அட்டோபர் 13 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் தொழில் நுட்பம்
- எழில்
| Printable version | URL |

மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் தொழில் நுட்பம் ( 3rd generation Wireless Communication) குறித்துக் காணலாம்.

Third Generation Technologyஒப்புமை வகை (Analog) கம்பியில்லாத் தொழில் நுட்பம் முதல் தலைமுறை என்றும் ஜி எஸ் எம் , ஸி டி எம் ஏ போன்ற இலக்க வகை (Digital) கம்பியில்லா நுட்பங்கள் இரண்டாவது தலைமுறை என்றும் ஏற்கனவே பார்த்தோம் . ஒப்புமை வகை அல்லது முதலாம் தலைமுறைக் கம்பியில்லாத் தொடர்பு மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கையிலும் அழைப்பு ஏற்படுத்திப் பேசுவது சாத்தியமானது. ஒப்புமை வகையில் பல குறைபாடுகள் இருப்பினும் முதன்முதலில் கம்பியில்லா நுட்பத்தை அறிமுகம் செய்த வகையில் அது வெற்றிகரமான நுட்பமே. அடுத்து வந்த இரண்டாந்தலைமுறைக் கம்பியில்லா நுட்பம் தொலைத்தொடர்பில் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாய் இன்றைக்கு,உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் எளிதில் தொடர்பு கொண்டு பேசமுடிகிறது.

மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் தொலைத்தொடர்பின் முக்கிய நோக்கம் அதிவேகத் தரவுப் பரிமாற்றமாகும். இரண்டாம் தலைமுறை நுட்பம் பேச்சிற்கே (Voice) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாய் இயக்கப்பட்டாலும், இத்திட்டத்தின் உலகளாவிய வெற்றி , தரவுப் பரிமாற்றத்தையும் மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு தொலைத்தொடர்பு நுட்பத்தை எடுத்துச் செல்ல உதவியது. 1998- ல் மூன்றாந்தலைமுறை நுட்பத்தின் வரையறைகளை முடிவு செய்யப் பல்வேறு ஆலோசனைகள் , பல்வேறு தொழில் நுட்பங்கள் , பல நிறுவனங்களின் புதிய எண்ணங்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டன .

அமெரிக்கா தனது இரண்டாந்தலைமுறை நுட்பமான ஸி டி எம் ஏ (C D M A) நுட்பத்தினைப் பயன்படுத்தி , ஒரு மூன்றாந்தலைமுறை நுட்பத்தைத் தயாரித்தது. ஐரோப்பிய நாடுகளும் இதே ஸி டி எம் ஏ நுட்பத்தைப் பயன்படுத்தியே மூன்றாந்தலைமுறை நுட்பத்தை அறிமுகப்படுத்த முடியும் என்று தெளிந்தன . இருப்பினும் அமெரிக்கா அறிமுகம் செய்த அதே நுட்பத்தை தங்கள் பாணியில் மாற்றி அமைத்து ,ஏற்கனெவே அறிமுகமாகி இயங்கும் ஜி எஸ் எம் நுட்பத்துடன் அதை ஒத்திசைவு செய்ய முடிவு செய்தன . இவ்வாறு அமெரிக்கா வகுத்த திட்டத்துற்கு ஸி டி எம் ஏ - 2000 அல்லது சர்வதேச நகர்நிலைத் தொலைத்தொடர்பு - 2000 ( International Mobile Telecommunication-2000) என்று பெயர். சர்வதேசத் தொலைத்தொடர்புச் சங்கத்தின் (International Telecommunication Union - ITU) மேற்பார்வையில் இத்திட்டத்திற்கான வரையறைகளும் பயன்படுத்த வேண்டிய நுட்பங்களும் , பயன்படுத்த வேண்டிய அதிர்வெண் பட்டையும் இறுதி செய்யப்பட்டன.
 
இதுபோலவே ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் , அமைப்புகளும் இணைந்து மூன்றாந்தலைமுறை நுட்பத்திற்கான ஆய்வில் இறங்கின. இதற்கான ஒரு தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மூன்றாந்தலைமுறைக் கூட்டுத் திட்டம் (3rd Generation Partnership Project , 3GPP) என்று இவ்வமைப்புக்குப் பெயர். 1998-ல் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சோதனைகளுக்குப் பின் மூன்றாந்தலைமுறை நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. உலகளாவிய நகர்நிலை தொலைத்தொடர்பு அமைப்பு ( Universal Mobile Telecommunication System , UMTS) என்று இதற்குப் பெயர். 2001 ஆம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனமான என் டி டி டோகோமோ (NTT DoCoMo ) உலகின் முதல் மூன்றாந்தலைமுறை வலையமைப்பினை நிறுவி வெற்றிகரமாய்ச் செயல்படுத்தியது. 2003-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளும் மூன்றாந்தலைமுறை வலையமைப்புகளை வணிக ரீதியாய் நிறுவின. செல்பெசித் தயாரிப்பு நிறுவனங்களும் மூன்றாந்தலைமுறை நுட்பத்தினைப் பயன்படுத்தும் கைக்கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் அறிமுகம் செய்தன. உலகெங்கும் தற்போது ஐம்பது மில்லியன் வாடிக்கையாளர்கள் மூன்றாந்தலைமுறை கம்பியில்லாத் தொலைத்தொடர்பின் வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.

மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் திட்டத்தினால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தத் தரப்படும் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் என்னென்ன?

* அழைப்பின் போது எதிர்முனையில் உள்ளவர்கள் பேசும் பேச்சைக் கேட்பதோடு அவர்களைப் பார்த்துக்கொண்டே பேச உதவும் ஒளித்தோற்ற அழைப்பு (Video call)

* தரவுப்பறிமாற்றத்தின் வேகத்தைப் பலமடங்கு அதிகரித்தல் . ஒரு மெகாபிட்ஸ் வேகத்தில் தரவுப் பரிமாற வழி செய்தல். இதன் மூலம் அதிவேக இணைய இணைப்பு ஏற்படுத்தல்.

* ஒளித்தோற்றக் கலந்துரையாடல் அழைப்பு (Conference Video call)

* மின் வணிகப் பரிமாற்ற (E-Commerce) வழிகளை மேலும் முறைப்படுத்தி பயன்பாடுகளைப் பரவலாக்கல். மின் வணிகப் பரிமாற்றங்களை இனி நகர் - வணிகம் என்று அழைக்கலாம் ( mobile commerce)

* இருப்பிடம் சார்ந்த சேவைகள் (Location Based Services , LBS) - இருப்பிடம் காண உதவும் வசதி மற்றும் அவ்விடத்திலுள்ள பிற வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் போன்றவற்றை அறிய உதவும் சேவைகள்.

இன்னும் பல..

உலகளாவிய நகர்நிலை தொலைத்தொடர்பு அமைப்பு (UMTS) பற்றி அடுத்த வாரம் விரிவாய்க் காண்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |