அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : அம்மா
- லெனின் [lenin_ramasamy@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

நிம்மதி சாப்பாடு! - முடித்தபின்
நித்திரையின் கூப்பாடு!

படுக்கையில் படுத்தேன்.
பருவ வயதின் வெளிப்பாடோ?
இல்லை,
பக்குவத்தின் குறைபாடோ?
தெரியவில்லை.

விழியை மூடியதும்
விதவிதமாய் பெண்கள் கூட்டம்!
கனவின் வழியே வந்து
கண்ணடித்துக் கூப்பிட்டு
கலைத்துக் கொண்டிருந்தனர் - என்
கசங்கிய மனதை!

புரண்டு படுத்தேன் - படுத்து
சுகத்தில் துடித்தேன் - துடித்து
விண்ணில் பறந்தேன்!
பறந்த போது தான் பார்த்தேன் - கட்டிலிலிருந்து
கீழே விழுகிறேன் என்று!

மூக்கு உடைந்தது! மூர்ச்சையானேன்!

மீண்டும் ஒரு கனா!
ஒரு பெண்ணின் கூப்பாடு!
முனகலின் வெளிப்பாடு!
காயம் பட்ட பிறகும் இல்லை கட்டுப்பாடு!

கண்ணை கொஞ்சம் விரித்தேன்!
கனவில் வந்த கன்னிகளை தேடினேன்!
காயம் பட்டு, என் காசும் பட்டு போனதால்
பறந்து போனது அந்த 'பத்தினி' கூட்டம் -
என் கனவில் கூட!

கண்ணை கொஞ்சம் மூடினேன்!
ஆதரவாய் காற்று என்னை அணைத்துக் கொண்டது!
வேர்வை துடைத்து என் சோர்வையும் துடைத்தது!
என் இமைகளின் இடைவெளியில் பார்த்தேன்!
எதிரில்,
ஈரக் கண்களுடன் என் அம்மா!

 

 

 

| |
oooOooo
                         
 
லெனின் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |