்களுக்கு நல்லது செய்வார்.

தமிழோவியம் :- தமிழ் சினிமா உலகம் பற்றி உங்களின் எண்ணத்தை சொல்லுங்களேன்.? 

பதில் :- தமிழ் சினிமா தான் என்னை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதனை மறக்க முடியாது. ஒரு பக்கம் ரஜினி கலக்கிக் கொண்டிருக்கிறார். மறு பக்கம் கமல் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதே போல் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், பரத் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இவை எல்லாம் சற்று மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள். மற்றபடி தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். 

| | | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |