அக்டோபர் 14 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
வேர்கள்
முன்னுரை
கட்டுரை
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : வருகிறது உலக நாயகரின் தேர்தல்
  - பாஸ்டன் பாலாஜி
  | Printable version |

  ·ப்ளோரிடா எக்ஸ்பிரஸ்

  அமெரிக்காவின் புயலோரத்தில்... சாரி... கிழக்குக் கடற்கரையோரத்தில் இருக்கும் ·ப்ளோரிடா பெரிதாக தவறு

  ஜான் கெர்ரி

  பிறந்த நாள்: டிசம்பர் 11, 1943
  பிறந்தது: டென்வர், கொலராடோ
  வசிப்பிடம்: பாஸ்டன், மாஸசூஸட்ஸ்
  மனைவி: விவாகரத்துக்குப் பின் தெரஸா ஹெயின்ஸ்
  தொழில் அனுபவம்: வக்கீல்
  அரசியல் அனுபவம்: 1982-84 - மாஸசூஸட்ஸ் மாகாண துணை கவர்னர்; 1984 முதல் இன்று வரை - செனேட் உறுப்பினர்.
  ராணுவ அனுபவம்: வியட்நாம் போரில் பங்கேற்பு; ராணுவம் - 1966-70
  படிப்பு: கலை இளநிலை - யேல் பல்கலை., 1966; முதுகலை - ஜேடி பாஸ்டன் கல்லூரி, 1976

  எதுவும் இழைக்கவில்லை. இருந்தாலும் நான்கு பெரிய புயல்கள் இவ்வருடம் கரையைக் கடந்து இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் போன வருடம் அவர்கள் ஜார்ஜ் புஷ்ஷ¤க்கு வாக்களித்ததுதான் என விளையாட்டாகப் பேசிக் கொள்கிறார்கள்.

  ·ப்ளோரிடாவாசிகள் யாருக்கு வாக்களித்தனர் என்பது வோட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இந்தியாவில் நடக்கும் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப்பற்றல், எதிர்க்கட்சி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற தகிடுதத்தங்கள் அமெரிக்காவிலும் காலம் காலமாக அமைதியாக செயலாக்கப்பட்டு வருகிறது. குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெல்லும் தொகுதிகள் நிறைந்த ·ப்ளோரிடாவில் இந்த மாதிரி விஷயங்கள் 2000-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் ஊடகங்களின் பரந்த
  கவனிப்பைப் பெற்று வருகிறது.

  கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நியு யார்க், சிகாகோ போன்ற இடங்களில் நிச்சயம் சுதந்திரக்கட்சிதான் ஜெயித்திருக்கும் என்பதால் குடியரசு நாயகர் புஷ்ஷ¤ம் இதைப் பெரிது படுத்தவில்லை. இடித்துக் கொண்டு அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குசாவடியை நிர்வகிப்பவரின் குழப்பங்கள் போன்றவை மட்டுமே குறைந்தது ஐந்து மில்லியன் வாக்குகளை மதிப்பிழக்க வைத்துள்ளது.

  ஜனாதிபதித் தேர்தல்களில் ·ப்ளோரிடாவுக்கு எப்பொழுதுமே முக்கியமான இடம் உண்டு. பல வருடங்களாக சுதந்திரக் கட்சியின் கோட்டையாக விளங்கிய ·ப்ளோரிடா, கடந்த ஆண்டுகளில் வயதானவர்களின் சொர்க்கபுரி, க்யூபாவில் இருந்து தப்பி வருபவர்களின் வரவேற்பு மையம், ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களின் பெருக்கம் போன்றவற்றால் குடியரசுக் கட்சியும் சமபலத்துடன் வலம் வரும் மாகாணமாக மாறியிருக்கிறது. இருபத்தைந்து எலெக்டோரல் வோட்டுகளுடன் ஜனாதிபதித் தேர்தலின் துருப்புச் சீட்டாக
  இருக்கிறது.

  போன தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை, தொட்டால் ஓட்டு போடும் பெட்டிகளை உபயோக்கிக்கப் போகிறார்கள். வெள்ளோட்டமாக நடந்த நகராட்சித் தேர்தலில்தான், இந்த முறையும் பிரச்சினை ஆகலாம் என்பது தெரியவந்துள்ளது. பனிரெண்டே வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால், 137 வோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படுகிறது. தொட்டவுடன் வாக்கை எடுத்துக் கொள்ளும் கணினியில், சொந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு வந்து வாக்களிப்பவர்கள், செல்லாத வோட்டுப்
  போடவா, வந்திருக்கப் போகிறார்கள்?

  இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருப்பது போல் அமெரிக்காவில் தேர்தல்களுக்கு என்று தனியாக எதுவும் கிடையாது. ஒவ்வொரு மாகாணத்திலும் மந்திரியாக இருப்பவர்களே, தேர்தல் வேலைகளுக்கும் தலைமை தாங்குவார்கள். பல சமயங்களில் இவர்களே வேட்பாளர்களின் பிரச்சாரக் குழுவிலும் முக்கிய அங்கம் வகிப்பார்கள். சன் டிவி நடத்தும் கலாநிதி மாறனும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் போல, ·ப்ளோரிடா கவர்னர் ஜெப் புஷ்ஷ¤ம் ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷ¤ம் சகோதரர்கள்.

  அண்ணன் ஜார்ஜ் புஷ் ஜெயிப்பதற்கான ·ப்ளோரிடா குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் காதலீன் ஹாரிஸ். இவரேதான் ·ப்ளோரிடா தேர்தல் ஆணையத்தின் தலைவரும் ஆவார். பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, குற்றமற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வாக்களிக்க முடியாமலும், குற்றம் புரிந்த குடியரசு கட்சி ஆதரவாளர்களை நிரபராதிகள் என்றும், பட்டயம் கொடுத்தது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் கொ.ப.செ.வே, தேர்தல் கமிஷனராக வேலை பார்த்தால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் களைவது எவ்வளவு எளிது!

  இது நடந்தது கடந்த 2000-ஆம் ஆண்டு தேர்தலில். ஆனால், இந்த வருடத்து வாக்காளர் பட்டியலிலும் இதே போன்ற செலக்டிவ் விடுபடுதல்கள் முளைத்துள்ளது. அதே ஜெப் புஷ். மீண்டும் அண்ணன் புஷ் வேட்பாளரக இருக்கிறார். லியான் மாவட்டத்திற்கு தம்பியால் நியமிக்கப்பட்ட நிறுவனம் தயாரித்த எழுநூறு பேர் அடங்கிய குற்றவாளி பட்டியலில் வெறும் முப்பத்துமூன்று பேர் மட்டுமே குற்றம் புரிந்தவர்கள். நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால், தவறு என்று யாராவது அனற்றினால், பழியைத் தூக்கி அவர்கள் மேல் போட்டு விடலாம்.

  ·ப்ளோரிடா முழுக்க 47,000 பேர் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளனர். இவர்களில் 61 பேர் மட்டுமே ஹிஸ்பானிக்ஸ் எனப்படும் ஸ்பானிஷ் மொழிப் பேசும் தெற்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள். ·ப்ளோரிடாவின் மக்கட்தொகையில் பதினொரு சதவிகிதம் உள்ள ஹிஸ்பானிக்ஸில் இருந்து .1 சதவீதத்துக்கும் குறைந்தவர்களே பட்டியலில் இடம் பெற்றிருப்பது அசாத்தியம். விசாரணை நடத்தியதில் டேட்டாபேஸ் பிரச்சினை, தொடு உணர்வை நிரலி கண்டுபிடிப்பதில் தவறு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

  இவ்வளவு நுணுக்கமாக ஆய்வதால், ·ப்ளோரிடாவில் இந்தத் தேர்தலில் பிரச்சினை வராது என்றே நினைக்கிறேன். போதாக்குறைக்கு மைக்கேல் மூரும் கேமிராவைத் தூக்கிக் கொண்டு ·ப்ளோரிடாவில் டிஸ்னிவர்ல்டிலோ, எம்.ஜி.எம்மிலே டேரா போடப்போகிறார்.

  பள்ளியில் கிரிக்கெட் ஆடும்போது தனியாக அம்பையர் என்று ஒருவரை வைத்துக் கொள்ள மாட்டோம். பேட்டிங் செய்யும் அணியில் இருந்தே ஒருவரை அம்பையராக வைத்துக் கொள்வோம். அவரும் அவ்வப்போது, நோபால், பந்து எல்லைக்கோட்டில் பிடிபட்டாலும் ஆட்டக்காரரின் மட்டையைத் தொடவில்லை என்று 'உதவி' செய்து காப்பாற்றி வருவார். இரு அணிகளுக்கும், சொந்த அணிக்காரர்களே அம்பையரிங் செய்து ஸ்கோரை ஏற்றிக் கொள்வதால் பெரிதாக சண்டையும் வராது.

  அமெரிக்காவிலும் இதே நிலைதான். தேர்தல் ஆணையர்களும், கொ.ப.செ.வும் ஒருவராகவே இருக்கும் மிச்சிகன், மிஸ்ஸௌரி போன்ற மாநிலங்கள் புஷ்ஷின் குடியரசு கட்சிக்கு சார்பாக அறிவிக்கப்படலாம். வெஸ்ட் வர்ஜினியா மாநிலத்தில் சுதந்திர கட்சியும் இதே தந்திரத்தைப் பின்பற்றுகிறது. அங்கு தேர்தல் ஆணையரே, கவர்னர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

  O

  அரியணையில் அமரப்போவது யார்

  தற்போதைய நிலையில் ஜார்ஜ் புஷ் முண்ணனியில் உள்ளார்.

  ஜான் கெர்ரிக்கோ பரவலான ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக பாஸ்டனில் பெரிதாக அடிபடும் ஓரினக் கல்யாணங்கள் சர்ச்சையிலும் வழவழா கொழ கொழா பதிலகள் கொடுப்பது, ஈராக்கினால் கிடைத்திருக்கும் அதிகப்பிரசங்கி இமேஜை நிவர்த்தி செய்பவராக காண்பித்துக் கொள்வது என்று காய்கள் நன்றாகவே நகர்த்தப்பட்டு வருகின்றன. தற்போதைய பணக்கார மனைவி தெரஸா ஹெய்ன்ஸை 1995-இல் மணமுடிக்குமுன், 1988-இல் முதல் மனைவியுடன் விவகரத்தானது. இடைப்பட்ட சொர்க்க காலமான ஏழு வருடத்தில் பல பெண்பார்க்கும் படலம் நிறைவேறியது சகஜம். அப்பொழுது சந்தித்த அஸோசியேடட் ப்ரெஸ் நிருபர் ஒருவருக்குக் குழந்தையும் கொடுத்து, அவளையும் நாடு கடத்தியவர் என்பது பழைய சர்ச்சை. ஈராக்க்கை என்ன செய்யப் போகிறார் என்று புரியவைக்காமல் கெர்ரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார்.

  தனிமனிதத் தாக்குதல் விளம்பரங்கள் எங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஜான் கெர்ரி புஷ்ஷையும், புஷ் கெர்ரியையும் பரஸ்பரம் 'கையாலகாதவர்கள்', 'ஈராக்கை சமாளிக்கத் தெரியாதவர்', 'பெரு நிறுவனங்களின் ப்ராக்ஸி', 'பண முதலையாக இருந்து கொண்டு பணக்காரர்களைத் தாக்குபவர்' என்று லாரி-யடி தண்ணீர் சண்டை போடுபவர்கள். கருக்கலைப்பு அமைப்புகளும், வேட்டைக்காரர்கள் சங்கங்களும், துப்பாக்கி தூக்குவோர் கழகங்களும் ஜனாதிபதிக்காக விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். ஆனால், விளம்பரத்தில் எங்காவது ஒரு மூலையிலாவது வேட்பாளர் தோன்றி 'நான் ஜான் கெர்ரி (அல்லது ஜார்ஜ் டபிள்யூ. புஷ்). நான் இந்த விளம்பரத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்' என்று முழங்க வேண்டும்.

  புஷ்ஷ¤க்கும் சேனிக்கும் சளைக்காமல் கெர்ரி காரி துப்பினாலும், இலக்கற்று துப்புவது போல் தோன்றுகிறது.

  ஜார்ஜ் புஷ்

  பிறந்த நாள்: ஜூலை 6, 1946
  பிறந்தது: நியு ஹாவன், கனெக்டிகட்
  வசிப்பிடம்: மிட்லண்ட், டெக்ஸாஸ்
  மனைவி: லாரா புஷ்
  தொழில் அனுபவம்: வர்த்தகம், விளையாட்டு அணியின் சொந்தக்காரர்
  அரசியல் அனுபவம்: 1994-2000 வரை டெக்சாஸ் மாகாண கவர்னர்
  ராணுவ அனுபவம்: தேசிய பாதுகாப்பு படை 1968-73
  படிப்பு: அறிவியல் இளநிலை - யேல் பல்கலை., 1968; மேலாண்மை - ஹார்வார்ட், 1975
  'சொல்லி அடிப்பாரடி... அடிச்சாருன்னா நெத்தியடிதானடி' என்பது போல் வியட்நாம், ஈராக் போர் என்று ஒவ்வொரு பிரம்மாஸ்திரமாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள் குடியரசு கட்சி. கெர்ரியோ தன் வசம் இருக்கும் 'பொருளாதார' நாகாஸ்திரத்தையும் சரியாக ஏவாமல், வரும் அம்புகளில் இருந்து தப்பிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

  கெர்ரிக்கு இந்த மாதிரி நிலை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சுதந்திர கட்சியின் வேட்பாளருக்கான முதல்கட்ட தேர்வில் பின்தங்கிய நிலையில் இருந்தவர்தான். முதலில் நடந்த 'ஐயோவா' மாகாணத்தில் கூட இரண்டாம் இடத்தைப் பிடித்தால் போதும் என்று முனகிக் கொண்டிருந்தார். ஜாக்பாட் ரேஸில் தன் பெரிய மூக்கை உள்ளே நுழைத்து முதலிடம் பிடித்தவர், வழியில் வந்த மற்றவர்களையும் தவிடு பொடியாக்கி சுதந்திரக் கட்சியின் வேட்பாளாராக அற்விக்கப்பட்டவர்.

  ஆனால், பிறரை தாழ்த்திக் காட்டி கெலிப்பதில் ஜார்ஜ் புஷ் வில்லாதி வில்லர். கடந்த 2000-த்தில நடந்த குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல்களில் மெக்கெயின் முன்னிலை வகித்தார். ஜார்ஜ் புஷ்ஷ¤க்கு அனுபவம் போதாது; போருக்கு செல்லாதவர் என்ற குறைகளை படு சாமர்த்தியமாக திசை திருப்பி, எதிராளியின் இல்லாதது + பொல்லாதது பரப்பி, வங்கி ஊழல் குற்றஞ்சாட்டி கட்சியின் சீட்டை அடைந்தவர். பரபரப்பு பேப்பரை சென்றடையும். எதிராளியின் பெயரை களங்கமடைய வைக்கும். எளிதில் பரவும். ஊடகமெங்கும் 'நெருப்பில்லாமல் புகையுமா?' என வல்லுநர்களைக் கொண்டு அலச வைக்கும். கடைசியில் பொய் என்று முடிவு பெற்றால் கூட 'காசு கொடுத்து வாயை அடைச்சுட்டான்பா' என்று எண்ணத்தை மனதின் ஓரத்தில் வடுவாக விட்டுச் செல்லும்.

  இன்றைய நிலை நீடித்தால் புஷ் ஜெயிப்பது மிக எளிது. எழுபத்தியிரண்டு சதவீத அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு புஷ்ஷின் கொள்கைகள் பிடிக்கும். தங்கள் நாட்டை காப்பதில் வல்லவர் என்னும் எண்ணத்தையும் அமெரிக்கர்களிடையே ஆழ விதைத்திருக்கிறார். பொருளாதாரம், படிப்பு, சுற்றுச்சூழல், வெளியுறவுக் கொள்கை, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வு சேம நிதி போன்ற மிக முக்கிய கோட்பாடுகளில் தங்கள் நிலையை எடுத்துரைக்காமல் கருக்கலைப்பு, ஓரினர்களுக்கு உரிமை, துப்பாக்கி உரிமம், கடவுள் நம்பிக்கை போன்ற உணர்வுரீதியான அணுகுமுறை புஷ்ஷ¤க்கு சாதகமாக இருக்கிறது.

  ஈராக், தீவிரவாதம் குறித்த நிலையை சாதாரண குடிமகன் புரிந்து கொள்ளுமாறு கெர்ரி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. கெர்ரி எப்பொழுதுமே பதுங்கும் புலி. அபாரமாக விவாதம் புரிபவர். புஷ்ஷ¤டன் மூன்று வாதங்கள் நடந்திருக்கிறது. அவற்றில் கெர்ரி நன்றாகப் பேசியது முக்கியமல்ல. வாக்காடலில் வெற்றி பெற்றதாக ஊடகங்களும் பத்திரிகைகளும் கருத்து தெரிவிப்பது அவசியம். கடந்த தேர்தலில் ஆல் கோர் கூட அபாரமாகப் பேசினார்; கைதட்டல் வாங்கினார்; புஷ்ஷை திக்குமுக்காட வைத்தார்; தனது புத்திகூர்மையையும் அறிவையும் வெளிப்படுத்தினார். ஆனால், அடுத்த நாள் தலையங்கத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் ஆல் கோரை அறிவுஜீவி என்றும் புஷ்ஷை நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பாகவும் எழுதிவிட்டார்கள். 'இது நம்ம ஆளு' என்று புஷ் ஜெயித்தார்.

  'உங்களில் ஒருவன் நான்' என்று பத்திரிகைகளை சொல்லவைத்தால் போதும். கெர்ரி இதுவரை அதுபோன்ற தோற்றத்தைக் கொடுக்கவில்லை. இனிமேலாவது கொடுத்தால் அவர்தான் அடுத்த 'உலக நாயகர்'.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |