அக்டோபர் 14 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
வேர்கள்
முன்னுரை
கட்டுரை
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : வருகிறது உலக நாயகரின் தேர்தல்
  - பாஸ்டன் பாலாஜி
  | Printable version |

  2004-ஆம் வருடம் தேர்தலுக்கான வருடம். இந்தியா உட்பட எழுபத்தியிரண்டு நாடுகள் வாக்களிக்கும் ஆண்டு. முன்பே நிர்ணயிக்கப்பட்ட தலைவரை வழிமொழியும் ரஷியா, ஓரமாக அமைதியாக ஆஸ்திரேலியா, மாற்று தலைவர் எவரும் இல்லாத தெற்கு ஆப்பிரிக்கா, ஒலிம்பிக்ஸ் நடந்த க்ரீஸ், முஸ்லீம்கள் பெருவாரியான இந்தோனேஷியா, கலவர சூடான், தவிர ப்ரான்ஸ், ஜப்பான், மலேஷியா, போன்ற பல நாடுகளில் 'போடுங்கம்மா வோட்டு' என்னும் கோஷம் கேட்கும். ஆனால், ஐ.நா.வில் இருக்கும் எல்லா நாடுகளும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது அமெரிக்க ஜனாதிபதியின் தேர்தலைத்தான்.

  அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுக்கும் சேர்த்து இரண்டே இரண்டு பெரிய கட்சிகள்தான் கோலோச்சுகிறது. நகர்ப்புற மக்களின் பேராதரவைப் பெற்றது சுதந்திர (டெமொக்ராடிக்) கட்சி. பழம் பெருமை வாய்ந்த கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கிராமங்களின் செல்வாக்குள்ள குடியரசு (ரிபப்ளிகன்) கட்சி. இந்த இரு அணிகளுக்குமிடையே பெரிய வித்தியாசம் இல்லையே என்னும் விமர்சகர்களின் குறையை தீர்க்க நண்டு சிண்டுகளாக சில கட்சிகள் இருக்கிறது. இயற்கையை போற்றுவோம் என்னும் பச்சை (க்ரீன்) கட்சி, முற்போக்கு சிந்தனையை வலியுறுத்தும் தாராளவிரும்பிகளுக்கு ஜனநாயகக் கட்சி, பழங்கால நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களுக்கு என்று சில்லறை கட்சிகள் இருந்தாலும் அவர்களுக்கு அலைகடலென கூட்டமும் வாக்குகளும்சேர்வதில்லை.

  அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), கவர்னர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது. இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் -- ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.

  அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க 'எலெக்டோரல் காலேஜ்' என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 'மாகாண வோட்டுகள்' ஜனாதிபதியை தேர்வு செய்கிறது. எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற -- வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலி·போர்னியாவுக்கு 55.

  ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. போன 2000 தேர்தலில், ஐந்து லட்சம் அதிக வோட்டுகள் பெற்று பெரும்பான்மையான வாக்குகளை 'ஆல் கோர்' வாங்கி இருந்தும், தேவையான 'எலெக்டோரல் வோட்டுகளை'ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார். இதே மாதிரி, இம்முறை, கெர்ரி செய்து பழிக்குப் பழி தீர்க்கக் கூடும் என்று வல்லுனர்கள் சொல்லி வருகின்றனர்.

  'எலெக்டோரல் வோட்டுக'ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சியின் ஜான் கெர்ரிக்கும், குடியரசுக் கட்சியின் புஷ்ஷ¤க்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!

  இரு கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். ஒருவர் போர் வீரர். நாட்டிற்காக படையில் பணிபுரிந்தவர். கொண்ட கொள்கைக்காக, அந்த வியட்நாம் போரை, கடமையை முடித்தபிறகு எதிர்த்தவர். எதிரணி வேட்பாளரோ ப்ராக்ஸி 'உள்ளேன் ஐயா' போட்டுவிட்டு, குட்டிச்சுவரில் உட்கார்ந்து கொண்டு திருட்டு தம் அடித்துக் கொண்டு, அப்பாவின் செல்வசெழிப்பில் உல்லாசபுரியில் திரிந்தவர். முதலாமவர் கல்லூரியிலும் நன்றாகப் படித்து, கூடவே ஹாக்கி, கால்பந்து என்று விளையாட்டிலும் ஜொலித்தவர். எதிரணியில் இருப்பவர்களோ, வம்புச்சண்டைக்கு போகிறவர்கள், பெட்ரோல் வெறி பிடித்தவர்கள், இதய அறுவை சிகிச்சைகள், ஆன்ஜியோகிராம், பேஸ்மேக்கர் நிறைந்த நோயாளி தோற்றம்.

  அமெரிக்காவின் ஜனாதிபதிக்குப் போட்டியிடுபவர் ஜான் கெர்ரி. இவருக்குத் துணையாக ஜான் எட்வர்ட்ஸ். எதிரணியில் ஆளுங்கட்சியான புஷ் + சேனி கூட்டணி.

  O


  Kerry'நான் வியட்நாம் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, ஜான் எட்வர்ஸ் டயாபரைக் கூட விட்டிருக்க மாட்டான்!'

  -- மேற்கண்ட பொன்மொழியை சொன்னது எதிர் கட்சிகள் அல்ல. சுதந்திர கட்சியின் துணை-ஜனாதிபதி வேட்பாளராக எட்வர்ட்ஸை தேர்ந்தெடுப்பதற்கு முன் ஜான் கெர்ரி பேசியது.

  அதற்கு பழிவாங்குவதற்காகவோ என்னவோ... தெரியவில்லை. கெர்ரியை சகட்டு மேனிக்கு வம்பிழுக்கும் டிக் சேனியையும் இன்ன பிற குடியரசு கட்சித்தலைவர்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார் ஜான் எட்வர்ட்ஸ். அவருக்கு இது ஒரு அவசியமான ஆனால் முக்கியமில்லாத தேர்தல். அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு கிடைக்கும் நேரடிப் பயிற்சி.

  நான்கு வருடம் கழித்து நிகழப் போவதற்கு இப்பொழுது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார் எட்வர்ட்ஸ். ஹில்லரி க்ளிண்டனுக்கு இந்தத் தேர்தல்களில் நிறைய அனுபவமும், பெரிய படையும் உண்டு. எட்வர்ஸ் இந்த மாதிரி தேசிய அளவிலான பிரச்சாரங்களையும், தொண்டர் மேய்ப்பையும் செய்து அறியாதவர். இப்பொழுது அதிக பணம் செலவழிக்காமல், பெயரும் ரிப்பேர் ஆகாமல், பட்டி தொட்டியெங்கும் பெயரை பரப்பிக் கொண்டிருக்கிறார். நான்கு வருடம் மட்டுமே எம்.பி (senator)-யாக இருந்தவர், நாப்பத்தி நான்கு வருடம் அரசியலில் கலக்காமல் காசு மட்டுமே பார்க்கும் வக்கீலாக இருந்தவர், சில தேர்தல்களில் மட்டுமே வோட்டு போட வாக்குச்சாவடி பக்கம் எட்டிப்பார்ப்பவர், என்னும் அனுபவமின்மைப் பட்டியலை துடைத்தெறியும் வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்தி வருகிறார் எட்வர்ட்ஸ்.

  Edwardsகுழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பும், நேர்மறையான அணுகுமுறையும், பார்வையாளரை மயக்கும் பேச்சும் அவரை எளிதில் செனேட்டர் தேர்தலில் வெற்றிபெற வைத்தது. தனது பதினாறு வயது மகன் விபத்தில் இறந்தபின்புதான் அவருக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பதவியில் அமர்ந்து சமூகத்தின் மாற்றத்திற்கு வித்தாக இருக்கவேண்டும் என்பதற்காக வக்கீல் தொழிலில் சம்பாதித்த ஆறு மில்லியன் டாலரை கரைத்தவர். இப்பொழுதும் அதே போன்ற அமைதியான, விஷய அடர்த்தியும், கொள்கைப்பிடிப்பும் கொண்ட பேச்சுக்களே வோட்டுக்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறார். அதனால், டிக் சேனி போன்றோர் முன்னிறுத்தும் சேற்றை வாரி இறைக்கும் வார்த்தைஜாலங்களையும், மிரட்டும் அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி கொடுக்காத புத்தராக, செய்திகளை நிரப்பாமல், ஓரமாக நகர்வலம் செய்து கொண்டிருக்கிறார்.

  மஹாபாரதப் போரில் அர்ஜுனரும் கர்ணனும் சண்டை புரிகிறார்கள். கர்ணனின் தேர் தாழ்ந்தபொழுது அவனைக் காப்பாற்ற தேரோட்டி சல்லியன் உதவி புரிய இறங்கவில்லை. கர்ணனே இறங்கி தேரை நிலைப்படுத்தப் போகும்போது அர்ஜுனரின் அம்பு அவனை மாய்க்கிறது. சல்லியன் சிறப்பான தேரோட்டிதான்; பாண்டவர் பக்கம் சாயாதவர்தான்; சாமர்த்தியசாலிதான்; ஆனாலும், அப்பொழுது பயன்படவில்லை. அமெரிக்காவின் கர்ணன் -- கெர்ரிக்கு, எட்வர்ஸாவது, தரையில் இறங்கி, சாய்ந்து கொண்டிருக்கும் மதிப்பை நிலைநாட்டி, காப்பாற்றுவாரா? இல்லையென்றால், அஸ்வத்தாமனாக மைக்கேல் மூர், 'Wacko' என்னும் தலைப்பில் படமெடுக்க அடுத்த கதை கிடைக்கலாம்!

  பகுதி 2 >>

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |